Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

இலங்கை மத்திய வங்கி விசேடத்துவம் மிக்க டிஜிட்டலுக்கான சனாதிபதி விருதினைப் பெற்றுக் கொள்கிறது

2019 யூன் 11ஆம் நாளன்று தாமரைத் தடாகத் திரையரங்கில் நடைபெற்ற சனாதிபதி விருது வழங்கும் நிகழ்வில் மேதகு சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் விசேடத்துவம் மிக்க டிஜிட்டலுக்கான சனாதிபதி விருது இலங்கை மத்திய வங்கிக்கு வழங்கப்பட்டது. நாட்டில் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு வழியமைத்துக் கொடுத்த மாபெரும் பணியினை அங்கீகரிக்கும் விதத்தில் இலங்கை மத்திய வங்கிக்கு இது வழங்கப்பட்டிருக்கிறது. இந்நிகழ்வு இலங்கை ரெலிகொம் பிஎல்சி இனால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. 

முதனிலை வணிகர் தொடர்பான ஒழுங்குபடுத்தல் நடவடிக்கை - பான் ஏசியா பாங்கிங் கோப்பிரேசன் பிஎல்சி

பதிவுசெய்யப்பட்ட பங்குகள் மற்றும் பிணையங்கள் கட்டளைச் சட்டம் மற்றும் உள்நாட்டு திறைசேரி உண்டியல் கட்டளைச் சட்டம் என்பனவற்றின் கீழ் செய்யப்பட்ட ஒழுங்குமுறைப்படுத்தல்கள் அடிப்படையான செயற்பாட்டிற்கிணங்க, இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது, இலங்கை மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்படும் விசாரணைகளை தொடர்ந்து மேற்கொள்ளும் வகையில் 2019 பெப்புருவரி 15ஆம் திகதி மு.ப. 10 மணியிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் பான் ஏசியா பாங்கிங் கோப்பிரேசன் பிஎல்சி அதன் முதனிலை வணிகர் வியாபாரம் மற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான இடைநிறுத்தலை மேலும் ஆறு மாத காலப்பகுதிக்கு நீடிப்பதற்குத் தீர்மானித்திருக்கிறது.

இவ்வொழுங்குப்படுத்தல் நடவடிக்கைகளானது அரச பிணையங்களுக்கான முதனிலை ஏலங்களுக்கான  பான் ஏசியா பாங்கிங் கோப்பிரேசன் பிஎல்சியின் அணுகுதலினை இடைநிறுத்துகின்றது என்பதனை இலங்கை மத்திய வங்கி வலியுறுத்த விரும்புகின்றது. இது பான் ஏசியா பாங்கிங் கோப்பிரேசன் பிஎல்சியின் ஏனைய நடவடிக்கைகள்ஃ பணிகளில் எந்தவித தாக்கத்தினையும் ஏற்படுத்தாது.

நட்வெல்த் செக்குறிட்டீஸ் லிமிடெட்டின் வியாபாரத்தினை இடைநிறுத்துதல்

நட்வெல்த் செக்குறிட்டீஸ் லிமிடெட் முதனிலை வணிகர்களுக்கு ஏற்புடைத்தான பணிப்புரைகளுக்கு இணங்கியொழுகுவதற்கு தொடர்ச்சியாக தவறியமையினை பரிசீலனையில் கொண்டு, மத்திய வங்கியின் நாணயச் சபை 2019.05.30 அன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில் பதிவுசெய்யப்பட்ட பங்குகள் மற்றும் பிணையங்கள் கட்டளைச் சட்டம் மற்றும் உள்நாட்டு திறைசேரி உண்டியல் கட்டளைச் சட்டம் என்பனவற்றின் கீழ் பதிவுசெய்யப்பட்ட நியதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கிணங்க செயற்படும் விதத்தில் 2019.05.31ஆம் திகதி பி.ப. 4.30 மணியிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் நட்வெல்த் செக்குறிட்டீஸ் லிமிடெட் அதன் வியாபாரத்தினைக் கொண்டு நடத்துவதிலிருந்தும் முதனிலை வணிகர் நடவடிக்கைகளை மேற்கொள்வதிலிருந்தும் ஆறு மாத காலப்பகுதிக்கு இடைநிறுத்துவதெனத் தீர்மானித்திருக்கிறது.

