கட்டடவாக்கத்திற்கான இலங்கை கொள்வனவு முகாமையாளர்களின் சுட்டெண் (கொ.மு.சு - கட்டடவாக்கம்), மொத்த நடவடிக்கைச் சுட்டெண் மூலம் பிரதிபலிக்கப்பட்டவாறு 2025 யூனில் 58.6 கொண்ட பெறுமதியினைப் பதிவுசெய்து, கட்டடவாக்க நடவடிக்கைகளில் தொடர்ச்சியான விரிவாக்கத்தைக் காண்பித்தது. இவ்வளர்ச்சிக்கு சாதகமான தொழில்துறை நிலைமைகள் குறிப்பாக கருத்திட்டப் பணியில் வெளிக்காட்டப்பட்ட நிலையான அதிகரிப்பு மற்றும் நிலையான விலைமட்டங்கள் என்பன பல நிறுவனங்களுக்குக் காரணமாக அமைந்தது.















