இலங்கை சனநாயக சோசலிச குடியரசு ஐ.அ.டொலர் 2.0 பில்லியன் கொண்ட நாட்டிற்கான பன்னாட்டு முறிகளை வழங்குகிறது

இலங்கை மத்திய வங்கி, இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் (இலங்கை) சார்பில் 2019 யூன் 24ஆம் நாளன்று, புதிய வழங்கல்களான 5 ஆண்டு காலப்பகுதிக்கான ஐ.அ.டொலர் 500 மில்லியனையும் நீண்ட 10 ஆண்டு காலப்பகுதிக்கான ஐ.அ.டொலர் 1.5 பில்லியனையும் கொண்ட மூத்த பிணையிடப்படாத நிலையான வீதத்தினைக் கொண்ட முறிகளை ('முறிகள்") வெற்றிகரமாக விலையிட்டதன் மூலமும் முறையே 2024 யூன் 28ஆம் நாள் மற்றும் 2030 மாச்சு 28ஆம் நாள் முதிர்ச்சிகளுடன் வழங்கியதன் மூலமும் ஐ.அ.டொலர் முறிச் சந்தைக்கு இலங்கை திரும்பியது. முறிகள், மூடிஸ் இன்வெஸ்டர் சேர்விஸ், ஸ்டான்டட் அன்ட் புவர் மற்றும் பிட்ஜ் றேற்றிங்ஸ் என்பனவற்றினால் முறையே 'B2’, 'B'  மற்றும் 'B' இல் தரமிடப்பட்டுள்ளன.

இது, 2007 இற்குப் பின்னர் பன்னாட்டு முறிச் சந்தைகளில் இலங்கையின் பதின்நான்காவது ஐ.அ.டொலர் அடிப்படை அளவுக் குறியீட்டின் முன்வைப்பினைக் குறிப்பதுடன், இது, இவ்வாண்டின் இரண்டாவது கொடுக்கல்வாங்கலுமாகும். நீண்ட 10 ஆண்டுத் தொகுதியானது பன்னாட்டுச் சந்தையில் இதுவரை வழங்கப்பட்ட மிக நீண்ட காலப்பகுதியை குறிப்பதாகவும் பன்னாட்டு முதலீட்டாளர் சமூகம் இலங்கைக்கு தொடர்ச்சியாக அளித்துவரும் ஆதரவையும் நாட்டின் பொருளாதார அடிப்படைகள் மற்றும் நீண்டகால வளர்ச்சி வாய்ப்புக்கள் என்பனவற்றில் அவர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையினை வலியுறுத்துவதாகவும் காணப்படுகிறது.  அத்துடன் நீண்ட 10 ஆண்டுகாலத் தொகுதி இலங்கையின் எதிர்காலப் படுகடன் தீர்ப்பனவுக் கடப்பாடுகளுடனும் படுகடன் முகாமைத்துவ உபாயங்களுடனும் பெரும்பாலும் இசைந்து செல்லும் தன்மையொன்றினைக் கொண்டிருந்தது. பீஓசி இன்ரநஷனல், சிற்றிகுறூப், டியூச் வங்கி, எச்எஸ்பீசி, ஜே.பி. மோர்கன், எஸ்எம்பீசி நிக்கோ மற்றும் ஸ்டான்ட் சார்ட்டட் வங்கி என்பன வெற்றிகரமான கொடுக்கல்வாங்கல்களின் கூட்டு முதன்மை முகாமையாளர்களாகவும் ஏட்டுப் பதிவாளர்களாகவும் தொழிற்பட்டன.

தூண்டுதலளிக்கும் சந்தைப் பின்னணியினை பயன்படுத்திக்கொள்ளும் விதத்தில், இலங்கை 2019 யூன் 24ஆம் நாளன்று ஆசியாவின் காலைப்பொழுதில் கொடுக்கல்வாங்கல்கள் பற்றி அறிவித்தது. கூட்டாண்மையாளர்கள் புதிய 5 ஆண்டுகள் மற்றும் நீண்ட 10 ஆண்டுகளைக் கொண்ட தொகுதிகளில் முறையே 6.60 சதவீதம் மற்றும் 7.80 சதவீதங்களில் நியதிகளையும் ஆரம்ப விலை வழிகாட்டல்களையும் வழங்கினர். இக்கொடுக்கல்வாங்கல்கள் உயர்தரம் வாய்ந்த பரந்தளவிலான முதலீட்டாளர்களின் வலுவான ஈடுபாட்டினைக் காட்டியதுடன், இது, இறுதி விலை வழிகாட்டல்களை புதிய 5 ஆண்டுத் தொகுதிக்கு 6.40 சதவீதத்திற்கும் (+/-  5 அடிப்படைப் புள்ளிகள்) நீண்ட 10 ஆண்டுத் தொகுதியின் மீது 7.60 சதவீதத்திற்கும் (+/- 5 அடிப்படைப் புள்ளிகள்) இறுக்கமாக்க அனுமதித்தது. இறுதியாக முறிகள், நியூயோர்க் மணித்தியாலங்களின் போது புதிய 5 ஆண்டு மற்றும் நீண்ட 10 ஆண்டு தொகுதிகளுக்காக முறையே 6.35 சதவீதம் மற்றும் 7.55 சதவீத வீச்சுக்களுக்குள் இறுக்கமாக்கப்பட்டிருந்ததுடன் இரண்டு தொகுதிகளுக்குமான விலைகள் ஆரம்ப வழிகாட்டல்களிலிருந்து 25 அடிப்படைப் புள்ளிகளினால் இறுக்கமாக்கப்பட்டிருந்தமையினைப் பிரதிபலித்தன.

