வர்த்தகப் பற்றாக்குறையானது ஓராண்டிற்கு முன்னைய நிலையுடனும் 2023 ஒத்தோபர் மாதத்துடனும் ஒப்பிடுகையில் ஏற்றுமதிகளில் ஏற்பட்ட மேம்பாடு மற்றும் இறக்குமதிகளில் ஏற்பட்ட சுருக்கம் என்பவற்றின் இணைந்த தாக்கத்தின் காரணமாக 2023 நவெம்பரில் சுருக்கமடைந்து காணப்பட்டது. ஏற்றுமதிகள் 2022 செத்தெம்பர் மாதத்திலிருந்து முதலாவது தடவையாக ஆண்டிற்கு ஆண்டு வளர்ச்சியொன்றினைப் பதிவுசெய்தன.
மாதாந்த தொழிலாளர் பணவனுப்பல்கள் ஐ.அ.டொலர் 500 மில்லியன் தொகையினை விஞ்சித் தொடர்ந்தும் காணப்பட்டதுடன் 2022இன் தொடர்புடைய காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 2023 நவெம்பரில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பொன்றினைப் பதிவுசெய்தன.
பண்டிகைக் காலப்பகுதியில் சுற்றுலாப் பயணிகளின் வருகைகள் சடுதியாக அதிகரித்து சுற்றுலாத்துறையிலிருந்தான உயர்ந்தளவிலான வருவாய்களுக்குப் பங்களித்திருந்தது.
அரச பிணையங்கள் சந்தையில் மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டு முதலீடுகள் 2023 யூலை தொடக்கம் தேறிய வெளிப்பாய்ச்சலொன்றினைத் தொடர்ந்து பதிவுசெய்தபோதிலும் இதுவரையான ஆண்டு காலப்பகுதியில் ஒன்றுசேர்ந்த அடிப்படையில் தொடர்ந்தும் நேர்க்கணியமாகக் காணப்படுகின்றன.
மொத்த அலுவல்சார் ஒதுக்குகள் 2023 நவெம்பர் இறுதியளவில் ஐ.அ.டொலர் 3.6 பில்லியனாக விளங்கின.
இலங்கை ரூபாவானது 2023 நவெம்பர் மாத காலப்பகுதியில் ஐ.அ.டொலரிற்கெதிராகத் தொடர்ந்தும் உறுதித்தன்மையினைக் கொண்டிருந்தது.