Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் அளவீடு – 2017 செத்தெம்பா்

தயாரிப்புத் துறை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் செத்தெம்பர் மாதத்தில் 59.0 சுட்டெண் புள்ளிகளை பதிவு செய்ததுடன் இது 2017 ஒகத்து மாதத்துடன் ஒப்பிடும்போது 4.6 சுட்டெண் புள்ளிகளாலான  ஒரு அதிகரிப்பாகும். இது தயாரிப்பு நடவடிக்கைகளானது ஒகத்து 2017 உடன் ஓப்பிடும் போது செத்தெம்பர் 2017 இல் உயர்வான வீதத்தில் தொடர்ச்சியான அதிகரிப்பை குறித்துக்காட்டுகின்றது. இவ் அதிகரிப்பானது, முன்னைய மாதத்தில் அவதானிக்கப்பட்ட குறைவிலிருந்து மீட்சியடைந்து புதிய தொழிலாளர்களின் ஆட்சேர்ப்பினால் தொழில்நிலை துணைச் சுட்டெண்ணில் ஏற்பட்ட அதிகரிப்பினால்  பிரதானமாக உந்தப்பட்டது. உற்பத்தி மற்றும் புதிய கடட்ளைகள் துணைச்சுட்டெண்களும் செத்தெம்பரில் உயர்வான வீதத்தில் விரிவடைந்து காணப்பட்டன. கொள்வனவு இருப்புகளின் துணைச் சுட்டெண் முன்னைய மாதத்தில் அவதானிக்கப்பட்ட மேலதிக இருப்புகளின் நிலைமை காரணமாக மெதுவான வேகத்தில் அதிகரித்து காணப்பட்டது. நிரமப்லர் வழங்கல் நேரம்முன்னைய மாதத்துடன் ஒப்பிடும்  போது மெதுவான வீதத்தில் நீட்சியடைந்து காணப்பட்டது.

பொருளாதார சீர்திருத்த நிகழ்ச்சித்திட்டத்தின் முன்னேற்றத்தினை ஆராய்வதற்கான ப.நா.நிதிய அலுவலர்களின் இலங்கை விஜயம் நிறைவு பெற்றிருக்கிறது

தூதுக்குழுவினது விஜயத்தின் இறுதியில் விடுக்கப்பட்ட பத்திரிகை வெளியீடு, ப.நா. நிதிய அலுவலர் குழு நாட்டிற்கு விஜயம் செய்த பின்னர் அது ஆரம்பத்தில் கண்டறியப்பட்ட விடயங்களைக் கொண்ட ப.நா.நிதியத்தின் அறிக்கைகளை உள்ளடக்கியுள்ளது. இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் ப.நா.நிதிய அலுவலர்களின் கருத்துக்களேயன்றி அது ப.நா.நிதியத்தின் நிறைவேற்றுச் சபையின் கருத்தினைப் பிரதிபலிக்க வேண்டுமென்ற அவசியமில்லை. இத்தூதுக் குழு ஆரம்பத்தில் கண்டறியப்பட்ட விடயங்களின் அடிப்படையில், அலுவலர்கள் அறிக்கையினைத் தயாரிப்பர். இது முகாமைத்துவத்தின் ஒப்புதலுக்குட்பட்டு, கலந்துரையாடல்களுக்கும் தீர்மானங்களுக்குமாக ப.நா.நிதிய நிறைவேற்றுச் சபைக்குச் சமர்ப்பிக்கப்படும்.

வெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் - யூலை 2017

இலங்கையின் வெளிநாட்டுத் துறையானது நிதியியல் கணக்கிற்கான அதிகரித்த ஏற்றுமதிகள் மற்றும் உட்பாய்ச்சல்களினால் தொடர்ந்தும் மேம்பாடடைந்தது. எனினும், ஏற்றுமதி வருவாய் அதிகரித்தமைக்கு மத்தியிலும் உயர்ந்தளவான இறக்குமதிச் செலவினங்கள் காரணமாக, 2017 யூலையில் வர்த்தகப் பற்றாக்குறையானது 2016இன் இதையொத்த மாத காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் விரிவடைந்துள்ளது. யூலையில் தொழிலாளர் பணவனுப்பல்கள் அதிகரித்த வேளையிலும் சுற்றுலா வருவாய்கள் சிறிதளவால் வீழ்ச்சியடைந்தது, கடந்த நான்கு மாதங்களில் அவதானிக்கப்பட்ட வீழ்ச்சிப் போக்கினை மாற்றியுள்ளது. அரச பிணையங்கள் சந்தை, அரசாங்கத்திற்கான நீண்ட காலக் கடன்கள், பன்னாட்டு நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிய வசதியின் 3ஆம் கட்டப் பெறுவனவுகள் போன்றவற்றின் தேறிய உட்பாய்ச்சல்கள் கொழும்புப் பங்குப் பரிவர்த்தனைக்கான தொடர்ச்சியான சொத்துப்பட்டியல் முதலீட்டு உட்பாய்ச்சல்கள் ஆகியவற்றின் மூலம் நிதியியல் கணக்கிற்கான உட்பாய்ச்சல்கள் தொடர்ந்தும் வலுவடைந்தது.

முழு வடிவம்

ஆளுநரின் கருத்துரை தொடர்பான தவறான ஊடக அறிக்கைகள் தொடர்பாக மத்திய வங்கி தெளிவுபடுத்துகின்றது.

2017ஆம் ஆண்டில் அதிகரித்த பணவீக்கத்திற்கான காரணமாக பெறுமதிசேர் வரியிலான சீராக்கங்களை ஊடக அறிக்கைகள் கோடிட்டுக் காட்டியுள்ளதனை இலங்கை மத்திய வங்கி அவதானித்துள்ளது. 

Monetary Policy Review - No. 6 of 2017

Considering developments and outlook in the domestic and international macroeconomic environment, the Monetary Board, at its meeting held on 25 September 2017, was of the view that the current monetary policy stance is appropriate and decided to maintain the policy interest rates of the Central Bank of Sri Lanka at their present levels.

Given below are the key factors that the Monetary Board considered in arriving at the decision.

2017 ஓகத்தில் பணவீக்கம்

தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் தொகுக்கப்படும் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் (2013=100) ஏற்பட்ட மாற்றங்களினால் அளவிடப்பட்டவாறான பணவீக்கம் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 2017 ஓகத்தில் 7.9 சதவீதத்திற்கு 2017 யூலையின் 6.3 சதவீதத்திலிருந்து அதிகரித்தது. 2017 ஓகத்தின் ஆண்டுக்கு ஆண்டு பணவீக்கத்துக்கு உணவு மற்றும் உணவல்லா வகை இரண்டும் முக்கியமாக பங்களித்தன.

ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் ஏற்பட்ட சதவீத மாற்றம் 2017 யூலை 6.2 சதவீதத்திலிருந்து 2017 ஓகத்தின் 6.5 சதவீதத்துக்கு அதிகரித்தது.

Pages

சந்தை அறிவிப்புகள்