வர்த்தகப் பற்றாக்குறையில் ஏற்பட்ட சுருக்கம், சுற்றுலா வருவாய்களில் காணப்பட்ட தொடர்ச்சியான வளர்ச்சி என்பனவற்றின் காரணமாக 2016 செத்தெம்பரில் இலங்கையின் வெளிநாட்டுத் துறையின் செயலாற்றம் மேமப் ட்டது. ஏற்றுமதி வருவாய்களில் ஏற்பட்ட அதிகரிப்பு இறக்குமதிச் செலவினத்தில் ஏற்பட்ட குறைப்புடன் சேர்ந்தமையின் விளைவாக செத்தெம்பர் மாதத்தில் வர்த்தகப் பற்றாக்குறை குறுக்கமடைந்தது. தொழிலாளர் பணவனுப்பல்கள் சிறிதளவு வீழ்ச்சியைப் பதிவுசெய்த போதும் இக்காலப்பகுதியில் சுற்றுலாவிலிருந்தான வருவாய்கள் 2015 செத்தெம்பருடன் ஒப்பிடுகையில் அதிகரிப்பினைப் பதிவு செய்தன. மேலும், கொழும்புப் பங்குப் பரிவர்த்தனையில் வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் அரச பிணையங்கள் சந்தை அதேபோன்று அரசாங்கத்திற்கான நீண்டகாலக் கடன் உட்பாய்ச்சல்கள் என்பன 2016 செத்தெம்பரில் நிதியியல் கணககு; வலுவடைய உதவின.
Wednesday, January 11, 2017