Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

வெளிநாட்டுச் செலாவணி பொருந்தச்செய்தல் தளத்தை இலங்கை வெளிநாட்டுச் செலாவணிச் சந்தை அறிமுகப்படுத்துகின்றது

விரிவான வெளிநாட்டுச் செலாவணி சந்தையொன்றின் வளர்ச்சியினை ஊக்குவிப்பதற்கான இலங்கை மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்ட முன்னெடுப்பிற்கமைவாக, வெளிநாட்டுச் செலாவணி பொருந்தச்செய்தல் தளமொன்றை இலங்கை வெளிநாட்டுச் செலாவணி சந்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியுள்ளது. அனைத்து உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள், தேசிய சேமிப்பு வங்கி, மற்றும் இலங்கை மத்திய வங்கி என்பனவற்றுக்கு அணுகுவழியினைக் கொண்டிருக்கும் இத்தளமானது விலை கண்டறிதலை மேம்படுத்துவதற்கும் உள்நாட்டு வெளிநாட்டுச் செலாவணி சந்தையில் அதிக வெளிப்படைத்தன்மையையும் வினைத்திறனையும் ஊக்குவிப்பதற்கும் அறிமுகப்படுத்தப்பட்டதாகும். அதற்கமைய, இந்நோக்கத்திற்காக, புளூம்பேர்க் BMatch வெளிநாட்டுச் செலாவணி பொருந்தச்செய்தல் தளம் உள்நாட்டு வெளிநாட்டுச் செலாவணி சந்தையினால் தெரிவுசெய்யப்பட்டது.

பன்னாட்டு நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபை இலங்கையுடனான விரிவாக்கப்பட்ட நிதிய வசதி ஏற்பாட்டின் கீழ் மூன்றாவது மீளாய்வினை நிறைவுசெய்கின்றது

பன்னாட்டு நாணய நிதிய நிறைவேற்றுச் சபை இலங்கையுடனான 48 மாத விரிவாக்கப்பட்ட நிதிய வசதியின் கீழ் மூன்றாவது மீளாய்வினை நிறைவுசெய்து, இலங்கையின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் சீர்திருத்தங்களுக்கு ஆதரவளிக்கும் பொருட்டு சிறப்பு எடுப்பனவு உரிமை (சிஎஉ) 254 மில்லியன் (ஏறத்தாழ ஐ.அ.டொலர் 334 மில்லியன்) கொண்ட தொகைக்கு உடனடி பெறுவழியினை நாட்டிற்கு வழங்குகின்றது. இது, பன்னாட்டு நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் இலங்கை பெறுகின்ற நான்காவது தாகுதியாவதுடன் அதற்கேற்ப இதுவரையிலும் பகிர்ந்தளிக்கப்பட்ட மொத்த பன்னாட்டு நாணய நிதிய ஆதரவு சிறப்பு எடுப்பனவு உரிமை 1.02 பில்லியனாக (ஏறத்தாழ ஐ.அ.டொலர் 1.34 பில்லியன்) அதிகரிக்கின்றது.

வெளிநாட்டுத்துறைச் செயலாற்றம் - சனவரி 2025

இலங்கை மத்திய வங்கியானது 2025 சனவரியிலிருந்து மாதாந்த வெளிநாட்டுத் துறை நடைமுறைக் கணக்குப் புள்ளிவிபரங்களை வெளியிடத் தொடங்கியது. நடைமுறைக் கணக்குப் புள்ளிவிபரங்கள் மாதாந்த அடிப்படையொன்றில் வெளியிடப்படுவது இதுவே முதலாவது தடவையாகும்.

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட முதன்மைப் பணவீக்கம் 2025 பெப்புருவரியில் எதிர்க்கணியப் புலத்திலேயே காணப்பட்டது

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு, 2021=100)  ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கமானது மத்திய வங்கியின் அண்மைக்கால எறிவுகளுக்கமைய, தொடர்ச்சியாக ஆறாவது மாதமாகவும் எதிர்க்கணிய புலத்தில் காணப்பட்டு, 2025 சனவரியின் 4.0 சதவீதம் கொண்ட பணச்சுருக்கத்துடன் ஒப்பிடுகையில், 2025 பெப்புருவரியில் 4.2 சதவீதம் கொண்ட பணச்சுருக்கமொன்றைப் பதிவுசெய்தது. 

கட்டடவாக்கத் தொழிற்துறைக்கான இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் - 2025 சனவரி

கட்டடவாக்கத்திற்கான இலங்கை கொள்வனவு முகாமையாளர்களின் சுட்டெண் (கொ.மு.சு கட்டடவாக்கம்), மொத்த நடவடிக்கைச் சுட்டெண் மூலம் பிரதிபலிக்கப்பட்டவாறு 2025 சனவரியில் 52.9 சதவீதமாக மேலும் அதிகரித்தது. நிலவுகின்ற வியாபார நிலைமைகள் குறிப்பாக, உறுதியான விலை மட்டங்கள் மற்றும் சாதகமான வானிலை முன்னெடுக்கப்படும் கட்டடவாக்கக் கருத்திட்டங்களின் நிறைவடைதலை துரிதப்படுத்தியிருந்தன என அநேகமான அளவீட்டு பதிலிறுப்பாளர்கள் குறிப்பிட்டிருந்தனர். புதிய கருத்திட்டங்களை நிலையாக முன்னெடுப்பது தொடர்ச்சியான முன்னேற்றத்தைப் பேணுவதற்கு நிறுவனங்களுக்கு அத்தியாவசியமானது என்பது மேலும் எடுத்துக்காட்டப்பட்டது.

காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டி – 2024இன் இரண்டாம் அரையாண்டு

கொழும்பு மாவட்டத்திற்கான காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டியானது 2024இன் இரண்டாம் அரையாண்டு காலப்பகுதியின் போது 7.7 சதவீதம் கொண்ட ஆண்டுக்காண்டு அதிகரிப்புடன் 236.8 ஆகப் பதிவானது. காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டியின் அனைத்துத் துணைக் குறிகாட்டிகளும் அதாவது, வதிவிட, வர்த்தக மற்றும் கைத்தொழில் காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டிகள் இவ்வதிகரிப்பிற்குப் பங்களித்து, முறையே 9.9 சதவீதம், 9.4 சதவீதம் மற்றும் 3.9 சதவீதம்  கொண்ட ஆண்டு அதிகரிப்புகளைப் பதிவுசெய்தன. அரையாண்டு அடிப்படையில் காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டியும் அதன் துணைக் குறிகாட்டிகளும் 2024இன் முதலாம் அரையாண்டு காலப்பகுதியில் பதிவாகிய பெறுமதிகளுடன் ஒப்பிடுகையில் 2024இன் இரண்டாம் அரையாண்டுக் காலப்பகுதியில் மெதுவான வேகத்தில் அதிகரித்தன. அதிகூடிய அதிகரிப்பு வதிவிடக் காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டியில் அவதானிக்கப்பட்டதுடன் அதனைத் தொடர்ந்து வர்த்தக மற்றும் கைத்தொழில் காணி விலைமதிப்பீட்டுக்; குறிகாட்டிகள் காணப்பட்டன.

Pages

சந்தை அறிவிப்புகள்