Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

LANKAQR தேசியளவில் பிரபல்யப்படுத்தும் பிரச்சாரம்

நாட்டில் பரவலாகக் காணப்படுகின்ற டிஜிட்டல் கொடுப்பனவு முறையொன்றாக சிறிய மற்றும் நடுத்தர வணிகர்கள் அதேபோன்று நுகர்வோர் மத்தியில் LANKAQR கொடுப்பனவுகளை பிரபல்யப்படுத்தும் நோக்குடன் LANKAQR தேசியளவில் பிரபல்யப்படுத்தும் பிரச்சாரம் இலங்கை மத்திய வங்கியில் 2021 ஒத்தோபர் 25 அன்று தொடங்கி வைக்கப்பட்டது.

பேரண்டப் பொருளாதார மற்றும் நிதியியல் முறைமை உறுதிப்பாட்டினை நிச்சயப்படுத்துவதற்கான ஆறு மாதகால வழிகாட்டலில் அறிவிக்கப்பட்டவாறு வெளிநாட்டுச் செலாவணி உட்பாய்ச்சல்களைப் பெற்றுக்கொள்வதிலான முன்னேற்றம்

இலங்கை மத்திய வங்கி பேரண்டப் பொருளாதார மற்றும் நிதியியல் முறைமை உறுதிப்பாட்டினை நிச்சயப்படுத்துவதற்கான ஆறு மாதகால வழிகாட்டலில் அறிவிக்கப்பட்டவாறு வெளிநாட்டுச் செலாவணி உட்பாய்ச்சல்களைப் பெற்றுக்கொள்வதில் இலங்கை மத்திய வங்கியினாலும் அரசாங்கத்தினாலும் மேற்கொள்ளப்பட்ட முன்னேற்றம் தொடர்பில் முதலீட்டாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் பின்வரும் தகவல்களை வழங்கவிரும்புகின்றது.

இலங்கை மத்திய வங்கியும் அரசாங்கமும் ஏனைய அரசாங்கங்கள்இ மத்திய வங்கிகள்இ  நிதியியல் நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்களுடன் நேரடி ஈடுபாடுகளின் தொடரொன்றினை ஆரம்பித்துள்ளன.

கட்டார் மத்திய வங்கியின் ஆளுநருக்கும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநருக்குமிடையிலான சந்திப்பு

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் திரு. அஜித் நிவாட் கப்ரால், கட்டார் மத்திய வங்கியின் ஆளுநர் அதிமேதகு செய்க் அப்துல்லா பின் சவூத் அல்-தானி அவர்களுடன் கொவிட் தாக்கங்களிலிருந்து உரிய பொருளாதாரங்களை புத்துயிர்பெறச் செய்வதற்கான வழிமுறைகள் மற்றும் இலங்கை – கட்டார் பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்தல் போன்றவற்றில் இலங்கை மத்திய வங்கிக்கும் கட்டார் மத்திய வங்கிக்கும் இடையிலான ஒத்துழைப்பு மீதான கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தார்.

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணினை அடிப்படையாகக் கொண்ட பணவீக்கம் 2021 செத்தெம்பரில் வீழ்ச்சியடைந்தது

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (தேநுவிசு 2013=100)  (ஆண்டிற்கு ஆண்டு) மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2021 ஓகத்தில் 6.7 சதவீதத்திலிருந்து 2021 செத்தெம்பரில் 6.2 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. இவ்வீழ்ச்சிக்கு 2020 செத்தெம்பரில் நிலவிய உயர் தள புள்ளிவிபரத் தாக்கம் முழுமையாகக் காரணமாக அமைந்தது. அதேவேளை, உணவுப் பணவீக்கம், (ஆண்டிற்கு ஆண்டு) 2021 ஓகத்தில் 11.1 சதவீதத்திலிருந்து 2021 செத்தெம்பரில் 10.0 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்த அதேவேளை உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு)  2021 செத்தெம்பரில் 3.0 சதவீதமாக மாற்றமின்றிக் காணப்பட்டது.

வெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் - 2021 ஓகத்து

அதிகரித்த நிதியியல் உட்பாய்ச்சல்கள் 2021 ஓகத்து மாத காலப்பகுதியில் மொத்த அலுவல்சார் ஒதுக்குகளை வலுப்படுத்திய வேளையில், வணிகப்பொருள் ஏற்றுமதிகள் தொடர்ச்சியாக மூன்றாவது தடவையாக ஐ.அ.டொலர் 1.0 பில்லியனை விஞ்சிக் காணப்பட்டன. இருப்பினும், இறக்குமதிச் செலவினத்தின் அதிகரிப்பானது ஏற்றுமதி வருவாய்களின் அதிகரிப்பினை விஞ்சிக் காணப்பட்டு ஓராண்டிற்கு முன்னைய நிலையுடன் ஒப்பிடுகையில் வர்த்தகப் பற்றாக்குறையின் விரிவாக்கமொன்றினைத் தோற்றுவித்தது. சுற்றுலாப் பயணிகளின் வருகைகள் 2021 ஓகத்தில் சில உத்வேகத்தினைத் திரட்டி, இலக்கங்கள் குறைவாகக் காணப்பட்டாலும் கடந்த மாதத்தினைப் விட குறிப்பிடத்தக்களவு அதிகரிப்பினைப் பதிவுசெய்தன. 2021 ஓகத்தில் தொழிலாளர் பணவனுப்பல்களின் மிதமான போக்கொன்று அவதானிக்கப்பட்டிருந்தது. பொதுவான சிறப்பு எடுப்பனவு உரிமைகளின் ஒதுக்கீட்டின் பகுதியாக 2021இல் இலங்கை பன்னாட்டு நாணய நிதியத்திடமிருந்து சிறப்பு எடுப்பனவு உரிமைகளின் ஒதுக்கீட்டினைப் பெற்றுக்கொண்டது. மேலும், இலங்கை மத்திய வங்கிக்கும் வங்காளதேச வங்கிக்குமிடையிலான இருபுடை நாணயப் பரஸ்பர பரிமாற்றல் ஏற்பாடுகளின் கீழான ஆரம்ப பகிர்ந்தளிப்புக்கள் 2021 ஓகத்து மாத காலப்பகுதியில் பெற்றுக்கொள்ளப்பட்டன.

நாணயக்கொள்கை ஆலோசனைச் செயற்குழுவினை மீளமைத்தல்

இலங்கை மத்திய வங்கியின் நாணயக்கொள்கை ஆலோசனைச் செயற்குழுவானது 2021 ஒத்தோபர் 5ஆம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரும் விதத்தில் மீளமைக்கப்பட்டுள்ளது. நாணயக்கொள்கை ஆலோசனைச் செயற்குழுவானது தனியார் துறையிலிருந்தும் கல்விசார் துறையிலிருந்தும் 12 கீர்த்திமிக்க ஆளுமைகளைக் கொண்டமைந்துள்ளதுடன் இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநரும் இலங்கைப் பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் உறுப்பினருமான திரு. சுனில் லங்காதிலக அவர்களினால் தலைமை தாங்கப்படுகின்றது. ஸ்டெசன் கம்பனிகள் குழுமத்தின் பிரதம நிதியியல் அதிகாரி திருமதி. தமிதா கூகே, இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் இறக்குமதிப் பிரிவின் தலைவர் திரு. நிரன்ஜன் திசாநாயக்கா, எக்ஸஸ் இன்ஜினியரிங் பிஎல்சி இன் குழும முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. கிரிஸ்தோபர் ஜோசா, பொருளியல் துறைப் போராசிரியர் சுனந்த மத்தும பண்டார, பிரென்டிக்ஸ் லங்கா லிமிடட்டின் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. அஷ்ரப் ஓமார்,  ஸொப்ட்லொஜிக் குழுமத்தின் தலைவர்/முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. அசோக் பதிரகே, வலிபெல் வன் பிஎல்சி இன் தலைவர் மற்றும் ஹேலீஸ் பிஎல்சி இன் துணைத் தலைவர் திரு தம்மிக பெரேரா, மெயினெடெக் லங்கா (பிறைவேட்) லிமிடெட்டின் தலைவர் திரு. ஜெயம் பெருமாள், டிஎஸ்ஐ சம்சொன் குழும வாழ்நாள் முகாமைத்துவப் பணிப்பாளர் கலாநிதி. குலதுங்க ராஜபக்ஷ், ஓய்வுபெற்ற மூத்த வங்கியியலாளர் திரு. ருச்சிரிபால தென்னகோன் மற்றும் ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி இன் குழும பிரதம நிறைவேற்று அதிகாரி செல்வி. கஸ்தூரி செல்லராஜா வில்சன் ஆகியோர் ஏனைய அங்கத்தவர்களாவர்.

Pages

சந்தை அறிவிப்புகள்