2017இல் இலங்கையின் வெளிநாட்டுத் துறை மிதமான செயலாற்றமொன்றினை எடுத்துக்காட்டியது. அதிகரித்த இறக்குமதிச் செலவினம், ஏற்றுமதி வருவாய்களில் ஏற்பட்ட வீழ்ச்சி என்பனவற்றின் விளைவாக இம்மாத காலப்பகுதியில் வர்த்தகப் பற்றாக்குறை விரிவடைந்தது. எனினும், சுற்றுலாவிலிருந்தான வருவாய்களின் நியதிகளில் வெளிநாட்டு நாணயங்களின் பெறுகைகள் 2017 சனவரியில் ஒப்பீட்டு ரீதியில் உயர்ந்த வளர்ச்சியைப் பதிவுசெய்த வேளையில் தொழிலாளர் பணவனுப்பல்கள், ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் மிதமான வீதமொன்றால் வளர்ச்சியடைந்தன. அரச பிணையங்கள் சந்தையும; கொழும்பு பங்குப் பரிவர்த்தனையும; 2017 சனவரியில் தேறிய வெளிப்பாய்ச்சலைக் காட்டின.
Published Date:
Thursday, May 4, 2017