Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

இலங்கை மத்திய வங்கி நாணயக் கொள்கை அறிக்கை 2025 ஓகத்தினை வெளியிடுகின்றது

மத்திய வங்கி 2023ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் தேவைப்பாடுகளுடன் இசைந்து செல்லும் விதத்தில் 2025இற்கான அதன் இரண்டாவது நாணயக் கொள்கை அறிக்கையினை வெளியிட்டது. ஆண்டொன்றிற்கு இருமுறை வெளியிடப்படுகின்ற நாணயக் கொள்கை அறிக்கையானது பொருளாதாரம், குறிப்பாக பணவீக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சித் தோற்றப்பாடு, தொடர்பிலான முன்னோக்கிய பார்வையிலமைந்த நுண்ணோக்குகள் மற்றும் எறிவுகளிற்கான இடர்நேர்வுகளை வழங்குகின்றது. இவ்வறிக்கையின் ஊடாக மத்திய வங்கி அதன் அண்மைய நாணயக் கொள்கைத் தீர்மானங்களிற்குப் பின்னணியிலுள்ள நியாயபூர்வதன்மையினைத் தொடர்பூட்டுவதன் மூலம் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறுந்தன்மை என்பவற்றினை மேம்படுத்துவதற்கு முயற்சிக்கின்றது.

நிதியியல் உளவறிதல் பிரிவினால் 2025 சனவரி தொடக்கம் யூன் வரை நிதியியல் நிறுவனங்கள் மீது விதிக்கப்பட்ட நிருவாக ரீதியான தண்டப்பணங்கள்

2006ஆம் ஆண்டின் 06ஆம் இலக்க நிதிசார் கொடுக்கல்வாங்கல்களை அறிக்கையிடல் சட்டத்தின் 19(2)ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 19(1)ஆம் பிரிவின் கீழ் உரித்தளிக்கப்பட்ட அதிகாரங்களின் பயனைக்கொண்டு, நிதிசார் கொடுக்கல்வாங்கல்களை அறிக்கையிடல் சட்டத்தின் ஏற்பாடுகளுடன் இணங்கியொழுகாத நிறுவனங்கள் மீது நிதியியல் தண்டப்பணங்கள் விதிக்கப்படுகின்றன. நிறுவனங்களின் தொடர்புடைய இணங்காமையின் தன்மை மற்றும் பாரதூரம் என்பனவற்றை பரிசீலனையிற்கொண்டு தண்டப்பணங்கள் விதித்துரைக்கப்படலாம்.   

இலங்கை மத்திய வங்கி சந்தைத் தொழிற்பாடுகள் அறிக்கை- 2025 யூனினை வெளியிடுகின்றது

இலங்கை மத்திய வங்கி அதன் மூன்றாம் சந்தைத் தொழிற்பாடுகள் அறிக்கையினை 2025 யூலை 31ஆம் திகதி வெளியிட்டது. நெகிழ்ச்சித்தன்மைவாய்ந்த செலாவணி வீத முறையினால்  ஆதரவளிக்கப்பட்டு, நெகிழ்ச்சித்தன்மைவாய்ந்த பணவீக்க இலக்கிடலின் கீழ் நாணயக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் மத்திய வங்கி மேற்கொண்ட நாணய தொழிற்பாடுகளையும் செலாவணி தொழிற்பாடுகளையும் பற்றி ஆர்வலர்களுக்கிடையில் விழிப்புணர்வையும் அறிவையும் மேம்படுத்துவது சந்தைத் தொழிற்பாடுகள் அறிக்கையின் இலக்காகும்.

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட பணச்சுருக்கம் 2025 யூலையில் தொடர்ந்தும் மிதமடைந்தது

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு, 2021=100)  ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்துடன் பணச்சுருக்க நிலைமைகள் 2025 யூலையில் தொடர்ச்சியாக ஐந்தாவது மாதத்திற்கும் தளர்வடைந்தது, 2025 யூனின் 0.6 சதவீதம் கொண்ட பணச்சுருக்கத்துடன் ஒப்பிடுகையில் 0.3 சதவீதம் கொண்ட சிறிய முதன்மைப் பணவீக்கத்தைப் பதிவுசெய்தது

வெளிநாட்டுத்துறைச் செயலாற்றம் - 2025 யூன்

வணிகப்பொருள் வர்த்தகப் பற்றாக்குறை விரிவடைந்தபோதிலும் இலங்கையின் வெளிநாட்டுத் துறையானது 2025 முதலரைப்பகுதியில் வலுவடைந்து நடைமுறைக் கணக்கில் மிகையொன்றினைப் பதிவுசெய்தது.

கட்டடவாக்கத் தொழிற்துறைக்கான இலங்கைக் கொள்வனவு முகாமையாளர்களின் சுட்டெண் - 2025 யூனில் தொடர்ந்தும் விரிவடைந்தது

கட்டடவாக்கத்திற்கான இலங்கை கொள்வனவு முகாமையாளர்களின் சுட்டெண் (கொ.மு.சு - கட்டடவாக்கம்), மொத்த நடவடிக்கைச் சுட்டெண் மூலம் பிரதிபலிக்கப்பட்டவாறு 2025 யூனில் 58.6 கொண்ட பெறுமதியினைப் பதிவுசெய்து, கட்டடவாக்க நடவடிக்கைகளில் தொடர்ச்சியான விரிவாக்கத்தைக் காண்பித்தது. இவ்வளர்ச்சிக்கு சாதகமான தொழில்துறை நிலைமைகள் குறிப்பாக கருத்திட்டப் பணியில் வெளிக்காட்டப்பட்ட நிலையான அதிகரிப்பு மற்றும் நிலையான விலைமட்டங்கள் என்பன பல நிறுவனங்களுக்குக் காரணமாக அமைந்தது. 

Pages

சந்தை அறிவிப்புகள்