தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் தொகுக்கப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் (2013 = 100) ஏற்பட்ட மாற்றங்களினால் அளவிடப்பட்டவாறான பணவீக்கம் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2016 செத்தெம்பரின் 4.7 சதவீதத்திலிருந்து 2016 ஒத்தோபரில் 5.0 சதவீதத்திற்கு அதிகரித்தது. உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டும் 2016 ஒத்தோபரின் ஆண்டிற்கு ஆண்டு பணவீக்கத்திற்கு பஙக்ளித்துள்ளன.
ஆண்டுச் சராசரி அடிப்படையொன்றின்மீது அளவிடப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் ஏற்பட்ட மாற்றம் 2016 செத்தெம்பரின் 3.8 சதவீதத்திலிருந்து 2016 ஒத்தோபரில் 4.0 சதவீதத்திற்கு அதிகரித்தது.















2006ஆம் ஆண்டின் 6ஆம் இலக்க நிதியியல் கொடுக்கல்வாங்கல்கள் அறிக்கையிடல் சட்டத்தின் ஏற்பாடுகளினது நியதிகளில், இலங்கையின் நிதியியல் உளவறிதல் பிரிவு பணம் தூயதாக்கல் மற்றும் பயங்கரவாதிக்கு நிதியிடல் தொடர்பான புலனாய்வுகளையும் வழக்குகள் தொடுப்பதற்கான நடவடிக்கைகளையும் வசதிப்படுத்தும் பொருட்டு தகவல்களைப் பரிமாறுவதற்காக, இலங்கை மத்திய வங்கியில் 2016 ஒத்தோபர் 19ஆம் நாளன்று உள்நாட்டு இறைவரித் திணைக்களத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றினைச் செய்து கொண்டது. உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் திருமதி. கல்யாணி தகநாயக்க அவர்களும் நிதியியல் உளவறிதல் பிரிவின் பணிப்பாளர் திரு.எச்.அமரதுங்க அவர்களும் தொடர்பான திணைக்களங்களின் சார்பில், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரும் பணம் தூயதாக்கலுக்கு எதிரான மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியிடலை ஒழித்தல் என்பனவற்றிற்கான தேசிய இணைப்புக் குழுவின் தலைவருமான முனைவர். இந்திரஜித் குமாரசுவாமியின் முன்னிலையில் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர். 
