இலங்கையின் பெருமளவிலான முக்கிய நடவடிக்கைகளின் மையப்பகுதியாக விளங்குகின்ற மேல் மாகாணம், ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் அதன் பங்கில் சிறிதளவிலான அதிகரிப்பொன்றுடன் 2021இல் பெயரளவிலான மொ.உ.உற்பத்தியின் (அடிப்படை ஆண்டு 2015) 42.6 சதவீதத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்தி தேசிய வெளியீட்டிற்கு தொடர்ந்தும் பாரியளவில் பங்களித்துள்ளது. வடமேல் (11.1 சதவீதம்) மற்றும் மத்திய (10.1 சதவீதம்) மாகாணங்கள் முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் அதிகூடிய பங்குகளை பதிவுசெய்தன.
மேல், சப்பிரகமுவ மற்றும் வட மத்திய மாகாணங்களிலிருந்து பெயரளவிலான மொ.உ.உற்பத்திக்கு கிடைத்த பங்களிப்பு, 2020ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2021இல் அதிகரித்த அதேவேளை, தென், வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் பங்களிப்பு மாற்றமின்றிக் காணப்பட்டன. எனினும், மத்திய, கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களிலிருந்து கிடைத்த பங்களிப்புக்கள் 2021இல் சிறிதளவு குறைவடைந்தன.