கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள், 2024 யூலையில் தயாரிப்பு மற்றும் பணிகள் நடவடிக்கைகள் ஆகிய இரண்டிலும் விரிவடைதல்களை எடுத்துக்காட்டுகின்றன
தயாரிப்பிற்கான இலங்கைக் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (கொ.மு.சு – தயாரிப்பு), 2024 யூலையில் 59.5 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்து, தயாரிப்பு நடவடிக்கைகளில் தொடர்ச்சியான விரிவடைதலை எடுத்துக்காட்டியது. இம்மேம்பாட்டிற்கு அனைத்து துணைச் சுட்டெண்களும் சாதகமாகப் பங்களித்தன.
பணிகளுக்கான இலங்கைக் கொ.மு.சுட்டெண் (கொ.மு.சு – பணிகள்), 71.1 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்த வியாபார நடவடிக்கைச் சுட்டெண் மூலம் பிரதிபலிக்கப்பட்டவாறு 2024 யூலையில் பணிகள் நடவடிக்கைகளில் மேலும் விரிவடைதலை எடுத்துக்காட்டி ஆண்டின் இதுவரையிலும் அதிகூடிய பெறுமதியினைப் பதிவுசெய்தது.