மேற்குறித்த விடயம் தொடர்பில் ஆங்கில நாளிதழ் ஒன்றில் 2019.02.13 அன்று வெளியிடப்பட்ட கட்டுரையுடன் தொடர்புடையது.
மேற்குறித்த கட்டுரையின் உள்ளடக்கங்களில் பல பிழையான மற்றும் தவறாக வழிநடாத்துகின்ற தகவல்கள் காணப்பட்டன என்பதனை இலங்கை மத்திய வங்கி அவதானித்துள்ளதுடன் இலங்கை மத்திய வங்கியின் அவதானிப்புக்களை பின்வருமாறு குறிப்பிட விரும்புகின்றது.
- ஈரிஐ பினான்ஸ் லிமிடெட்டினால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவொன்றின் அடிப்படையில் வைப்பாளர்களின் சிறந்த நலனைக் கருத்திற்கொண்டு ஈரிஐ பினான்ஸ் லிமிடெட்டின் முதலீட்டுச் சொத்துக்கள் மற்றும் துணை நிறுவனங்களை மாற்றல்செய்வதற்கு இலங்கை மத்திய வங்கியினால் அனுமதி வழங்கப்பட்டது. இது, ஈரிஐ பினான்ஸ் லிமிடெட்டின் பங்குகளின் விற்பனையினை உள்ளடக்கியிருக்கவில்லை.
- ஈரிஐ பினான்ஸ் லிமிடெட்டினால் சமர்ப்பிக்கப்பட்ட ஒரேயொரு முன்மொழிவு, வெளிநாட்டு நிறுவனமொன்றான புளு சம்மிட் கெப்பிட்டல் மெனேஜ்மன்ட் பிறைவேட் லிமிடெட்டிடமிருந்து கிடைத்ததாகும். எனவே அனுமதியளிக்கின்ற நேரத்தில் 'உள்நாட்டு முதலீட்டாளரொருவரை அனுமதித்தல்" தொடர்பான சாத்தியம் சொல்லப்பட்ட கொடுக்கல்வாங்கல்களில் எழாது. சொத்துகளின் உரிமையாளர்களாக ஈரிஐ பினான்ஸ் லிமிடெட் காணப்பட்டதனால் இவ்விடயம் தொடர்பில் இலங்கை மத்திய வங்கிக்கு தமது ஆர்வத்தை வெளியிட்ட முதலீட்டாளர்கள் ஈரிஐ பினான்ஸ் லிமிடெட்டினுடன் நேரடியாக தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.
- 2019.02.11ஆம் திகதியிடப்பட்ட இலங்கை மத்திய வங்கியின் பத்திரிகை வெளியீட்டில் குறிப்பிடப்பட்டவாறு, ஈரிஐ பினான்ஸ் லிமிடெட்டின் துணை நிறுவனங்கள், துணை-துணை நிறுவனங்கள் மற்றும் முதலீட்டுச் சொத்துக்களின் விற்பனை மீது ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட நிறுவனமொன்றின் சொத்துகளின் விற்பனைக்கான ஏதேனும் கொடுக்கல்வாங்கலில் இலங்கை மத்திய வங்கியின் ஈடுபாடானது ஏற்புடைய சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகளினுடனான இணங்குவிப்புகளுக்கு உட்பட்டு அவசியமான ஒழுங்குமுறைப்படுத்தல் அனுமதிகளை வழங்குவதற்கு வரையறைக்கப்பட்டிருந்தது. எனவே, இலங்கை மத்திய வங்கியானது நிதியங்களின் மூலங்களை மதிப்பிடுவதற்கான அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருந்தன என்ற திருப்தியடைதலின் மீது இக்குறித்த கொடுக்கல்வாங்கல்களுக்கான அனுமதியினை மாத்திரம் வழங்கியது. ஈரிஐ பினான்ஸ் லிமிடெட்டின் சொத்துக்களைக் கொள்வனவு செய்வதற்கு முதலீட்டாளருக்கு இலங்கை மத்திய வங்கி எச்சந்தர்ப்பத்திலும் உதவியை வழங்கயிருக்கவில்லை.
