Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

2017 யூலையில் பணவீக்கம்

தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைகக் ளத்தினால் தொகுக்கப்படும் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் (2013=100) ஏற்பட்ட மாற்றங்களினால் அளவிடப்பட்டவாறான பணவீக்கம் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 2017 யூலையிலும் முன்னைய மாதத்தில் காணப்பட்ட அதே மட்டமான 6.3 சதவீதத்தில் மாறாது விளங்கியது. 2017 யூலையின் ஆண்டுக்கு ஆண்டு  பணவீக்கத்துக்கு உணவு மற்றும் உணவல்லா வகை இரண்டும் முக்கியமாக பங்களித்தன.

ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் ஏற்பட்ட மாற்றம் 2017 யூனின் 6.1 சதவீதத்திலிருந்து 2017 யூலையின் 6.2 சதவீதத்துக்கு சிறிதளவால் அதிகரித்தது.  

இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் அளவீடு – 2017 யூலை

தயாரிப்புத் துறை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் யூலை மாதத்தில் 54.3 சுட்டெண் புள்ளிகளை பதிவு செய்ததுடன் இது 2017 யூன் மாதத்துடன் ஒப்பிடும் போது 1.8 சுட்டெண் புள்ளிகளை கொண்ட ஒரு குறைவாகும். இது தயாரிப்பு நடவடிக்கைகள் 2017 யூன் மாதத்தில் ஒரு குறைவான வேகத்தில் விரிவடைந்தமையினை குறித்து காட்டுவதுடன், இது பிரதானமாக முன்னைய மாதத்தில் சேர்க்கப்பட்ட மேலதிக இருப்புகளின் பாவனைகளிலிருந்து தோற்றுவிக்கப்பட்ட கொள்வனவுகளின் இருப்பு துணைச்சுட்டெண்ணில் ஏற்பட்ட குறைவினாலும் அதிகளவான தொழிலாளர் சுழற்சிவீதத்தினை கணக்கில் கொள்ளும் போது திறனற்ற தொழிலாளர்களின் மாற்றீடுகளில் காணப்பட்ட சிக்கல் தன்மையின் காரணமாக தொழிலாளர் துணைச்சுட்டெண்ணில் ஏற்பட்ட குறைவினாலும் உந்தப்பட்டது. மாதகாலப்பகுதியில் புதிய கடட் ளைகள் மற்றும் நிரம்பலர் வழங்கல் நேர துணைச்சுட்டெண்கள் மெதுவடைந்து காணப்பட்ட வேளையில், உற்பத்தி துணைச்சுட்டெண் அதே அளவில் காணப்பட்டது.

தேசிய கொடுப்பனவுத் தளம் தொடர்பான இலங்கை மத்திய வங்கியின் பார்வைகள்

'டோடல் பே மற்றும் ஐசிரிஏ" தொடர்பில் சுற்றோட்டத்தில் விடப்பட்ட செய்திக் கடடு;ரைகளுக்கு பதிலிறுத்தும் விதத்தில், தேசிய கொடுப்பனவுத் தளம் மறுசீரமைப்பது தொடர்பிலான தற்போதைய நிலைமைகளின் முழுமையான விளக்கத்தினை வழங்கும் நோக்குடன் நிகழ்வுகளின் உண்மைத் தன்மையினை வழங்குவதற்கும் பொதுமக்களை தெளிவுபடுத்தவதற்கு இலங்கை மத்திய வங்கி விரும்புகின்றது.  

முதனிலை வணிகர் தொடர்பான ஒழுங்குபடுத்தல் நடவடிக்கை - பான் ஏசியா பாங்கிங் கோப்பிரேசன் பிஎல்சி

பதிவுசெய்யப்பட்ட பங்குகள் மற்றும் பிணையங்கள் கடட்ளைச்சட்டம் மற்றும் உள்நாட்டு திறைசேரி உண்டியல் கடட் ளைச் சட்டம் என்பனவற்றின் கீழ் செய்யப்பட்ட நியதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கிணங்க, 2017 ஓகத்து 14ஆம் திகதியன்று இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை, 2017 ஓகத்து 15ஆம் திகதி மு.ப. 10.00 மணியிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் பான் ஏசியா பாங்கிங் கேப்பிரசேன் பிஎல்சி முதனிலை வணிகர் நடவடிக்கைகளை மேற்கொள்வதிலிருந்து ஆறு மாத காலப்பகுதிக்கு இடைநிறுத்துவதெனத் தீர்மானித்திருக்கிறது. 

