Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

இலங்கை மத்திய வங்கி அதன் 13ஆவது பன்னாட்டு ஆராய்ச்சி மாநாட்டினை நடாத்துகின்றது

இலங்கை மத்திய வங்கி அதன் மாபெரும் ஆராய்ச்சி நிகழ்வான 13ஆவது பன்னாட்டு ஆராய்ச்சி மாநாட்டினை மத்திய வங்கியின் ஜோன் எக்ஸ்டர் பன்னாட்டு மாநாட்டு மண்டபத்தில் 2024 திசெம்பர் 13ஆம் திகதியன்று நடாத்தியது. மாநாடானது பல்வேறு சமகால பேரண்டப்பொருளாதாரக் கொள்கைப் பிரச்சனைகள் குறித்த புத்தாக்கக் கோட்பாட்டுரீதியிலான மற்றும் அனுபவரீதியிலான ஆராய்ச்சியினை ஊக்குவிப்பதனை நோக்காகக் கொண்டிருந்தது. இது பல்லினத்தன்மை கொண்ட பின்புலங்களிலிருந்தான ஆராய்ச்சியாளர்களுக்கு அவர்களது கருத்துக்கள், கண்டறிகைகள் மற்றும் அனுபவங்கள் என்பவற்றினைப் பல்வேறு கண்ணோட்டங்களிலிருந்து கலந்துரையாடுவதற்கான தளமொன்றினை வழங்கியது. கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்று மற்றும் அதனைத்தொடர்ந்து நாடு எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடி என்பவற்றினால் ஏற்பட்ட இடைநிறுத்தத்தினைத் தொடர்ந்து, 2019இலிருந்து முதலாவது தடவையாக இவ்வாண்டின் மாநாடானது நடைபெற்றமையினால் இது குறிப்பிடத்தக்கதொரு மைல்கல்லினைக் குறித்துக்காட்டியது.

வெளிநாட்டுச் செலாவணிக்கான உலகளாவிய கோவையைக் கொண்டு இலங்கையின் உள்நாட்டு வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையின் எதிர்காலத்தை செம்மைப்படுத்தல்

2024 சனவரியில் மத்திய வங்கியின் ஆண்டுக்கான கொள்கைக் கூற்றில் எடுத்துக்காட்டியவாறு,  இலங்கை மத்திய வங்கி, அனைத்து உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் மற்றும் தேசிய சேமிப்பு வங்கி ஆகியவற்றைப் பிரதானமாக உள்ளடக்குகின்ற உள்நாட்டு வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையானது வெளிநாட்டுச் செலாவணிக்கான உலகளாவிய கோவையை வெற்றிகரமாக ஏற்றுக்கொண்டுள்ளது. இதன் மூலம் உள்நாட்டு வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையில் ஒருங்கமைவையும் செயல்திறன்மிக்க தொழிற்பாட்டையும் மேலும் ஊக்குவிப்பதற்கான பொதுவான வழிகாட்டல் தொகுதியினைக் கடைப்பிடிக்கின்றது. இலங்கை மத்திய வங்கி மூலம் எடுக்கப்பட்ட முயற்சியிலிருந்தும்  இலங்கை வெளிநாட்டுச் செலாவணி அமைப்பிடமிருந்து கிடைத்த ஆதரவுடனும்  உருவான உள்நாட்டு வெளிநாட்டு செலாவணிச் சந்தையில் வெளிநாட்டுச் செலாவணிக்கான உலகளாவிய கோவையைப் ஏற்றுக்கொள்ளுதலானது உள்நாட்டு வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையில் முக்கிய முன்னேற்றத்தினைக் குறித்துக் காட்டுகின்றது.

வெளிநாட்டுத்துறைச் செயலாற்றம் ஒத்தோபா் 2024

வெளிநாட்டுத் துறையானது நடைமுறைக் கணக்கிற்கான வலுவான உட்பாய்ச்சல்களினால் ஆதரவளிக்கப்பட்டு 2024 ஒத்தோபரில் அதன் நேர்மறையான உத்வேகமொன்றினைத் தொடர்ந்து, ஒதுக்குகளில் அதிகரிப்பொன்றினையும் இலங்கை ரூபாவின் உயர்வடைதலொன்றினையும் தோற்றுவித்தது.

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட முதன்மைப் பணவீக்கம் 2024 நவெம்பரில் தொடர்ந்தும் எதிர்மறையான புலத்தில் காணப்பட்டது

மத்திய வங்கியின் அண்மைக்கால எறிவுகளுக்கமைவாக, கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு, 2021=100)  ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கமானது தொடர்ச்சியாக மூன்றாவது மாதமாகவும் எதிர்மறையான புலத்தில் காணப்பட்டு, 2024 ஒத்தோபரின் 0.8 சதவீதம் கொண்ட பணச்சுருக்கத்துடன் ஒப்பிடுகையில் 2024 நவெம்பரில் 2.1 சதவீதம் கொண்ட பணச்சுருக்கத்தினைப் பதிவுசெய்தது.

கட்டடவாக்கத் தொழிற்துறைக்கான இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் - 2024 ஒத்தோபர்

கட்டடவாக்கத்திற்கான இலங்கை கொள்வனவு முகாமையாளர்களின் சுட்டெண் (கொ.மு.சு - கட்டடவாக்கம்), 2024 ஒத்தோபரில் மீளெழுச்சியடைந்து, 54.3 மொத்த நடவடிக்கைச் சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்திருந்தது. தேர்தல் தொடர்பான நிச்சயமற்றதன்மைகள் தீர்க்கப்பட்டதைத் தொடர்ந்து, ஒத்தோபரில் கட்டடவாக்கச் செயற்றிட்டங்களின் தொழிற்பாடுகள் மீண்டும் உத்வேகம் பெற்றுள்ளதென பல பதிலிறுப்பாளர்கள் குறிப்பிட்டனர்.

இலங்கை மத்திய வங்கி ஓரிரவு கொள்கை வீதத்தினை அறிமுகப்படுத்துவதுடன் அதன் நாணயக் கொள்கை நிலைப்பாட்டினை மேலும் தளர்த்துகின்றது

இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபையானது 2024 நவெம்பர் 26ஆம் நாளன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில் நாணயக் கொள்கை நிலைப்பாட்டினை மேலும் தளர்த்துவதற்கும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஓரிரவுக் கொள்கை வீதத்தினை 8.00 சதவீதமாக நிர்ணயிப்பதற்கும் தீர்மானித்துள்ளது. இம்மாற்றத்துடன் கொள்கை வட்டி வீதத்தின் வினைத்திறனான குறைப்பானது நெகிழ்ச்சித்தன்மை வாய்ந்த பணவீக்க இலக்கிடல் கட்டமைப்பின் தொழிற்பாட்டு இலக்காகத் தொடர்ந்து தொழிற்படுகின்ற சராசரி நிறையேற்றப்பட்ட அழைப்புப் பண வீதத்தின் தற்போதைய மட்டத்திலிருந்து ஏறத்தாழ 50 அடிப்படைப் புள்ளிகளாக அமையும்.

Pages