2019 மேயில் தயாரிப்பு நடவடிக்கைகள் 50.7 சதவீதம் கொண்ட சுட்டெண் பெறுமதிக்கு மீட்சியடைந்தன. இது 2019 ஏப்பிறலுடன் ஒப்பிடுகையில் 9.7 சுட்டெண் புள்ளிகளைக் கொண்டதொரு அதிகரிப்பாகும். தயாரிப்பு கொள்வனவு முகாமைத்துவச் சுட்டெண்ணின் மீட்சிக்கு தயாரிப்பு மற்றும் புதிய கட்டளைகளில், குறிப்பாக, புடவைகளின் தயாரிப்பு, அணியும் ஆடைகள், தோல் மற்றும் அதனுடன் தொடர்பான உற்பத்திகள் என்பனவற்றின் உற்பத்திகளிலும் புதிய கட்டளைகளிலும் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க அதிகரிப்புக்களே முக்கிய காரணமாகும். உற்பத்தியில் ஏற்பட்ட அதிகரிப்பிற்கு, தொழிற்சாலைத் தொழிற்பாடுகளில் மேலதிக நேரங்களைப் பயன்படுத்தி குவிந்திருந்த கட்டளைகள் பூர்த்தி செய்யப்பட்டமையே காரணமாகும். குறிப்பாக, புடவை மற்றும் ஆடைகள் துறையிலுள்ள அநேக பதிலிறுப்பாளர்கள் இம்மாத காலப்பகுதியில் நிலுவையிலிருந்த கட்டளைகளை தீர்ப்பனவு செய்வதற்காக தாம் வார நாட்களிலும் அதேபோன்று வார இறுதியிலும் மேலதிக மணித்தியாலங்கள் வேலை செய்ய வேண்டியிருந்தது என்பதனை எடுத்துக்காட்டியிருக்கிறார்கள்.
Friday, June 14, 2019