தயாரிப்புத் துறை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண், 2018 ஓகத்தில் பதிவு செய்யப்பட்ட 58.2 சுட்டெண் புள்ளிகளிலிருந்து 2018 செத்தெம்பரில் 54.1 சுட்டெண் புள்ளிகளுக்கு குறைவடைந்திருந்தது. செத்தெம்பரில் தயாரிப்பு நடவடிக்கைகளில் அவதானிக்கப்பட்ட மெதுவடைதலுக்கு புதிய கட்டளைகள் மற்றும் தயாரிப்பில் விசேடமாக உணவு மற்றும் குடிபான உற்பத்திகளின் நடவடிக்கைகளில் ஏற்பட்ட மெதுவடைதலினால் பிரதானமாக தூண்டப்பட்டது. உள்நாட்டு நாணயத்தின் பெறுமதி தேய்வினூடாக இறக்குமதி செய்யப்படுகின்ற மூலப்பொருட்களின் அதிகரித்திருந்த உள்நாட்டு செலவினம் காரணமாக இக்காலப்பகுதியில் விற்பனை விலைகளை அதிகரிக்க நேரிட்டது என பதிலிறுப்பாளர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர். இது அவர்களுடைய பொருட்களுக்கான கேள்வியினை குறைத்ததுடன், இதன் விளைவாக புதிய கட்டளைகள் மற்றும் உற்பத்திகள் குறைவடைந்தன. எவ்வாறாகினும், பிரதானமாக ஏற்றுமதி சார்ந்த புடவைகள், அணியும் ஆடைகள், தோல் மற்றும் அதனுடன் சார்ந்த உற்பத்தி பொருட்களுக்கான புதிய கட்டளைகள் மற்றும் உற்பத்தி இக்காலப்பகுதியில் அதிகரித்திருந்தது. ஒட்டுமொத்த தொழில்நிலை மற்றும் கொள்வனவுகளின் இருப்பும் மெதுவடைந்திருந்தது. அதேவேளை, நீட்சியடைந்த நிரம்பலர் வழங்கல் நேரமானது வழக்கமாக பொருளாதாரத்தின் குறுகிய காலத்தில் நடவடிக்கைகளின் விரிவாக்கத்தின் துரித வளர்ச்சியை குறித்துக்காட்டுகின்றது. எவ்வாறாயினும், இச்சந்தர்ப்பத்தில், நீட்சியடைந்த நிரம்பலர் நேரமானது உற்பத்தியாளர்களின் உள்நாட்டு நாணய பெறுமதி தேய்வின் முன்னோக்கிய உறுதித்தன்மை எதிர்பார்க்கப்பட்டமை காரணமாக தாமாகவே உள்நாட்டு பொருட்களின் கிடைப்பனவு நேரத்தினை அதிகரித்தமையினால் ஏற்பட்டதாகும். ஆகையால், இது பொருளாதார நடவடிக்கைகளில் ஒரு விரிவாக்கத்தினை குறித்துக்காட்டவில்லை. ஒட்டுமொத்தமாக, கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்ணின் அனைத்து துணைச் சுட்டெண்களும் நடுநிலையான 50.0 எல்லைக்கு மேலான பெறுமானங்களை பதிவு செய்து ஒகத்துடன் ஒப்பிடுகையில் செத்தெம்பரில் மெதுவான வீதத்தில் விரிவடைந்தமையினைக் காண்பித்தது.
Monday, October 15, 2018