Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

வெளிநாட்டுத்துறைச் செயலாற்றம் நவெம்பர் 2024

இலங்கைப் பொருளாதாரத்தின் வெளிநாட்டுத் துறையானது சுற்றுலாத்துறை மற்றும் தொழிலாளர் பணவனுப்பல்கள் என்பவற்றிலிருந்தான வருவாய்களில் ஏற்பட்ட உயர்ந்தளவிலான உட்பாய்ச்சல்களினால் ஆதரவளிக்கப்பட்டு 2024 நவெம்பரில் மேலும் வலுவடைந்தது.

கட்டடவாக்கத் தொழிற்துறைக்கான இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் - 2024 நவெம்பர்

கட்டடவாக்கத்திற்கான இலங்கை கொள்வனவு முகாமையாளர்களின் சுட்டெண் (கொ.மு.சு கட்டடவாக்கம்) 2024 நவெம்பரில் மெதுவான வேகத்திலேனும் விரிவடைந்து, 51.4 கொண்ட மொத்த நடவடிக்கைச் சுட்டெண் பெறுமதியைப் பதிவுசெய்தது. மாதகாலப்பகுதியில் நிலவிய கடுமையான வானிலை நிலைமைகள் தமது திட்டமிடப்பட்ட பணிகளுக்கு இடையூறு விளைவித்தன என பல பதிலிறுப்பாளர்கள் குறிப்பிட்டனர். 

முழுவடிவம்

 

வெளிநாட்டுப் படுகடன் மறுசீரமைப்பை அநுசரித்து எட்டு (08) புதிய இலங்கை ரூபா திறைசேரி முறிகளுக்கான உள்நாட்டு முறிகளின் தெரிவின் கீழ் நாட்டிற்கான பன்னாட்டு முறிகளைப் பரிமாற்றல்

2024 நவெம்பர் 25ஆம் திகதியிடப்பட்ட இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் நாட்டிற்கான பன்னாட்டு முறிகளின் பரிமாற்றத்திற்கான அழைப்பு விஞ்ஞாபனமானது (“அழைப்பு விஞ்ஞாபனம்”) அதனைத்தொடர்ந்து, 2024 திசெம்பர் 16 அன்று பரிமாற்றத்திற்கான ஒப்புதல் கோரிக்கையின் இறுதி பெறுபேறுகளின் அறிவித்தலுடன், நிதி, திட்டமிடல் மற்றும் அபிவிருத்தி அமைச்சினால் வெளியிடப்பட்டது (இதில் பயன்படுத்தப்பட்ட ஆனால் வேறுவகையில் வரைவிலக்கணம் செய்யப்படாத சொற்பதங்கள் அழைப்பு விஞ்ஞாபனத்திலுள்ள அத்தகைய சொற்களுக்கு வழங்கப்பட்ட பொருளைக் கொண்டுள்ளன).

பாதிக்கப்பட்ட சிறிய மற்றும் நடுத்தரத் தொழில் முயற்சிகளுக்கு உதவுவதற்கான நிவாரண வழிமுறைகள்

2024ஆம் ஆண்டின் 26ஆம் இலக்க வங்கிகளினால் வழங்கப்பட்ட கடன்களை அறவிடுதல் (விசேட ஏற்பாடுகள்) (திருத்தச்) சட்டத்தின் மீதான தொழிற்பாட்டுக் குழுவின் கூட்டத்தின்போது சிறிலங்கா பாங்க்ஸ் அசோசியேசன் (கறன்டி) லிமிடெட்டினால் இணங்கப்பட்டவாறு, உயிர்த்த ஞாயிறு தாக்குதல், கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்று மற்றும் அண்மைக் காலத்தில் நிலவிய விதிவிலக்கான பேரண்டப் பொருளாதார நிலைமைகள் என்பன காரணமாக பாதிக்கப்பட்ட சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளுக்கு வழங்கப்படவுள்ள நிவாரண வழிமுறைகளை எடுத்துக்காட்டுக்கின்ற சுற்றறிக்கை அறிக்கையொன்றினை இலங்கை மத்திய வங்கி 2024.12.19 அன்று உரிமம்பெற்ற வங்கிகளுக்கு விடுத்திருக்கிறது.

மாகாண ரீதியான மொத்த உள்நாட்டு உற்பத்தி (மா.மொ.உ.உ) - 2023

மேல் மாகாணம் அதன் பங்கில் சிறிதளவு சரிவொன்றை எதிர்நோக்கிய போதிலும் முன்னிலைவகித்து பொருளாதார நிலையைத் தக்கவைத்துக்கொண்டது.

மேல் மாகாணம் 2023ஆம் ஆண்டில், இலங்கையின் பெயரளவு மொ.உ.உற்பத்தியின் பாரிய பங்கிற்கு (43.7) வகைக்கூறிய போதிலும் இது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் அதன் பங்களிப்பில் சிறிதளவிலான சரிவொன்றை எடுத்துக்காட்டியது. மேல் மாகாணத்தின் வலிமையான பிரசன்னம் குறிப்பாக கைத்தொழில் மற்றும் பணிகள் துறைகளில் காணக்கூடியதாகவுள்ளது. அதேவேளை, வடமேல் (10.9 சதவீதம்) மற்றும் மத்திய (10.3 சதவீதம்) மாகாணங்கள் நெருக்கிய போட்டியாளர்களாக விளங்கி, முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலைகளைப் பெற்றுக்கொண்டன.

திருத்தப்பட்டவாறான 1988 இன் 30 ஆம் இலக்க வங்கித்தொழில் சட்டத்தின் 83(இ) ஆம் பிரிவின் கீழ் தடைசெய்யப்பட்ட திட்டங்களை முறியடித்தல் மீதான முன்னேற்றம்

நிதியியல் முறைமை உறுதிப்பாட்டிற்கு இடர்நேர்வுகளை தோற்றுவிக்கின்ற தடைசெய்யப்பட்ட திட்டங்களின் எச்சரிக்கைமிக்க அதிகரிப்பினை கட்டுப்படுத்துவதற்கும் அத்தகைய திட்டங்களிலிருந்து பொதுமக்களைப் பாதுகாப்பதற்கும் இலங்கை மத்திய வங்கி முனைப்பான வழிமுறைகளை எடுத்து வருகின்றது. தனிநபர்கள் அல்லது நிறுவனங்கள், வங்கித்தொழில் சட்டத்தின் 83(இ) (1) ஆம் பிரிவின் ஏற்பாடுகளை மீறியுள்ளனரா அல்லது மீறுவதற்கு சாத்தியம் காணப்படுகின்றதா என்பதனை தீர்மானிப்பதற்கு வங்கித்தொழில் சட்டத்தின் 83(இ) (3)ஆம் பிரிவின் கீழ் விசாரணைகளை நடாத்துவதை இம்முயற்சிகள் உள்ளடக்குகின்றன.

Pages