2018 மேயில் பணவீக்கம்

தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் தொகுக்கப்படும் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் (2013=100) ஏற்பட்ட மாற்றங்களினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2018 ஏப்பிறலின் 1.6 சதவீதத்திலிருந்து 2018 மேயில் 2.1 சதவீதத்திற்கு அதிகரித்தது. 2018 மேயில் ஆண்டிற்கு ஆண்டு பணவீக்கத்தில் ஏற்பட்ட அதிகரிப்பிற்கு உணவல்லா வகையில் காணப்படும் விடயங்களின் மேல்நோக்கிய விலைத் திருத்தங்களே முக்கிய தூண்டுதலாக அமைந்தது. ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் ஏற்பட்ட மாற்றம் 2018 ஏப்பிலின் 6.1 சதவீதத்திலிருந்து 2018 மேயில் 5.7 சதவீதத்துக்கு வீழ்ச்சியடைந்தது. 
மாதாந்த மாற்றங்களைப் பரிசீலனையில் கொள்ளும் போது, தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் 2018 ஏப்பிறலின் 122.9 சுட்டெண் புள்ளிகளிலிருந்து 2018 மேயில் 124.3 சுட்டெண் புள்ளிகளுக்கு அதிகரித்தமைக்கு உணவல்லா விடயங்களில் குறிப்பாக, போக்குவரத்து (மேல்நோக்கிய எரிபொருள் விலைத் திருத்தங்கள்); மற்றும் வீடமைப்பு, நீர், மின்வலு, வாயு மற்றும் ஏனைய எரிபொருட்கள் (மண்ணெண்ணை, திரவப்பெற்றோலிய வாயு); மற்றும் நலத் துணை வகைகளில் ஏற்பட்ட விலை அதிகரிப்புக்களே பெருமளவிற்குக் காரணமாக இருந்தது. அதேவேளையில், விலை அதிகரிப்புக்கள் காய்கறிகள், உடன் மீன், பெரிய வெங்காயம், தேசிக்காய் மற்றும் உருளைக்கிழங்கு போன்ற உணவு வகையின் விடயங்களில் அவதானிக்கப்பட்டமைக்கு பருவகால காரணிகளே காரணமாகும். 
பொருளாதாரத்தின் அடிப்படைப் பணவீக்கத்தினைப் பிரதிபலிக்கின்ற தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மையப் பணவீக்கம் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2018 ஏப்பிறலின் 1.9 சதவீதத்திலிருந்து 2018 மேயில் 1.7 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. அதேவேளை, ஆண்டுச் சராசரி தேசிய நுகர்வேர் விலைச் சுட்டெண் மையப் பணவீக்கம் 2018 ஏப்பிறலின் 3.3 சதவீதத்திலிருந்து 2018 மேயில் 3.1 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது.

 

முழுவடிவம்

Published Date: 

Thursday, June 21, 2018