Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

நாணயக் கொள்கை மீளாய்வு - 2016 திசெம்பர்

இலங்கை தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களத்தின் தற்காலிக மதிப்பீடுகளின்டி, 2016இன் மூன்றாம் காலாண்டுப்பகுதியில் இலங்கையின் பொருளாதாரம் முன்னைய ஆண்டின் தொடர்பான காலப்பகுதியின் 5.6 சதவீதம் கொண்ட வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில் 4.1 சதவீதத்தினால் வளர்ச்சியடைந்திருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. 2016இன் மூன்றாம் காலாண்டுப் பகுதியில் பணிகள் துறை 4.7 சதவீதத்தினால் வளர்ச்சியடைந்துள்ள வேளையில் கைத்தொழில் நடவடிக்கைகள் 6.8 சதவீதம் கொண்ட குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவுசெய்தன. எனினும் வேளாண்மையுடன் தொடர்பான நடவடிக்கைகள; தொடர்ந்து இரண்டாவது காலாண்டாக சுருக்கத்தினைப் பதிவு செய்து 1.9 சதவீதத்தினால் குறைவடைந்தமைக்கு 2016இன் மூன்றாம் காலாண்டில் நிலவிய மோசமாக வானிலை நிலமைகளின் தாக்கமே காரணமாகும். முன்னணிப் பொருளாதார குறிகாட்டிகளில் காணப்பட்ட சாதகமான அபிவிருத்திகள் அதே போன்று 2015இல் நான்காம் காலாண்டில் காணப்பட்ட தாழ்ந்ததளம் என்பன, மோசமான வானிலை நிலமைகள் மற்றும் உலகளாவிய பொருளாதாரத்தின் நிச்சயமற்ற தன்மை என்பனவற்றிறகு; மத்தியிலும் 2016இன் நான்காம் காலாண்டில் பொருளாதாரத்தின் மேல்நோக்கிய வளர்ச்சிக்கு வழிகாட்டின. 

2016 நவெம்பரில் பணவீக்கம்

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் தொகுக்கப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் (2013 = 100) ஏற்பட்ட மாற்றங்களினால் அளவிடப்பட்டவாறான பணவீக்கம் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2016 ஒத்தோபரின் 5.0 சதவீதத்திலிருந்து 2016 நவெம்பரில் 4.1 சதவீதத்திற்கு வீழச்சியடைந்தது. உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டும் 2016 நவெம்பரில்ஆண்டிற்கு ஆண்டு பணவீக்கத்திற்கு பங்களித்தன.

ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் ஏற்பட்ட மாற்றம் 2016 நவெம்பரில் மாற்றமின்றி கடந்த மாதத்தின் 4.0 சதவீதத்தில் காணப்பட்டது.  

இலங்கை கொள்வனவு முகாமையாளர் அளவீடு - 2016 நவெம்பர்

தயாரிப்புத் துறை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் 2016 நவெம்பரில் 58.4ஆக விளங்கி 2016 ஒத்தோபருடன் ஒப்பிடுகையில் 1.9 சுட்டெண் புள்ளிகள் அதிகரிப்பினைக் கொண்டிருந்தமையின் மூலம் தயாரிப்பு நடவடிக்கைகள் ஒத்தோபருடன் ஒப்பிடுகையில் நவெம்பரில் விரிவடைந்தமையினை எடுத்துக் காட்டியது. இதற்கு இம்மாதகாலப்பகுதியில் விரிவடைந்த தொழில்நிலை மற்றும் உற்பத்தித் துணைச் சுட்டெண்களில் ஏற்பட்ட உயர்ந்தளவு வேகமே முக்கிய காரணமாகும். இம்மாத காலப்பகுதியில் புதிய கட்டளைகள் துணைச்சுட்டெண்ணும் அதிகரித்தது. நவெம்பரில் கொள்வனவுகள் இருப்புத்துணைச் சுட்டெண் வீழ்ச்சியடைந்து வரவிருக்கும் பண்டிகைக்காக இருப்புக்கள் பயன்படுதத்ப்படுகின்றமையை எடுத்துக்காட்டிய வேளையில் நிரம்பலின் வழங்கல் நேரம் நீண்டுகாணப்பட்டது. ஒட்டுமொத்த தரவுப்புள்ளிகள் விரிவடைந்த விடத்து மற்றைய அனைத்துத் துணைச்சுட்டெண்களும் சமநிலையான 50.0 அடிமட்டத்திறகு; மேலேயே காணப்பட்டன. அடுத்த மூன்றுமாதங்களுக்கான நடடிக்கைகளுக்கான எதிர்பார்ப்புக்கள் முன்னேற்ற மொன்றினை எடுத்துக் காட்டின. 

