தயாரிப்புத் துறை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் முன்னைய மாதத்தில் அவதானிக்கப்பட்ட 57.6 சுட்டெண் புள்ளிகளிலிருந்து 2018 யூலையில் 57.2 சுட்டெண் புள்ளிகளுக்கு குறைவடைந்தது. தயாரிப்பு நடவடிக்கைகளில் அவதானிக்கப்பட்ட சிறிதளவான மெதுவடைதலானது, விசேடமாக உணவு மற்றும் குடிபானம் மற்றும் புடவை மற்றும் அணியும் ஆடைகள் துறையில் காணப்பட்ட அதிகளவிலான தொழிலாளர்களின் புரள்வு காரணமாக திறனற்ற தொழிலாளர்களின் பிரதியிடுதலில் காணப்பட்ட இடர்பாடுகளின் காரணமாக தொழில்நிலையின் மெதுவடைதலினால் உந்தப்பட்டது. மேலும், 2018 யூலையில் புதிய கட்டளைகள் சிறிதளவில் மெதுவடைந்திருந்தது. எவ்வாறாயினும், உற்பத்தி மற்றும் கொள்வனவுகளின் இருப்பு விசேடமாக இரசாயன மற்றும் மருந்தாக்கல் பொருட்களின் உற்பத்தியில் அடுத்த மூன்று மாத அளவில் எதிர்பார்க்கப்படுகின்ற சாதகமான தோற்றப்பாடு காரணமாக மேம்பாடொன்றினை காண்பித்தது. இவ் வேளையில், நீட்சியடைந்த நிரம்பலர் வழங்கல் நேரமானது வழக்கமாக பொருளாதாரத்தின் குறுகிய காலத்தில் நடவடிக்கைகளின் விரிவாக்கத்தின் துரித வளர்ச்சியை குறித்துக்காட்டுகின்றது. எவ்வாறாயினும், இந்த சூழ்நிலையில் நிரம்பலர் வழங்கல் நேரமானது உலக சந்தையில் மூலப்பொருட்களுக்கான தட்டுப்பாடு மற்றும் சாதகமற்ற காலநிலை நிலைமைகள் காரணமாக நீட்சியடைந்திருந்தது. ஆகையால், இது பொருளாதார நடவடிக்கைகளில் ஒரு விரிவாக்கத்தினை குறித்துக்காட்டவில்லை. ஒட்டுமொத்தமாக, கொ.மு.சுட்டெண்ணின் அனைத்து துணைச் சுட்டெண்களும் நடுநிலையான 50.0 அடிமட்டத்திற்கு மேலான பெறுமானங்களை யூலை 2018இல் பதிவு செய்ததுடன், ஒரு மெதுவான வீதத்தில் விரிவடைந்தமையினையும் காட்டியது. இதற்குமேலாக, நடவடிக்கைகளுக்கான எதிர்பார்ப்பு அடுத்த மூன்று மாதங்களுக்கான மேம்பாடு ஒன்றினை குறித்துக்காட்டியது.
Wednesday, August 15, 2018