இலங்கையின் வெளிநாட்டுத் துறை, 2018 யூலையில் மிதமான செயலாற்றமொன்றினைப் பதிவுசெய்தது. ஏற்றுமதி வருவாய்கள் மாதகாலத்தில் ஐ.அ.டொலர் 1 பில்லியனை விஞ்சியதற்கு மத்தியில் உயர் இறக்குமதிச் செலவினத்துடன் 2018 யூலையில் வர்த்தகப் பற்றாக்குறை (ஆண்டிற்கு ஆண்டு) தொடர்ந்தும் விரிவடைந்தது. சுற்றுலாத் துறையிலிருந்தான வருவாய்கள் மிதமான வளர்ச்சியொன்றினைப் பதிவுசெய்த அதேவேளை தொழிலாளர் பணவனுப்பல்கள் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் சிறிதளவால் மாதகாலப்பகுதியில் வீழ்ச்சியடைந்தது. நிதியியல் கணக்கு, யூலையில் மிதமான உட்பாய்ச்சலினை பதிவுசெய்த அதேவேளை, கடன் தீர்த்தல் தேவைப்பாடுகள் மற்றும் ஏனைய வெளிப்பாய்ச்சல்கள் என்பன 2018 யூலை இறுதியில் மொத்த அலுவல்சார் ஒதுக்குகள் ஐ.அ.டொலர் 8.4 பில்லியனுக்கு வீழ்ச்சியடைவதற்கு வழிவகுத்தன. வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையானது அரசாங்கப் பிணையங்கள் சந்தையிலிருந்து வெளிநாட்டு முதலீடுகளின் வெளிப்பாய்ச்சல் மற்றும் இறக்குமதிகளுக்காக அதிகரிக்கப்பட்ட வெளிநாட்டுச் செலாவணிக் கேள்வி என்பவற்றுடன் தொடர்ந்தும் அழுத்தத்தின் கீழ் காணப்பட்டதுடன் செலாவணி வீதத்தில் நாளுக்குள்ளான மிகைத் தளம்பலினைக் கட்டுப்படுத்துவதற்கு மத்திய வங்கியின் தலையீட்டினை அவசியப்படுத்தியது.
Monday, October 8, 2018