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கடன்பெறுநர்களுக்கு வழங்கப்பட்ட கொடுகடன் தொடர்பிலான சலுகைகள்

அண்மைய வெள்ளம், மோசமான வானிலை நிலைமைகள் மற்றும் அதனுடன் இணைந்த சூழ்நிலைகளினால் பாதிக்கப்பட்ட கடன்பெறுநர்கள் அவர்களின் வியாபாரங்களை மீளத்தொடங்குவதையும் அவர்களின் வழமையான நடவடிக்கைகளுக்குத் திரும்புவதையும் வசதிப்படுத்தும் நோக்குடன், உரிமம் பெற்ற வங்கிகள் அவற்றின் அத்தகைய பாதிக்கப்பட்ட கடன்பெறுநர்களுக்குச் சலுகைகளை வழங்குவதற்கு இலங்கை மத்திய வங்கி அனுமதித்துள்ளது. 

இதன்படி, உரிமம் பெற்ற வங்கிகள்;

  • அத்தகைய கடன்பெறுநர்களின் 25 மே 2017 இல் உள்ளவாறான அனைத்துச் செயற்படும் கொடுகடன் வசதிகளின் மீள்செலுத்துகை தொடர்பில் 3 மாதங்கள் வரையான சலுகைக் காலத்தை வழங்கவும்
  • இக்காலப்பகுதிக்கான தண்ட வட்டியை விலக்கவும் முடியும் 

இலங்கை மத்திய வங்கியினால் பெற்றுக்கொள்ளப்பட்ட தகவலின் அடிப்படையில், அண்மைய வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பல கடன்பெறுநர்கள் இச்சலுகைத் திட்டம் பற்றி அறிந்திருக்கவில்லை என்பதோடு இச்சலுகைகளைப் பெற்றிருக்கவுமில்லை. இதன்படி, அத்தகைய கடன்பெறுநர்கள் இது தொடர்பில் தமது வங்கிக் கிளைகளைத் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இலங்கையின் நிதியியல் உளவறிதல் பிரிவு, பூட்டான் இராச்சியத்தின் நிதியியல் உளவறிதல் பிரிவு மற்றும் சீனாவின் பணம் தூயதாகக்லைத் தடுப்பதற்கான கண்காணிப்பு மற்றும் பகுப்பாய்வு நிலையம் போன்றவற்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களைச் செய்திருக்கிறது

இலங்கையின் நிதியியல் உளவறிதல் பிரிவு, பணம் தூயதாக்கல் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியிடலுடன் சம்பந்தப்பட்டவர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களுக்கெதிரான புலனாய்வுகளையும் வழங்குகள் தொடர்வதற்கான நடவடிக்கைளையும் வசதிப்படுத்தி நிதியியல் தகவல்களைப் பகிர்நதுகொள்ளும் பொருட்டு 2017 யூலை 17 - 21 காலப்பகுதியில் கொழும்பில் நடைபெற்ற பணம் தூயதாக்கல் மீதான ஆசிய பசுபிக் குழுமத்தின் 20 ஆவது ஆண்டுக் கூட்டத்தில் பூட்டான் இராச்சியத்தின் நிதியியல் உளவறிதல் பிரிவு மற்றும் சனீhவின் பணம் தூயதாகக்லைத் தடுப்பதற்கான கணக்hணிப்பு மற்றும் பகுப்பாய்வு நிலையம் போன்றவற்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களைச் செய்திருக்கிறது.  

Pages

சந்தை அறிவிப்புகள்