வழிகாட்டல் 2019: 2019 இற்கும் அதற்கு அப்பாலுக்குமான நாணய மற்றும் நிதியியல் துறைக் கொள்கைகள்

எமது கொள்கை நிலையினை விளக்குவதற்கும் 2018ஆம் ஆண்டின் பொருளாதாரம் தொடர்பான எமது மதிப்பீடுகளை வழங்குவதற்கும் நான் இவ்வுரையினை தொடங்குகின்றேன். 2018இல் இலங்கையின் பொருளாதாரம் உலகளாவிய பொருளாதாரம், நிதியியல் மற்றும் வெளிநாட்டுத் துறையினை மோசமாகப் பாதித்த புவியியல்சார் அரசியல் அபிவிருத்திகள் என்பனவற்றிலிருந்து முக்கியமாகத் தோன்றிய அதிகளவான சவால்களையும் எதிர்நோக்கியது.பல உள்நாட்டுச் சவால்களும் காணப்பட்டன.நிச்சயமற்ற அரசியல் நிலைமைகள் குறிப்பாக, ஆண்டின் இறுதிக் காலாண்டுப் பகுதியில் ஒட்டுமொத்த பேரண்டப் பொருளாதார உறுதிப்பாட்டிற்கான சவால்களை அதிகரித்தன. 2017இன் குறைவடைந்த வளர்ச்சியைத் தொடர்ந்து 2018இலும் குறைவான பொருளாதார வளர்ச்சி தொடர்ந்தது. சாதகமான வானிலை நிலைமைகள் வேளாண்மைத் துறையின் மீளெழுச்சிக்கு ஆதரவளித்த வேளையில் பணிகள் நடவடிக்கைகளின் விரிவாக்கம் பரந்த அடிப்படையினைக் கொண்டிருந்தது. 

எனினும், 2018இல் கைத்தொழில் நடவடிக்கைகள் மெதுவடைந்தமைக்கு கட்டடவாக்கத் துறையின் மெதுவான போக்கே முக்கிய காரணமாகும். உணவு விலைகளும் நிருவாக விலைச் சீர்திருத்தங்களும் தளம்பலுற்றமையின் காரணமாக நுகர்வோர் விலைகள் தற்காலிகமாக உயர்ந்தும் தாழ்ந்தும் காணப்பட்ட போதும் 2018இல் நுகர்வோர் விலைப் பணவீக்கம் தொடர்ந்தும் குறைவாகவே காணப்பட்டது. கடந்த இரு ஆண்டுகளில் மத்திய வங்கியினால் பின்பற்றப்பட்ட இறுக்கமான நாணயக் கொள்கைக்குப் பதிலிறுத்தும் விதத்தில் நாணய மற்றும் கொடுகடன் வளர்ச்சி 2016 மற்றும் 2017இல் அவதானிக்கப்பட்ட உயர்ந்த மட்டங்களிலிருந்து 2018இல் குறைவடைந்தது.உள்நாட்டுக் கொடுகடன் பாய்ச்சல்களில் ஏற்பட்ட போதுமான விரிவாக்கத்திற்கு இவ்வாண்டுப்பகுதியில் தனியார் துறையினரிடமிருந்தான கேள்வியே தூண்டுதலாக அமைந்தது. 

முழுவடிவம்

Published Date: 

Wednesday, January 2, 2019