Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

வெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் - பெப்புருவரி 2017

2017இல் சுற்றுலா வருவாய்களில் ஏற்பட்ட மிதமான தன்மை மற்றும் தொழிலாளர் பணவனுப்பல்களில் காணப்பட்ட மிதமான வளர்ச்சி என்பனவற்றின் விளைவாக விரிவடைந்த வர்த்தகப் பற்றாக்குறையின் காரணமாக இலங்கையின் வெளிநாட்டுத் துறை தொடர்ந்தும் குறைவடைந்த நிலையில் காணப்பட்டது. ஏற்றுமதிகளில் ஏற்பட்ட வீழ்ச்சிக்கு மத்தியில் எரிபொருள் மற்றும் அரிசி என்பனவற்றின் உயர்ந்த இறக்குமதிகளின் முக்கிய காரணமாக பெப்புருவரியில் வர்த்தகப் பற்றாக்குறையில் கணிசமான விரிவொன்று அவதானிக்கப்பட்டது. ஓடுபாதையை செப்பனிடும் வேலைகளுக்காக பண்டாரநாயக்கா பன்னாட்டு வானூர்தி நிலையம் பகல் வேளையில் மூடப்பட்டிருந்தமையின் பகுதியளவு காரணமாக சுற்றுலா வருகைகளில் ஏற்பட்ட சிறிதளவு வீழ்ச்சி சுற்றுலாவிலிருந்தான வருகைகள் சிறிதளவில் வீழ்ச்சியடைய காரணமாயிற்று. பெப்புருவரியில் தொழிலாளர் பணவனுப்பல்களின் வளர்ச்சி எதிர்பார்க்கப்பட்ட மட்டத்திற்கும் கீழேயே காணப்பட்டது. மேலும், இம்மாத காலப்பகுதியில் அரச பிணையங்கள் சந்தையிலிருந்தான குறிப்பிடத்தக்க வெளிப்பாய்ச்சல்களின் காரணமாக நிதியியல் கணக்குகள் மோசமாகப் பாதிக்கப்பட்டன.

2017 ஏப்பிறல் பணவீக்கம

தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் தொகுக்கப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் (2013ஸ்ரீ100) ஏற்பட்ட மாற்றங்களினால் அளவிடப்பட்டவாறான பணவீக்கம் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2017 மாச்சில் 8.6 சதவீதத்திலிருந்து 2017 ஏப்பிறலில் 8.4 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. 2017 ஏப்பிறலின் ஆண்டிற்கு ஆண்டு பணவீக்கம் அதிகரித்தமைக்கு உணவு மற்றும் உணவல்லா வகை இரண்டும் முக்கிய பங்களித்தன.

ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் ஏற்பட்ட மாற்றம் 2017 மாச்சில் பதிவுசெய்யப்பட்ட 5.6 சதவீதத்திலிருந்து 2017 ஏப்பிறலில் 6.0 சதவீதத்திற்கு அதிகரித்தது.

இலங்கை மத்திய வங்கி, ஏ.எஸ். ஜயவர்த்தன அவர்களை கௌரவிக்கும் விதத்தில் “இலங்கையில் நிதியியல் பணிகளுக்கானதோர் வழிகாட்டி” என்ற நூலினை வெளியிட்டிருக்கின்றது

இலங்கையிலுள்ள நிதியியல் நிறுவனங்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வினை ஊட்டுவிப்பதற்காகவிசேடமாகத் தொகுக்கப்பட்ட “இலங்கையில் நிதியியல் பணிகளுக்கானதோர் வழிகாட்டி” என்ற புதியவெளியீடொன்றினை மத்திய வங்கி வெளியிட்டிருக்கிறது. இலங்கையில் அடிப்படை நிதியியல் பணிகள்தொடர்பில் பொதுமக்களுக்கு அறிவினை ஊட்டும் பொருட்டு, 1995 நவெம்பர் – 2004 யூன் வரை ஆளுநராகஇருந்த திரு. ஏ.எஸ். ஜயவர்த்தன அவர்கள் இந்நூலின் ஆசிரியரும் துணை ஆளுநருமான திரு. பி. சமரசிறிஅவர்களை இத்தகையதொரு நூலினைத் தொகுத்து வெளியிடுமாறு முன்மொழிந்து வழிகாட்டியமைக்கேற்ப,ஜயவர்த்தனை அவர்களை கௌரவித்து நன்றி தெரிவிக்கும் விதத்தில் நூலாசிரியரினால் 2002இல்முதற்றடவையாக இந்நூல் வெளியிடப்பட்டது. இவ்வெளியீடானது நிதியியல் நிறுவனங்களின் அடிப்படைத்தகவல்கள், அவற்றின் பணிகள், மத்திய வங்கியினால் உரிமம் வழங்கப்பட்ட பல்வேறு நிறுவனங்களின்பட்டியல்கள், ஒழுங்குவிதிகள் மற்றும் மேற்பார்வையின் தன்மை, நிதியியல் நிறுவனங்க;டான பொதுமக்களின்கொடுக்கல்வாங்கல்களினது பாதுகாப்பு என்பன போன்ற விடயங்களை உள்ளடக்கிய இவ்வெளியீடானது வாசகர்– சிநேகபூர்வ மொழி நடையில் வழங்கப்பட்டுள்ள வேளையில், அதன் மூலவடிவமும் அப்படியேபேணப்பட்டிருக்கிறது.

இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் அளவீடு – 2017 ஏப்பிறல்

தயாரிப்புத் துறை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் பருவகால மாதிரியினை பின் பற்றி ஏப்பிறல் மாதத்தில் 41.8 கொண்ட சுட்டெண்ணினை பதிவு செய்ததுடன், இது, மாச்சு மாதத்துடன் ஒப்பிடுகையில் 24.7 சுட்டெண் புள்ளிகளை கொண்ட ஒரு குறைவாகும். இது 2017 ஏப்பிறலில் தயாரிப்பு நடவடிக்கைகள் சுருக்கமடைந்தமையினை குறித்து காட்டியதுடன் 2017 மாச்சில் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்ணில் அவதானிக்கப்பட்ட குறிப்பிடத்தக்க அதிகரிப்பினை தொடர்ந்து உற்பத்தி மற்றும் புதிய கடட் ளைகள் துணைச்சுட்டெண்களில் ஏற்பட்ட குறைவே பெரிதும் காரணமாக அமைந்தன. மேலும், அளவீட்டு பதிலிறுப்பாளர்களினால் எடுத்துக்காட்டப்பட்டவாறு ஏப்பிறலின் புத்தாண்டு விடுமுறைகளும் தயாரிப்பு நடவடிக்கைகளின் இந்த பருவகால நடவடிக்கைகளில் காணப்பட்ட குறைவுக்கு பங்களிப்பு செய்தன. மேலும், கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்ணின் அனைத்து துணைச்சுட்டெண்களும் முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் குறைவடைந்து காணப்பட்டன. மேலும், நிரமப்லர் வழங்கல் நேர துணைச்சுட்டெண்ணினை தவிர கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்ணின் ஏனைய அனைத்து துணைச்சுட்டெண்களும் 2017 ஏப்பிறலில்  நடுநிலையான 50.0 அடிமட்டத்திற்கு கீழாக வீழ்ச்சியடைந்து காணப்பட்டன.

ஆளுநரின் அறிக்கை பற்றி தவறாக வழிநடத்தும் செய்தி அறிக்கைகளுக்கு இலங்கை மத்திய வங்கி விளக்கமளிக்கிறது

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் முனைவர் இந்திரஜித் குமாரசுவாமி அவர்கள் 2017 மே 09ஆம் திகதி நடைபெற்ற பத்திரிகை மாநாட்டில் வெளியிட்ட அறிக்கை தொடர்பில் பிழையாக வழிநடத்தும் செய்தி அறிக்கைகள் பற்றி மத்திய வங்கி, தங்களின் கவனத்தை ஈர்க்க விரும்புகிறது. இச்செய்தித்தாள் அறிக்கைகள் ஊழியர் சேம நிதியத் திணைக்களத்திற்குப் பொறுப்பான உதவி ஆளுநரும் அலுவலர்களும் ஒழுங்கீனமான கொடுக்கல்வாங்கல்களூடாக ஊழியர் சேம நிதியத்திற்கு இழப்புக்களை ஏற்படுத்திய அவர்களின் வகிபாகத்திற்காக மாற்றல் செய்யப்பட்டிருக்கின்றனர் என ஆளுநர் தெரிவித்ததாகக் குறிப்பிட்டு உண்மைக்குப் புறம்பான அறிக்கைகளை வெளியிட்டிருக்கின்றன.  

ஆகவே, இலங்கை மத்திய வங்கி, பிழையான செய்தி அறிக்கைகளில் உள்ளடக்கப்பட்டிருந்த பிழையான தகவல்களைத் தெளிவுபடுத்துவதற்காக பின்வரும் விடயங்களைத் தெளிவுபடுத்த விரும்புகின்றது. 

Monetary Policy Review - No. 3 of 2017

As expected, the Colombo Consumer Price Index (CCPI, 2013=100) based headline inflation, decelerated on a year-on-year basis to 6.9 per cent in April 2017 from 7.3 per cent in March 2017, and CCPI based core inflation also decelerated to 6.8 per cent in April 2017 from 7.3 per cent recorded in the previous month. It is expected that inflation based on the National Consumer Price Index (NCPI, 2013=100), which edged up in March 2017, will also display a similar decline in April 2017. Supported by monetary policy adjustments from end 2015, inflation is projected to decelerate gradually to the desired mid-single digit levels by end 2017, although there could be some monthly fluctuations due to short term supply side disruptions and the base effects of tax revisions in 2016. 

Pages

சந்தை அறிவிப்புகள்