- ஈரிஐ பினான்ஸ் லிமிடெட்டின் சொத்துக்களின் விற்பனையுடன் தொடர்புபட்ட அனைத்து கொடுக்கல்வாங்கல்களும் ஏற்புடைய சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகளின் நியதிகளின் பிரகாரம் நிதியங்கள் சட்டரீதியான வழிகள் ஊடாக அனுப்பப்பட்டிருந்தன என்ற திருப்தியடைதலின் மீது பெறுநர் வங்கிகள் மூலம் செயன்முறைப்படுத்தப்பட்டன. அனுமதி வழங்கப்படுகின்ற நேரத்தில் அல்லது தொகுதிகளாக நிதியங்களைப் பெற்றுக்கொள்ளுகின்ற சந்தர்ப்பத்தில் 'பன்னாட்டு ரீதியாக கறுப்பு பட்டியலிடப்பட்ட" நிறுவனமொன்று கொடுக்கல்வாங்கலில் ஈடுபட்டிருந்தது என்ற ரீதியில் இலங்கை மத்திய வங்கிக்கு நம்பகமான தகவல்கள் எதுவும் கிடைக்கப் பெற்றிருக்கவில்லை.
- மேலும், இலங்கை மத்திய வங்கியினால் ஒழுங்குமுறைப்படுத்தபடாத நிறுவனங்களின் சொத்தாண்மையை மதிப்பிடுவதில் இலங்கை மத்திய வங்கி ஈடுபடுவதில்லை.
- சுவர்ணமஹால் பினான்ஸியல் சேர்வியஸ் பிஎல்சியின் விடயத்தில் கம்பனியின் சொத்தாண்மையினை மாற்றுவதற்கு வேறான ஒழுங்குமுறைப்படுத்தல் அனுமதிகள் தேவையாகும். அதற்கமைய, சுவர்ணமஹால் பினான்ஸியல் சேர்வியஸ் பிஎல்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட வேறான முன்மொழிவுக்காக இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையினால் நிபந்தனையுடனான அனுமதி வழங்கப்பட்டது. சொல்லப்பட்ட முன்மொழிவுக்கு அமைவாக முன்மொழியப்பட்ட உரிமையாளர் உள்நாட்டில் கூட்டிணைக்கப்பட்ட நிறுவனமொன்றாக இருக்க வேண்டும்.
- தற்போதைய கொள்வனவாளர் ஐ.அ.டொலர் 5 மில்லியன் மீதியினை உட்செலுத்துவதற்கு இயலாதிருக்கின்ற சந்தர்ப்பத்தில் ஈரிஐ பினான்ஸ் லிமிடெட்டானது சுவர்ணமஹால் பினான்ஸியல் சேர்வியஸ் பிஎல்சியினை தக்கவைத்துக்கொள்ளும். இது தொடர்பில் சுவர்ணமஹால் பினான்ஸியல் சேர்வியஸ் பிஎல்சியின் மீளெழுச்சிக்காக ஈரிஐ பினான்ஸ் லிமிடெட் ஏற்கனவே மாற்றுவழிகளை பரிசீலிக்கின்றது.
- மேலும், ஈரிஐ பினான்ஸ் லிமிடெட்டின் சொத்துக்களை விற்பனை செய்வதற்கான கொடுக்கல்வாங்கல் கம்பனிக்கும் அதன் பணிப்பாளர்களுக்கும் எதிராக இலங்கை மத்திய வங்கியினால் ஆரம்பிக்கப்பட்ட ஒழுங்குமுறைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு பதிலிறுத்தி ஈரிஐ பினான்ஸ் லிமிடெட்டின் பணிப்பாளர் சபையினால் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. சொத்துகளை மாற்றல் செய்வதற்கான தொடர்புடைய உடன்படிக்கையானது கம்பனிக்கும் கொள்வனவாளருக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்டிருந்தது. சொல்லப்பட்ட உடன்படிக்கையிலுள்ள நிபந்தனைகளின் மீறுகையொன்று நிகழுகின்றவிடத்து ஒப்பந்தத்தில் ஏற்பாடுசெய்யப்பட்டவாறு கம்பனி பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்கலாம்.
