பேரண்டப் பொருளாதார அபிவிருத்திகளை, குறிப்பாக உள்நாட்டு வெளிநாட்டுச் செலாவணிச் சந்தை நிலைமைகளின் அபிவிருத்திகளைப் பரிசீலணையிற்கொண்டு பொருட்கள் ஏற்றுமதியாளர்கள் தமது ஏற்றுமதிப் பெறுகைகளை இலங்கை ரூபாவாக மாற்றுவதற்கு ஏற்புடைய காலப்பகுதியைக் கணிசமாகத் தளர்த்தி, இலங்கை மத்திய வங்கி “2024ஆம் ஆண்டின் 01ஆம் இலக்க ஏற்றுமதிப் பெறுகைகளை இலங்கைக்கு திருப்பி அனுப்புதல் விதிகளை (விதிகள்) வழங்கியுள்ளது. இது 2023ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் நியதிகளுக்கமைய 2024.07.01ஆம் திகதியிடப்பட்ட 2391/02ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.