தயாரிப்புத் துறை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் திசெம்பர் 59.1 சுட்டெண் புள்ளிகளிலிருந்து சனவரி மாதத்தில் 51.7 சுட்டெண் புள்ளிகளை பதிவு செய்தது. இது, 2017ம் வருட காலப்பகுதியில் இறுதி இரு மாதங்களிலும் அவதானிக்கப்பட்ட பருவகால உயர்வுக்கு பின்னர் தயாரிப்பு நடவடிக்கைகளானது 2017 திசெம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் சனவரி மாதத்தில் ஒரு குறைவான வீதத்தில் வளர்ச்சியடைந்தமையினை குறித்துக்காட்டுகின்றது. இது பிரதானமாக உற்பத்தி மற்றும் புதிய கட்டளைகள் துணைச்சுட்டெண்களினால் உந்தப்பட்டது. மேலும், 2017 திசெம்பருடன் ஒப்பிடுகையில் தொழில்நிலை துணைச்சுட்டெண்ணும் மாதகாலப்பகுதியில் மெதுவடைந்திருந்த வேளையில், கொள்வனவுகளின் இருப்பு துணைச்சுட்டெண் மாதகாலப்பகுதியில் சுருக்கமடைந்திருந்தது. இவ்வேளையில், நிரம்பலர் வழங்கல் நேர துணைச்சுட்டெண் முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் ஒரு குறைவான வீதத்தில் நீட்சியடைந்தது. ஒட்டுமொத்தமாக, கொ.மு.சுட்டெண்ணின் கொள்வனவுகளின் இருப்பு துணைச்சுட்டெண் தவிர அனைத்து துணைச்சுட்டெண்களும் நடுநிலையான 50.0 அடிமட்டத்திற்கு மேலான பெறுமானங்களை சனவரி மாதத்தில் பதிவு செய்து ஒரு ஒட்டுமொத்த விரிவாக்கத்தினை காட்டியது.















