Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

உரிமம்பெற்ற வங்கிகளில் கம்பனி ஆளுகை நடைமுறைகளை வலுப்படுத்துதல்

இலங்கை மத்திய வங்கி, உரிமம்பெற்ற வங்கிகளுக்காக கம்பனி ஆளுகை தொடர்பில் 2024ஆம் ஆண்டின் 05ஆம் இலக்க வங்கித்தொழில் சட்டப் பணிப்புரைகளை 2024.09.30 அன்று வழங்கியமை பற்றிய அறிவித்தலை விடுப்பதற்கு விரும்புகின்றது. இப்பணிப்புரைகள், உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளினதும் உரிமம்பெற்ற சிறப்பியல்புவாய்ந்த வங்கிகளினதும் (இதனகத்துப் பின்னர் உரிமம்பெற்ற வங்கிகள் எனக் குறிப்பிடப்படும்) கம்பனி ஆளுகை செயன்முறைகளையும் நடைமுறைகளையும் வலுப்படுத்துகின்ற நோக்குடன் விடுக்கப்பட்டதுடன் இதன்மூலம் வங்கித்தொழில் துறையின் பாதுகாப்பினையும் ஆற்றல்வாய்ந்த தன்மையினையும் அத்துடன் ஒட்டுமொத்தமாக நிதியியல் முறைமையினையும் மேம்படுத்தும் பொருட்டு, பொறுப்புமிக்கதாகவும் பொறுப்புக்கூறும் விதத்திலும் வங்கித்தொழில் வியாபாரத்தினைக் கொண்டு நடத்துவதற்கு வசதியளிக்கப்படுகின்றது.

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட முதன்மைப் பணவீக்கம் 2024 செத்தெம்பரில் எதிர்மறையான புலத்திற்குச் சென்றுள்ளது

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு, 2021=100)  ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2015  தொடக்கம் முதன் முறையாக 2024 செத்தெம்பரில் 0.5 சதவீதம் கொண்ட பணச்சுருக்கத்தினைப் பதிவுசெய்து எதிர்மறையான புலத்தினுள் நுழைந்தது.

வெளிநாட்டுத்துறைச் செயலாற்றம் ஓகத்து 2024

2024 ஓகத்தில் முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் சுற்றுலாத் துறையிலிருந்தான வருவாய்களின் மெதுவடைதலிற்கு மத்தியில் தொழிலாளர் பணவனுப்பல்களின் வலுவான உட்பாய்ச்சல்கள் மற்றும் ஏற்றுமதிகளில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க அதிகரிப்பு என்பவற்றுடன் வெளிநாட்டுத் துறையின் நேர்மறையான உத்வேகம் தொடர்வடைந்தது.

கட்டடவாக்கத் தொழிற்துறைக்கான இலங்கைக் கொள்வனவு முகாமையாளர்களின் சுட்டெண் - 2024 ஓகத்து

கட்டடவாக்கத்திற்கான இலங்கை கொள்வனவு முகாமையாளர்களின் சுட்டெண் (கொ.மு.சு - கட்டடவாக்கம்), முன்னைய மாதத்தில் அடையப்பெற்ற குறிப்பிடத்தக்க உயர்வான மட்டத்தினைவிட 2024 ஓகத்தில் மெதுவான வேகத்தில் விரிவடைந்து, 51.4 சுட்டெண் பெறுமதியினை பதிவுசெய்தது. மேலும், அநேகமான ஏனைய சுட்டெண்களும் நடுநிலையான அடிப்படை அளவுமட்டத்தை அண்மித்து காணப்பட்டு, கட்டடவாக்கத் தொழிற்துறையின் தொழிற்பாடுகள் முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் பரந்தளவில் மாற்றமின்றிக் காணப்பட்டதை எடுத்துக்காட்டின.

‘இலங்கையின் பொருளாதார மற்றும் சமூகப் புள்ளிவிபரங்கள் - 2024’ வெளியீடு

‘இலங்கையின் பொருளாதார சமூகப் புள்ளிவிபரங்கள் - 2024’  என்ற இலங்கை மத்திய வங்கியின் சமூகப் பொருளாதார புள்ளிவிபரங்களின் வருடாந்த வெளியீடு தற்பொழுது பொதுமக்களுக்குக் கிடைக்கத்தக்கதாகவுள்ளது.

இலங்கை மத்திய வங்கி கொள்கை வட்டி வீதங்களை அவற்றின் தற்போதைய மட்டங்களில் பேணுகின்றது

இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபையானது 2024 செத்தெம்பர் 26ஆம் நாளன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில் மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் முறையே 8.25 சதவீதம் மற்றும் 9.25 சதவீதம் கொண்ட அவற்றின் தற்போதைய மட்டங்களில் பேணுவதற்குத் தீர்மானித்துள்ளது. 

Pages