இலங்கை மத்திய வங்கி அதன் 13ஆவது பன்னாட்டு ஆராய்ச்சி மாநாட்டினை நடாத்துகின்றது

இலங்கை மத்திய வங்கி அதன் மாபெரும் ஆராய்ச்சி நிகழ்வான 13ஆவது பன்னாட்டு ஆராய்ச்சி மாநாட்டினை மத்திய வங்கியின் ஜோன் எக்ஸ்டர் பன்னாட்டு மாநாட்டு மண்டபத்தில் 2024 திசெம்பர் 13ஆம் திகதியன்று நடாத்தியது. மாநாடானது பல்வேறு சமகால பேரண்டப்பொருளாதாரக் கொள்கைப் பிரச்சனைகள் குறித்த புத்தாக்கக் கோட்பாட்டுரீதியிலான மற்றும் அனுபவரீதியிலான ஆராய்ச்சியினை ஊக்குவிப்பதனை நோக்காகக் கொண்டிருந்தது. இது பல்லினத்தன்மை கொண்ட பின்புலங்களிலிருந்தான ஆராய்ச்சியாளர்களுக்கு அவர்களது கருத்துக்கள், கண்டறிகைகள் மற்றும் அனுபவங்கள் என்பவற்றினைப் பல்வேறு கண்ணோட்டங்களிலிருந்து கலந்துரையாடுவதற்கான தளமொன்றினை வழங்கியது. கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்று மற்றும் அதனைத்தொடர்ந்து நாடு எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடி என்பவற்றினால் ஏற்பட்ட இடைநிறுத்தத்தினைத் தொடர்ந்து, 2019இலிருந்து முதலாவது தடவையாக இவ்வாண்டின் மாநாடானது நடைபெற்றமையினால் இது குறிப்பிடத்தக்கதொரு மைல்கல்லினைக் குறித்துக்காட்டியது.

முழுவடிவம்

Published Date: 

Friday, December 13, 2024