தயாரிப்பு துறை கொ.மு.சுவின் அனைத்து துணைச்சுட்டெண்களும் செத்தெம்பருடன் ஒப்பிடுகையில் ஒத்தோபரில் நடுநிலையான 50.0இற்கு மேலான பெறுமதியை பதிவு செய்து ஒட்டுமொத்த விரிவாக்கத்தினை காண்பித்தது. ஒத்தோபரில் தயாரிப்பு நடவடிக்கைகளில் அவதானிக்கப்பட்ட மேம்பாடானது பிரதானமாக புதிய கட்டளைகள் மற்றும் உற்பத்திகளிலான மேம்பாடொன்றினால்உந்தப்பட்டது. இதற்கு, விசேடமாக உணவு மற்றும் குடிபான தயாரிப்பு நடவடிக்கைகளில் பருவகால கேள்வி மீதான சாதகமான தோற்றப்பாடு செல்வாக்கு செலுத்தியிருந்தது. பருவகால போக்குடன் உணவு மற்றும் குடிபான தயாரிப்பு நடவடிக்கைகளில் தொழில்நிலையானது அதிகரித்திருந்த போதிலும், ஒட்டுமொத்த தொழில்நிலையானது மெதுவடைந்திருந்தது. இதற்கு,புடவைகள், அணியும் ஆடைகள், தோல் மற்றும் அதனுடன் சார்ந்த தயாரிப்பு நடவடிக்கைகளுக்கு சந்தையிலிருந்து தொழிலாளர்களை தேர்வு செய்வதில் உள்ள சிக்கல்கள் பிரதானமாக சான்று கூறின.