இலங்கை மத்திய வங்கி - 9வது பன்னாட்டு ஆராய்ச்சி மாநாடு

இலங்கை மத்திய வங்கியின் 9ஆவது பன்னாட்டு ஆராய்ச்சி மாநாடு 2016 திசெம்பர் 2ஆம் நாளன்று இலங்கை மத்திய வங்கியின் ஜோன் எக்ஸ்ரர் பன்னாட்டு மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இம்மாநாடானது, சமகால தொனிப்பொருட்களின் மீதான ஆராய்ச்சிகளைத் தூண்டுவதனை நோக்கமாகக் கொண்டிருந்த வேளையில் மத்திய வங்கித்தொழில் மற்றும் பேரணட் பொருளாதார முகாமைத்துவம் என்பன தொடர்பான விடயஙக் ள் மீது மத்திய வங்கியின் ஆராய்ச்சியாளர்கள் நாணய அதிகாரிகள் பல்கலைக்கழகங்கள் மற்றும் ஏனைய ஆராய்ச்சி நிறுவனங்கள் அவற்றின் அண்மைக்கால கோட்பாட்டு ரீதியான அம்சங்களையும் அனுபரீதியான ஆய்வுகளையும் சமர்ப்பிப்பதற்கு ஒரு அரங்கினை உருவாக்கும் நோக்குடன் இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார ஆராய்ச்சித் திணைக்களத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டது. 2008இல் இது ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இப்பன்னாட்டு ஆராய்ச்சி மாநாடானது உலகமெங்குமிருந்து புலமையாளர்களை வெகுவாக கவர்ந்திருப்பதுடன் இதில் ஏராளமான மத்திய வங்கியாளர்கள், கல்விமான்கள் மற்றும் கொள்கைவகுப்போர் முக்கிய உரைகளையும் ஆற்றியிருக்கின்றனர்.

நாணயக் கொள்கை மீளாய்வு - 2016 நவெம்பர்

எதிர்பார்க்கப்பட்டவாறு, 2015 இறுதியிலிருந்து மத்திய வங்கியினால் பின்பற்றப்பட்டுவரும் நாணயக் கொள்கை வழிமுறைகளுக்கு பதிலிறுத்தும் விதத்தில் 2016 செத்தெம்பர் காலப்பகுதியில் வர்த்தக வங்கிகளினால் தனியார் துறைக்கு வழங்கப்பட்ட கொடுகடன் வளர்ச்சி குறிப்பிடத் தக்களவிற்கு வீழ்ச்சியடைந்தது. இதற்கமைய, வர்த்தக வங்கிகளினால் தனியார் துறைக்கு வழங்கப்பட்ட கொடுகடனின் ஆண்டிற்கு ஆண்டு வளர்ச்சி முன்னைய ஆண்டின் 27.3 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2016 செத்தெம்பரில் 25.6 சதவீதத்தினைப் பதிவு செய்தது. தனியார் துறைக்கு வழங்கப்பட்ட  கொடுகடனில் வீழ்ச்சி ஏற்பட்டபோதும் விரிந்த பணத்தின்  (M2b) வளர்ச்சி முன்னைய மாதத்தின் 17.3 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2016 செத்தெம்பரில் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில்; 18.4 சதவீதத்திற்கு விரிவடைந்தமைக்கு வர்த்தக வங்கிகளிலிருந்தான அரச துறையின் கடன்பாடுகள் இம்மாத காலப்பகுதியில் விரிவடைந்தமையே காரணமாகும். அதேநேரம், உள்நாட்டு பணச்சந்தையில் ரூபாய் திரவத்தன்மை நிலைமைகள் சமநிலையான மட்டமொன்றிற்கு திரும்பியதுடன், இது தற்போதைய மட்டங்களில் சந்தை வட்டி வீதங்கள் உறுதித்தன்மையினை அடைய உதவும்.

நுண்நிதியளிப்புத் தொழிலைக் கொண்டு நடாத்துகின்ற கம்பனிகளுக்கு உரிமம் வழங்குதல், ஒழுங்குபடுத்துதல் மற்றும் மேற்பார்வை செய்தல்

தற்பொழுது ஒழுங்குமுறைப்படுத்தப்படாதிருக்கும் நுண்நிதியளிப்பு நிறுவனங்களை உள்ளடக்கும் விதத்தில் ஒழுங்குமுறைப்படுத்தல் கட்டமைப்பொன்றினை வழங்கும் குறிக்கோளுடன் 2016ஆம் ஆண்டின் 6ஆம் இலக்க நுண்நிதியளிப்புச் சட்டம் இயற்றப்பட்டது. இச்சட்டத்தின் நோக்கம் குறைந்த வருமானம் பெறும் ஆட்களுக்கும் நுண்பாக தொழில்முயற்சிகளுக்கும் நிதியியல் பணிகள் வழங்கப்படுவதனை மேம்படுத்தல், நிதியியல் பணிகள் கிடைப்பதனை அதிகரித்தல், நுண்நிதியளிப்பு நிறுவனங்களின் ஆற்றல்வாய்ந்த தன்மையினையும் முறைமையினையும் வலுப்படுத்துதல், பரந்தளவு நிதியிடல் மூலங்களைப் பெற்றுக்கொள்ளும் விதத்தில் நுண்நிதியளிப்பு நிறுவனங்களுக்கு வசதியளித்தல், நுகர்வோர் பாதுகாப்பினை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாப்பானதும் உறுதியானதுமான நிதியியல் முறைமையினை மேம்படுத்துதல் என்பனவாகும்.

Pages

சந்தை அறிவிப்புகள்