- 2019.02.11 ஆம் திகதகியிடப்பட்ட இலங்கை மத்திய வங்கியின் பத்திரிகை வெளியீட்டில் தெளிவாக குறிப்பிடப்பட்டவாறு, கொடுக்கல்வாங்கலின் ஏற்கனவே முடிவுசெய்யப்பட்ட ஐ.அ.டொலர் 54 மில்லியன் பெறுகைகள், வைப்பாளர்களின் 20 சதவீதத்தினருக்கு இலங்கை ரூ.6.4 பில்லியனைக் கொடுப்பனவு செய்யப்பயன்படுத்தப்பட்டது. மேலும், அனைத்து நிதியங்களும் ஈரிஐ பினான்ஸ் லிமிடெட்டிற்கு நேரடியாக கிடைக்கப்பெற்றன. மேற்குறித்த கட்டுரையில் குறிப்பிட்டவாறு இக்கொடுக்கல்வாங்கலில் ஈடுபட்ட ஏதேனும் நிதியங்களை இலங்கை மத்திய வங்கியானது எச்சந்தர்ப்பத்திலும் பெற்றுக்கொள்ளவில்லை.
- ஈரிஐ பினான்ஸ் லிமிடெட் முதலீட்டாளர்களை பரிசீலிக்கின்றது என்ற உண்மையினை பொதுமக்கள் அறிந்திருந்தனர். இலங்கை மத்திய வங்கியானது ஈரிஐ பினான்ஸ் லிமிடெட் மற்றும் சுவர்ணமஹால் பினான்ஸியல் சேர்வியஸ் பிஎல்சி என்பவற்றின் மீது இலங்கை மத்திய வங்கியினால் எடுக்கப்பட்ட ஒழுங்குமுறைகள் நடவடிக்கைகள் பற்றி 2018.01.02 திகதியிடப்பட்ட அதன் பத்திரிகை வெளியீட்டில் குறிப்பிட்டிருநதது. 1949ஆம் ஆண்டின் 58ஆம் இலக்க நாணய விதிச் சட்டத்தின் (திருத்தப்பட்டாவறான) 45ஆம் பிரிவின் ஏற்பாடுகளுடன் இணங்கி இலங்கை மத்திய வங்கியானது இவ்விடயம் தொடர்பில் காலத்திற்குக் காலம் பொது மக்களுக்கு தகவல்களை கிடைக்கச் செய்தது
- குறித்த கட்டுரையானது இலங்கை அரசாங்கம் ஐ.அ.டொலர் 17 மில்லியனை இழக்குமென்ற சந்தேகத்தினைக் கிளப்புகிறது. எவ்வாறாயினும் ஈரிஐ பினான்ஸ் லிமிடெட் நிறுவனமானது தனிப்பட்டவர்களுக்கு சொந்தமான வரையறுக்கப்பட்ட பொறுப்பு கம்பனியென்பதனால் ஈரிஐ பினான்ஸ் லிமிடெட்டின் சொத்துகளை மாற்றல் செய்வதற்கான கொடுக்கல்வாங்கல் சரியாக இடம்பெறுகின்றதனை அல்லது இல்லையா என்பதைக் கருத்திற்கொள்ளத் தேவையில்லை. இலங்கை அரசாங்கத்திற்கு எச்செலவும் ஏற்பட்டிருக்கவில்லை என்பதை இலங்கை மத்திய வங்கி வழியுறுத்துகின்றது.
- இலங்கை மத்திய வங்கியானது ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட கம்பனிகளுக்கும் சாத்தியமான முதலீட்டாளர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் நேரடியாக ஈடுபடுவதில்லை என்பதனை அது மீண்டும் வழியுறுத்த விரும்புகின்றது. இலங்கை மத்திய வங்கியின் ஈடுபடானது வைப்பாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கானதாகும். இது, ஈரிஐ பினான்ஸ் லிமிடெட்டிற்கும் புளு சம்மிட் கெப்பிட்டல் மெனேஜ்மன்ட் பிறைவேட் லிமிடெட்டுக்கும் இடையிலான கொடுக்கல்வாங்கலொன்றாகும் என்பதுடன் வைப்பாளர்களின் நோக்கில் நியாயமான பெறுமதி மதிப்பீடு செய்யப்பட்டது என்பதனை உறுதிசெய்வதே இலங்கை மத்திய வங்கியின் ஈடுபாடு அமைந்திருந்தது.
பிழையான தகவல்கள் நாட்டின் நிதியியல் முறைமை உறுதிப்பாட்டுக்கு எதிர்மறையான தாக்கங்களை தோற்றுவிக்கக்கூடியன என்பதனால் பொது மக்களுக்கு பகிரப்பட்ட தகவல்களை சரிபார்க்குமாறு இலங்கை மத்திய வங்கி அனைத்து ஊடக நிறுவனங்களையும் தயவுடன் வேண்டுகின்றது.
Published Date:
Friday, February 15, 2019