Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

2018 சனவரியில் பணவீக்கம்

தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் தொகுக்கப்படும் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் (2013=100) ஏற்பட்ட மாற்றங்களினால் அளவிடப்பட்டவாறான பணவீக்கம் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 2017 திசெம்பரின் 7.3 சதவீதத்திலிருந்து 2018 சனவரியில் 5.4 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. இவ்வீழ்ச்சிக்கு, 2017 சனவரியில் நிலவிய உயர்ந்த தளமும் அதேபோன்று 2018 சனவரியில் உணவு விலைகளில் ஏற்பட்ட மாதாந்த வீழ்ச்சியும் காரணங்களாக அமைந்தன.

ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் ஏற்பட்ட மாற்றம் 2017 திசெம்பரின் 7.7 சதவீதத்திலிருந்து 2018 சனவரியில் 7.6 சதவீதத்துக்கு வீழ்ச்சியடைந்தது.

இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்(கொ.மு.சு) அளவீடு – 2018 சனவரி

தயாரிப்புத் துறை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் திசெம்பர் 59.1 சுட்டெண் புள்ளிகளிலிருந்து சனவரி மாதத்தில் 51.7 சுட்டெண் புள்ளிகளை பதிவு செய்தது. இது, 2017ம் வருட காலப்பகுதியில் இறுதி இரு மாதங்களிலும் அவதானிக்கப்பட்ட பருவகால உயர்வுக்கு பின்னர் தயாரிப்பு நடவடிக்கைகளானது 2017 திசெம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் சனவரி மாதத்தில் ஒரு குறைவான வீதத்தில் வளர்ச்சியடைந்தமையினை குறித்துக்காட்டுகின்றது. இது பிரதானமாக உற்பத்தி மற்றும் புதிய கட்டளைகள் துணைச்சுட்டெண்களினால் உந்தப்பட்டது. மேலும், 2017 திசெம்பருடன் ஒப்பிடுகையில் தொழில்நிலை துணைச்சுட்டெண்ணும் மாதகாலப்பகுதியில் மெதுவடைந்திருந்த வேளையில், கொள்வனவுகளின் இருப்பு துணைச்சுட்டெண் மாதகாலப்பகுதியில் சுருக்கமடைந்திருந்தது. இவ்வேளையில், நிரம்பலர் வழங்கல் நேர துணைச்சுட்டெண் முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் ஒரு குறைவான வீதத்தில் நீட்சியடைந்தது. ஒட்டுமொத்தமாக, கொ.மு.சுட்டெண்ணின் கொள்வனவுகளின் இருப்பு துணைச்சுட்டெண் தவிர அனைத்து துணைச்சுட்டெண்களும் நடுநிலையான 50.0 அடிமட்டத்திற்கு மேலான பெறுமானங்களை சனவரி மாதத்தில் பதிவு செய்து ஒரு ஒட்டுமொத்த விரிவாக்கத்தினை காட்டியது.

முதனிலை வணிகர் தொடர்பான ஒழுங்குமுறைப்படுத்தல் நடவடிக்கை - பான் ஏசியா பாங்கிங் கோப்பிரேசன் பிஎல்சி

இலங்கை மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்படும் விசாரணைகளைத் தொடரும் நோக்குடன், பதிவுசெய்யப்பட்ட பங்குகள் மற்றும் பிணையங்கள் கட்டளைச் சட்டம் மற்றும் உள்நாட்டு திறைசேரி உண்டியலகள் கட்டளைச் சட்டம் என்பவற்றின் கீழ் செய்யப்ட்ட ஒழுங்குவிதிகளின் நியதிகளுக்கமைவாக செயற்பட்டு 2018 பெப்புருவரி 14ஆம் திகதியன்று இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது பான் ஏசியா பாங்கிங் கோப்பிரேசன் பிஎல்சியால் மேற்கொள்ளப்படும் முதனிலை வணிகர் வியாபாரம் மற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்வதிலிருந்தான இடைநிறுத்தலினை 2018 பெப்புருவரி 15ஆம் திகதி மு.ப. 10.00 மணியிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் ஆறு மாத காலப்பகுதிக்கு நீடிப்பதற்கு தீர்மானித்திருக்கிறது.

நாணயக் கொள்கை மீளாய்வு - இல.1 - 2018

உள்நாட்டு மற்றும் பன்னாட்டுப் பேரண்டப் பொருளாதாரச் சூழலின் அண்மைக் கால அபிவிருத்திகளைக் கருத்திற்கொண்டு நாணயச் சபை 2018 பெப்புருவரி 14இல் நடத்தப்பட்ட அதன் கூட்டத்தில் தற்போதைய நாணயக் கொள்கை நிலைப்பாடு பொருத்தமானதெனவும் இலங்கை மத்திய வங்கியின் கொள்கை வட்டி வீதங்களை அவற்றின் தற்போதைய மட்டங்களில் பேணுவதெனவும் தீர்மானித்தது.  

நடுத்தர காலத்தில் பணவீக்கத்தினை நடு ஒற்றை இலக்க மட்டங்களில் பேணுதல் மற்றும் அதன் மூலம் நிலைத்துநிற்கும் வளர்ச்சிப் பாதையொன்றிற்கு வசதிப்படுத்துதல் போன்ற குறிக்கோளுடன் இசைந்துசெல்லும் வகையில் நாணயச் சபையின் தீர்மானம் அமைந்துள்ளது. நாணயக் கொள்கை நிலைப்பாட்டிற்கு பக்கபலமாக அமைந்த நியாயங்கள் கீழே தரப்படுகின்றன.   

அரச படுகடனைப் பதிவுசெய்வது தொடர்பாக அண்மையில் வெளிவந்த ஊடக அறிக்கைகளுக்கான தெளிவுபடுத்தல்

அரச படுகடனைப் பதிவு செய்வது தொடர்பிலும் கணக்குகளைப் பேணுவது தொடர்பிலும் 2018 பெப்புருவரி 08ஆம் திகதி வெளியிடப்பட்ட ஊடக அறிக்கை பற்றி இலங்கை மத்திய வங்கியின் கவனம் ஈர்க்கப்பட்டிருக்கிறது.

Pages

செய்தி வெளியீடுகள்

சந்தை அறிவிப்புகள்