2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க நிதித்தொழில் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு முரணாக ‘நிதி’ எனும் சொல்லின் பயன்பாடு

2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க நிதித்தொழில் சட்டத்தின் 10(2)ஆம் பிரிவின் படி, நிதிக் கம்பனியொன்றும், சட்டத்தின் 10(6) பிரிவில் குறித்துரைக்கப்பட்ட நிறுவனமொன்றும் தவிர்ந்த வேறு எந்தவொரு நபரும் இலங்கை மத்திய வங்கியின் எழுத்திலான முன்னங்கீகாரத்துடனின்றி, ‘நிதி’, ‘நிதியளித்தல்’, அல்லது ‘நிதிசார்’ என்னும் சொல்லை, அத்தகைய நபரது பெயரின் அல்லது விபரணத்தின் அல்லது வியாபாரப் பெயரின் பாகமாகத், தனியாகவோ அல்லது இன்னொரு சொல்லுடன் அல்லது அதன் வழிச்சொற்களுக்குள் அல்லது உருப்பெயர்ப்புகளுக்குள் எவற்றுடனும் அல்லது வேறேதேனும் மொழியில் அவற்றுக்குச் சமமானதுடன் சேர்த்தோ, பயன்படுத்தலாகாது என்பதை பொதுமக்களுக்கு இத்தால் அறிவிக்கப்படுகின்றது.

முழுவடிவம்

Published Date: 

Thursday, February 27, 2025