“ஒருங்கிணைப்பதற்கான முதன்மைத் திட்டம்” என்ற திட்டத்தின் கீழ் வங்கியல்லா நிதியியல் நிறுவனங்கள் துறையை வலுப்படுத்தும் வழிமுறையொன்றாக, இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது கன்றிச் பினான்ஸ் லிமிடெட் எதிர்கொண்ட தொடர்ச்சியான மூலதனப் பற்றாக்குறைகளின் காரணமாக 2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க நிதித்தொழில் சட்டத்தின் 25(1)(க) ஆம் பிரிவின் நியதிகளின் பிரகாரம், 2022.12.26 தொடக்கம் 2023.02.28 வரையான காலப்பகுதியினுள் அதன் பொதுமக்களுக்கான பொறுப்புக்களை (வைப்புக்கள் மற்றும் வாக்குறுதிப் பத்திரங்கள்) தீர்ப்பனவுசெய்யுமாறு கன்றிச் பினான்ஸ் லிமிடெட்டினைப் பணிப்பதற்கு தீர்மானித்துள்ளது.
கன்றிச் பினான்ஸ் லிமிடெட் அதன் பொதுமக்களுக்கான பொறுப்புக்களை முழுமையாகத் தீர்ப்பனவுசெய்வதற்குப் போதுமான நிதியங்கள் கிடைக்கப்பெறுவதைக் கொண்டிருப்பதற்கான வழிமுறைகளை பெற்றுக்கொள்வதைத் தொடர்ந்து, அத்தகைய தீர்ப்பனவின் பின்னர் நிதித்தொழிலிலிருந்து வெளியேறுவதற்கும் கன்றிச் பினான்ஸ் லிமிடெட் பணிக்கப்படுவதற்கு மேற்குறித்த பணிப்புரையானது கன்றிச் பினான்ஸ் லிமிடெட்டின் வைப்பாளர்களினதும் வாக்குறுதிப் பத்திரம் வைத்திருப்போரினதும் சிறந்த நலனுக்காக வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, இணங்கிய வட்டி வீதங்களின் படி 2022.12.26 வரை ஒன்றுதிரண்ட வட்டியுடன் சேர்த்து பொதுமக்களுக்கான பொறுப்புக்கள் முழுவதையும் தீர்ப்பனவுசெய்வதற்கு கன்றிச் பினான்ஸ் லிமிடெட் அவசியமான நடவடிக்கைகளை எடுக்கும்.
இத்தீர்ப்பனவுத் திட்டத்தினைப் பயன்படுத்திக்கொள்ளுமாறும் 2023.02.28 ஆம் திகதிக்கு முன்னர் தமது நிதியங்களைக் கோருமாறும் கன்றிச் பினான்ஸ் லிமிடெட்டின் அனைத்து வைப்பாளர்களும் வாக்குறுதிப் பத்திர உடமையாளர்களும் கோரப்படுகின்றனர்.