இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் அளவீடு - 2018 திசெம்பர்

தயாரிப்பு நடவடிக்கைகள் நவெம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் திசெம்பர் மாதத்தில் ஒரு மெதுவான வீதத்தில் அதிகரித்ததுடன், இதற்கு விசேடமாக புடவைகள், அணியும் ஆடைகள், தோல் மற்றும் அதனுடன் சார்ந்த நடவடிக்கைகளின் தொழில்நிலை மற்றும் உற்பத்தியில் ஏற்பட்ட மெதுவடைதலினால் பிரதானமாக உந்தப்பட்டது. சில தொழிலாளர்கள் சிறப்பான ஊதியத்தைப் பெற்றுக்கொள்வதற்காக பருவகால தொழில்களை நோக்கிச் சென்றிருந்த காரணத்தினால் தொழில்நிலையில் ஒரு குறிப்பிடத்தக்களவு சரிவு உணரப்பட்டது. இது குறைவடைந்திருந்த உற்பத்தியினை பகுதியளவில் பாதித்திருந்தது. எவ்வாறாயினும், உணவு மற்றும் குடிபான உற்பத்திகளின் நடவடிக்கையில் தொடர்ச்சியான பண்டிகைப் பருவகாலக் கேள்வியின் பிரதானமான உந்தலினால் புதிய கட்டளைகள் அதிகரித்திருந்தது.

இவ்வேளையில் வரவிருக்கின்ற சீனப் புத்தாண்டு பண்டிகை காரணமாக வழங்கல் இடையூறுகளினைக் கருத்திற்கொண்டு எதிர்காலத் தேவைப்பாடுகளைப் பூர்த்திசெய்யும் நோக்கத்திற்காக இருப்புக்களைச் சேகரித்தமையினால் கொள்வனவுகளின் இருப்பு ஒரு அதிகரிப்பைக் காண்பித்தது. இந்த வரிசையில் நிரம்பலர் வழங்கல் நேரமும் நீட்சியடைந்திருந்தது.

தொழில்நிலை தவிர்ந்த தயாரிப்பு கொ.மு.சுட்டெண்ணின் அனைத்து துணைச் சுட்டெண்களும் நடுநிலையான 50.0 இற்கு மேலான பெறுமதியினைக் காண்பித்ததுடன் நவெம்பர் 2018 உடன் ஒப்பிடுகையில் திசெம்பரில் ஒரு மெதுவான வீதத்தில் ஒரு ஒட்டுமொத்த விரிவாக்கத்தினைக் காண்பித்தது.

 

முழுவடிவம்

Published Date: 

Wednesday, January 16, 2019