தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் தொகுக்கப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் (2013=100) ஏற்பட்ட மாற்றங்களினால் அளவிடப்பட்டவாறான பணவீக்கம் ஆண்டிறகு; ஆண்டு அடிப்படையில் 2017 பெப்புருவரியில் 8.2 சதவீதத்திலிருந்து 2017 மாச்சில் 8.6 சதவீதத்திற்கு அதிகரித்தது. உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டும் 2017 மாச்சின் ஆண்டிற்கு ஆண்டு பணவீக்கத்திற்குப் பங்களித்துள்ளன. 2017 மாச்சில் ஆண்டிற்கு ஆண்டுப் பணவீக்கம் அதிகரித்தமைக்கு முன்னைய ஆண்டின் தொடர்பான காலப்பகுதியில் நிலவிய தாழ்நத் தளமே காரணமாக இருந்தது.
ஆண்டுச் சராசரி அடிப்படையொன்றின் மீது அளவிடப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் ஏற்பட்ட மாற்றம் 2017 பெப்புருவரியில் 5.1 சதவீதத்திலிருந்து 2017 மாச்சில் 5.6 சதவீதத்திற்கு அதிகரித்தது.
மாதாந்த மாற்றத்தினைக் கருத்திற்கொள்கையில், தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண் 2017 பெப்புருவரியில் 119.9 சுட்டெண் புள்ளியிலிருந்து 2017 மாச்சில் 119.5 சுட்டெண் புள்ளிக்கு வீழ்ச்சியடைந்தது. இம்மாதாந்த வீழ்ச்சிக்கு உணவு வகைகளிலான விடயங்களின் விலைகளில் ஏற்பட்ட வீழ்ச்சியே முக்கிய காரணமாகும். உணவு வகையில், இம்மாத காலப்பகுதியில் அரிசி, எலுமிச்சம்பழம், வாழைப்பழம், உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய், மைசூர் பருப்பு என்பனவற்றின் விலைகள் வீழ்ச்சியடைந்தன. அதேவேளை, தேங்காய், காய்கறிகள், பழவர்க்கங்கள், தேங்காய் எண்ணெய் மற்றும் சீனி என்பவற்றின் விலைகள் அதிகரித்தன. உணவல்லா வகைகளில், உடைகள், ஆடைகள் மற்றும் காலணி விடயங்களின் விலைகள், தளபாடங்கள், வீட்டு உபயோகச் சாதனங்கள், வழமையான வீட்டு அலகுகளின் பேணல் மற்றும் பல்வகைப் பொருட்கள் மற்றும் பணிகள் துணை வகைகளின் விலைகள் அதிகரித்தன. வெறியக் குடிவகை மற்றும் புகையிலைத் துணை வகையிலுள்ள குறிப்பிட்ட பொருட்களின் விலைகள் 2017 மாச்சில் வீழ்ச்சியடைந்தன. அதேவேளை, வீடமைப்பு, நீர், மின்வலு, வாயு மற்றும் ஏனைய எரிபொருட்கள்; நலன்; போக்குவரத்து; தொடர்பூட்டல் மற்றும் பொழுதுபோக்கு மற்றும் கலாச்சார துணைத் துறைகளின் விலைகள் இம்மாத காலப்பகுதியில் மாற்றமின்றிக் காணப்பட்டன.
பொருளாதாரத்தின் அடிப்படைப் பணவீக்கத்தினைப் பிரதிபலிக்கின்ற தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் மையப் பணவீக்கம் 2017 பெப்புருவரியில் 7.1 சதவீதத்திலிருந்து 2017 மாச்சில் 7.0 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. ஆண்டுச் சராசரி தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் மையப் பணவீக்கம் 2017 பெ;பபுருவரியில் 6.4 சதவீதத்திலிருந்து 2017 மாச்சில் 6.6 சதவீதத்திற்கு அதிகரித்தது.