இலங்கை மத்திய வங்கியின் வருடாந்த வெளியீடான ''இலங்கையின் சமூக பொருளாதார தரவுகள் 2018" என்ற அதன் தரவு ஏட்டினைத் தற்பொழுது பொதுமக்களுக்குக் கிடைக்கத்தக்கதாகவுள்ளது. இத் தொடரில் இது 41 ஆவது தொகுதியாகும்.
தற்பொழுது இலகுவாக எடுத்துச் செல்லக்கூடிய இத் தொகுதி நாடு பற்றி சுயவிபரங்கள்; முக்கிய பொருளாதாரக் குறிகாட்டிகள்; நாட்டு ஒப்பீடுகள்; சமூகப் பொருளாதார நிலைமைகள்; மனித வளங்கள்; தேசிய கணக்குகள்; வேளாண்மை; கைத்தொழில்; பொருளாதார மற்றும் சமூக உட்கட்டமைப்பு; விலைகளும் கூலிகளும்; வெளிநாட்டு வர்த்தகம் மற்றும் சுற்றுலர் வெளிநாட்டு நிதி; அரசாங்க நிதி மற்றும் பண வங்கித்தொழில் மற்றும் நிதி தொடர்பான 14 தலைப்புகளின் கீழ் வகைப்படுத்தப்பட்ட தகவல்களை உள்ளடக்குகின்றது.
இத் தரவு ஏடானது தற்போது ஈடுபாடுமிக்க விடயங்களான பரந்தளவில் சமூக பொருளாதார தரவில் அநேகமானவற்றை சுருக்கமான முறையில் தருகின்றமையின் காரணமாக இது கொள்கை வகுப்போர், ஆராய்ச்சியாளர்கள், கல்விமான்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவிருக்கும்.
இவ் வெளியீட்டின் தமிழ் பிரதியொன்று ரூ.50ஆக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன் இதனை, சதம் வீதி, கொழும்பு 01இல் அமைந்துள்ள சென்றல் பொயின்ற் கட்டடத்திலும் 58, சிறி ஜயவர்த்தனபுர மாவத்தை, இராஜகிரியவில் அமைந்துள்ள இலங்கை மத்திய வங்கியின் விற்பனை மற்றும் விநியோகப் பீடத்திலும், கிளிநொச்சி, திருகோணமலை, மாத்தறை, மாத்தளை மற்றும் அநுராதபுர மத்திய வங்கியின் மாகாண அலுவலகங்களிலும் கிடைக்கும். இவ்வெளியீட்டினை இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ வெப்தளத்திலிருந்து (http://www.cbsl.gov.lk) தரவிறக்கம் செய்து கொள்ளமுடியும்.