இலங்கை மத்திய வங்கி அதன் தொடக்க சந்தைத் தொழிற்பாடுகள் அறிக்கையினை வெளியிடுகின்றது

நடைமுறையிலுள்ள நாணயக் கொள்கை நிலைக்கு அமைவாக மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்படுகின்ற நாணயத் தொழிற்பாடுகள் பற்றி ஆர்வலர்களுக்கிடையில் விழிப்புணர்வையும் அறிவையும் அதிகரிக்கும் நோக்குடன் இலங்கை மத்திய வங்கி அதன் தொடக்க சந்தைத் தொழிற்பாடுகள் அறிக்கையினை வெளியிட்டுள்ளது. நாணயக் கொள்கை நடைமுறைப்படுத்தல் செயன்முறையினை ஆக்கபூர்வமாக தொடர்பூட்டுவதனூடாக நெகிழ்வுமிக்க பணவீக்க இலக்குக் கட்டமைப்பின் கீழ் மத்திய வங்கியின் வெளிப்படைத் தன்மையினையும் பொறுப்புக்கூறலையும் மேம்படுத்துவதற்கான வினையூக்கியொன்றாக சந்தைத் தொழிற்பாடுகள் அறிக்கை அமையும். 

சந்தைத் தொழிற்பாடுகள் அறிக்கையானது மத்திய வங்கியின் நாணயக் கொள்கையின் நிலைக்கு அமைவாக பொருளாதாரத்தின் ஆர்வலர்களின் நடவடிக்கைகளுடனும் எதிர்பார்க்கைகளுடனும் அணிசேர்கின்ற விதத்தில் துணையளிக்கும் எனவும் மத்திய வங்கியின் உள்நாட்டு விலை உறுதிப்பாட்டுக் குறிக்கோள் தொடர்பில் உத்தேசிக்கப்பட்ட பெறுபேறுகளை அடைவதில் வசதியளிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. 

முழுவடிவம்

Published Date: 

Wednesday, July 31, 2024