இறுதிக் கட்டளைப் பதிவேடுகள் ஐ.அ.டொலர் 1.8 பில்லியனுக்கு மேலாக அமைந்து 5 ஆண்டுத் தொகுதிக்கான 165 கணக்குகளிலும் ஐ.அ.டொலர் 4.4 பில்லியனுக்கு மேலாக அமைந்து நீண்ட 10 ஆண்டு தொகுதிக்கான 290 கணக்குகளிலும் பரந்து காணப்பட்டு ஐ.அ.டொலர் 6.2 பில்லியன் (மூன்று மடங்கிற்கு மேலாக உதவப்பட்டது) கொண்ட மொத்த உதவுதொகையினைப் பிரதிபலித்து இலங்கை மீதும் அதன் பொருளாதார வளர்ச்சி மீதான சாதகமான தோற்றப்பாட்டின் மீதும் அவர்கள் தொடர்ச்சியாக வைத்திருந்த நம்பிக்கையினைத் தெளிவாக பிரதிபலித்தது.

கட்டளைப் பதிவேடுகள் இரண்டு தொகுதிகளிலும் நன்கு பன்முகப்படுத்தப்பட்டு காணப்பட்டது. 5 ஆண்டுத் தொகுதியில் 30 சதவீதம் ஐக்கிய அமெரிக்காவிற்கும் 50 சதவீதம் ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவிற்கும் எஞ்சிய 20 சதவீதம் ஆசியாவிற்கும் ஒதுக்கப்பட்டுக் காணப்பட்டது. முதலீட்டாளர் வகையின்படி, 80 சதவீதத்தினை நிதி முகாமையாளர்களும் 9 சதவீதப் பங்கினை காப்புறுதி மற்றும் ஓய்வூதிய நிதியங்கள் மற்றும் கம்பனிகளும் 8 சதவீதத்தினை வங்கித் திறைசேரிகளும் 3 சதவீதத்தினை தனியார் வங்கிகள் மற்றும் ஏனைய முதலீட்டாளர்களும் பகிர்ந்து கொண்டனர். நீண்ட 10 ஆண்டு காலத்தொகுதிகள் 44 சதவீதம் ஐக்கிய அமெரிக்காவிற்கும் 40 சதவீதம் ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவிற்கும் எஞ்சிய 16 சதவீதம் ஆசியாவிற்கும் ஒதுக்கப்பட்டமையினைக் காட்டின. முதலீட்டாளர் வகைப்படி, 87 சதவீதமான பங்கினை நிதிய முகாமையாளர்களும் 6 சதவீதத்தினை காப்புறுதி மற்றும் ஓய்வூதிய நிதியங்கள் மற்றும் கம்பனிகளும் 5 சதவீதத்தினை வங்கித் திறைசேரிகளும் 2 சதவீதத்தினை தனியார் வங்கிகள் மற்றும் ஏனைய முதலீட்டாளர்களும் பகிர்ந்து கொண்டன.

குறிப்பு:
இப்பத்திரிகை வெளியீடு ஐக்கிய அமெரிக்காவில் விற்பனை செய்வதற்கான பிணையங்கள் தொடர்பிலான முன்வைப்பல்ல. இங்கே குறிப்பிடப்பட்ட பிணைகள் திருத்தப்பட்டவாறான, 1933ஆம் ஆண்டின் ஐக்கிய அமெரிக்கப் பிணையங்கள் சட்டம் '(பிணையங்கள் சட்டம்)" அல்லது ஐக்கிய அமெரிக்காவின் ஏதேனும் மாநில அரசின் பிணையங்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டிருக்கவில்லை என்பதுடன் பதிவு செய்யப்படவும் மாட்டாதென்பதுடன் பதிவின்றி அல்லது ஏற்புடைத்தான விதிவிலக்கல்களின்றி அல்லது கொடுக்கல்வாங்கலொன்றிற்குட்படாது பிணையங்கள் சட்டம் மற்றும் ஐக்கிய அமெரிக்காவின் ஏற்புடைத்தான மாநில பிணையங்கள் சட்டத்தின் கீழ் ஐக்கிய அமெரிக்காவில் முன்வைக்கப்படவோ அல்லது விற்கப்படவோ முடியாது. ஐக்கிய அமெரிக்காவில் பிணையங்கள் தொடர்பில் ஏதேனும் பகிரங்க வழங்கல்களை மேற்கொள்ள வேண்டுமாயின் வழங்குநரிடமிருந்து பெறப்பட வேண்டிய முன்விபரணங்களின் மூலமே மேற்கொள்ளப்பட வேண்டுமென்பதுடன் அது வழங்குநர் பற்றிய விபரமான  தகவல்களையும் கொண்டிருத்தல் வேண்டும். இப்பத்திரிகை வெளியீடு, சட்ட ரீதியற்றதாக இருக்கும் எந்தவொரு நியாயாதிக்கப் பகுதியிலும் அவற்றை வழங்குவதற்கோ அல்லது விற்பதற்கோ உரிய விதத்தில் விற்பதற்கான முன்வைப்பொன்றினையோ அல்லது பிணையங்களை வாங்குவதற்கானதொரு முன்வைப்பினையோ கொண்டிருக்கவில்லை. தரமிடலானது பிணையங்களை விற்பதற்கு, வாங்குவதற்கு அல்லது உடமையில் வைத்திருப்பதற்கானதொரு விதந்துரைப்பல்ல என்பதுடன் அது எந்தவொரு நேரத்திலும் தரமிடல் முகவரினால் இடைநிறுத்தப்படுவதற்கும் அல்லது குறைக்கப்படுவதற்கும் அல்லது புறக்கீடு செய்யப்படுவதற்கும் உட்பட்டதாகும்.

Published Date: 

Tuesday, June 25, 2019