நாணயக் கொள்கை மீளாய்வு - இல.3 - 2019

மத்திய வங்கியின் நாணயச் சபையானது 2019 மே 30இல் நடைபெற்ற அதனது கூட்டத்தில் துணைநில் வைப்பு வசதி வீதம் மற்றும் துணைநில் கடன்வழங்கல் வீதம் என்பனவற்றை 50 அடிப்படைப் புள்ளிகளால் முறையே 7.50 சதவீதம் மற்றும் 8.50 சதவீதமாகக் குறைப்பதற்கு தீர்மானித்துள்ளது. பொருளாதாரமானது அதனது சாத்திய மட்டத்தினை அடைவதனை இயலுமைப்படுத்தும் விதத்தில் நடுத்தர கால பணவீக்கத்தினை நடு ஒற்றை மட்டங்களில் நிலைப்படுத்தும் பரந்த இலக்குடன் உள்நாட்டுப் பொருளாதாரம், நிதியியல் சந்தை மற்றும் உலகளாவிய பொருளாதாரம் போன்றவற்றின் தற்போதைய மற்றும் எதிர்பார்க்கப்பட்ட அபிவிருத்திகளின் ஒரு கவனமான பகுப்பாய்வுகளின் அடிப்படையில் சபையானது இந்தத் தீர்மானத்திற்கு வந்தது.

வெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் - 2019 மாச்சு

2019இன் முதற்காலாண்டுப்பகுதியில், ஏற்றுமதி வருவாய்கள் 5.6 சதவீதத்தினால் (ஆண்டிற்கு ஆண்டு) அதிகரித்த வேளையில் இறக்குமதிச் செலவினம் 19.3 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தமையின் காரணமாக வர்த்தகக் கணக்கின் பற்றாக்குறை, 2018இன் முதற்காலாண்டில் பதிவுசெய்யப்பட்ட ஐ.அ.டொலர் 2,982 மில்லியனிலிருந்து ஐ.அ.டொலர் 1,661 மில்லியனுக்கு சுருக்கமடைந்தது.

2019 மாச்சில், வர்த்தகக் கணக்கின் பற்றாக்குறை 2018 மாச்சின் ஐ.அ.டொலர் 871 மில்லியனுடன் ஒப்பிடுகையில் ஐ.அ.டொலர் 592 மில்லியனுக்குக் குறுக்கமடைந்தது. 

2019 மாச்சில் வர்த்தகப் பற்றாக்குறையின் கணிசமான குறைப்பிற்கு இறக்குமதிச் செலவினம் 12.6 சதவீதத்தினால் (ஆண்டிற்கு ஆண்டு) குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சியடைந்தமை காரணமாக அமைந்ததுடன் இதற்கு ஏற்றுமதி வருவாய்கள் 2.6 சதவீதத்தினால் அதிகரித்தமை (ஆண்டிற்கு ஆண்டு) மேலும் ஆதரவாக விளங்கியது.

2019 ஏப்பிறலில் பணவீக்கம் அதிகரித்தது

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (தேநுவிசு 2013=100)  ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம் 2019 மாச்சின் 2.9 சதவீதத்திலிருந்து 2019 ஏப்பிறலில் 3.6 சதவீதத்திற்கு அதிகரித்தமைக்கு உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டிலுமுள்ள விடயங்களின் விலைகளில் ஏற்பட்ட மாதாந்த அதிகரிப்புக்களே காரணமாகும். இதேவேளையில் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் உணவுப் பணவீக்கமானது 2019 ஏப்பிறலில் -1.2 சதவீதமாகக் காணப்பட்ட வேளையில் உணவல்லாப் பணவீக்கம் தொடர்ந்து நான்காவது மாதமாக அதிகரித்த போக்கினைக்காட்டி நடைமுறை மாதத்தில் 7.5 சதவீத அதிகரிப்பினைப் பதிவுசெய்தது.

Pages

சந்தை அறிவிப்புகள்