Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

இலங்கை மத்திய வங்கி, 2023ஆம் ஆண்டிற்கான நிதியியல் உறுதித்தன்மை மீளாய்வினை வெளியிட்டிருக்கிறது

2023ஆம் ஆண்டின் நிதியியல் உறுதித்தன்மை மீளாய்வானது நிதியியல் முறைமையில் காணப்பட்ட அபிவிருத்திகள், இடர்நேர்வுகள் அவற்றின் அடையாளம் காணப்பட்ட பாதிக்கப்படும் தன்மைகள் மற்றும் ஆய்விற்குரிய காலப்பகுதியில் அத்தகைய இடர்நேர்வுகளைக் கட்டுப்படுத்துவதற்காக இலங்கை மத்திய வங்கியினாலும் ஏனைய ஒழுங்குமுறைப்படுத்தல் நிறுவனங்களினாலும் மேற்கொள்ளப்பட்ட கொள்கை வழிமுறைகள் என்பனவற்றை உள்ளடக்கியிருப்பதோடு 2023 செத்தெம்பர் இறுதி வரையான தரவுகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இவ்வெளியீட்டின் இலத்திரனியல் பதிப்பினை இலங்கை மத்திய வங்கியின் வலைத்தளமான (http://www.cbsl.gov.lk) இல் பார்வையிடமுடியும்.

2023ஆம் ஆண்டிற்கான நிதியியல் உறுதித்தன்மை மீளாய்வின் சுருக்கமும் நிதியியல் உறுதித்தன்மையின் தோற்றப்பாடும் கீழே தரப்படுகின்றன: 

மாகாண ரீதியான மொத்த உள்நாட்டு உற்பத்தி (மா.மொ.உ.உ) - 2022

மேல், வட மேல், மத்திய மாகாணங்கள் இலங்கையின் பொருளாதாரத்தைத் தொடர்ந்தும் நிலைநிறுத்தின

மேல் மாகாணம் பெயரளவு மொ.உ.உற்பத்தியில் அதன் பங்கினை 43.4 சதவீதமாக அதிகரித்து 2022 காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்தில் அதன் பிடியினைத் தொடர்ந்தும் வலுப்படுத்தியது. மேல் மாகாணத்தின் வலிமையான பிரசன்னம் அநேகமான பொருளாதார நடவடிக்கைகளில் விசேடமாக பணிகள் மற்றும் கைத்தொழில் துறைகளில் காணக்கூடியதாகவுள்ளது. அதன்பின்னர் வடமேல் (11.2 சதவீதம்) மற்றும் மத்திய (10.0 சதவீதம்) மாகாணங்கள் பொருளாதாரத்தில் முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் அதிகூடிய பங்குகளைப் பதிவுசெய்துள்ளன.

இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (தயாரித்தல் மற்றும் பணிகள்) - 2023 ​நவெம்பர்

தயாரித்தல் மற்றும் பணிகள் இரண்டிற்குமான கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள் 2023 நவெம்பரில் அதிகரிப்பினைப் பதிவுசெய்தன 

தயாரிப்புக் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண், 2023 நவெம்பரில் மாதத்திற்கு மாதம் அடிப்படையில் 57.0 ஆக அதிகரித்தது. இது பருவகால காரணிகளால் தூண்டப்பட்டிருந்தது. அனைத்து துணைச் சுட்டெண்களிலிருந்தும் கிடைத்த சாதகமான பங்களிப்புடன் இச்சுட்டெண் 2023 மாச்சிற்குப் பின்னர் நடுநிலையான அடிப்படை அளவினை விஞ்சியது. 

பணிகள் துறை கொ.மு.சுட்டெண், 2023 நவெம்பரில் 59.4 கொண்ட சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்து, பணிகள் நடவடிக்கைகளில் துரிதமடைந்த விரிவடைதலை எடுத்துக்காட்டியது. புதிய வியாபாரங்கள், தொழில் நடவடிக்கைகள், தொழில்நிலை மற்றும் நடவடிக்கைக்கான எதிர்பார்க்கைகள் என்பவற்றில் அவதானிக்கப்பட்ட அதிகரிப்புக்கள் மூலம் இது முன்னிலை வகித்திருந்தது.

இலங்கையுடனான புதிய விரிவாக்கப்பட்ட நிதிய வசதி ஏற்பாட்டின் கீழான முதலாவது மீளாய்வினை பன்னாட்டு நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபை நிறைவுசெய்கின்றது

இலங்கையுடனான 48 மாத காலம் கொண்ட விரிவாக்கப்பட்ட நிதிய வசதியின் கீழ் முதலாவது மீளாய்வினை பன்னாட்டு நாணய நிதியத்தின் சபை நிறைவுசெய்து, அதன் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் மறுசீரமைப்புக்களுக்கு ஆதரவளிக்கும் பொருட்டு சி.எ.உ. 254 மில்லியன் (ஏறத்தாழ ஐ.அ.டொலர் 337 மில்லியன்) தொகைக்கான அணுகல் வசதியினை நாட்டிற்கு வழங்குகின்றது.

நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் இலங்கையின் செயலாற்றமானது திருப்திகரமாயமைந்தது. ஒன்றைத் தவிர்த்து அனைத்துச் செயலாற்றப் பிரமாணங்கள் மற்றும் ஒன்றைத் தவிர்த்து அனைத்துக் குறிகாட்டி இலக்குகள் யூன் இறுதியளவில் நிறைவேற்றப்பட்டுள்ளன. 2023 ஒத்தோபர்; இறுதியளவில் எட்டப்பட வேண்டிய கட்டமைப்புசார் அளவுகோல்கள் பூர்த்திசெய்யப்பட்டுள்ளன அல்லது தாமதமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, ஆளுகையினைக் கண்டறிகின்ற அறிக்கையினை அதிகாரிகள் வெளியிட்டு, ஆசியாவில் பன்னாட்டு நாணய நிதியத்தின் ஆளுகையினைக் கண்டறிகின்ற செயற்பாட்டினை மேற்கொண்ட முதலாவது நாடாக இலங்கையினைத் தடம்பதிக்கச் செய்துள்ளனர். 

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் முனைவர் நந்தலால் வீரசிங்க ஹொங் கொங்கில் 2023 நவெம்பர் 29 அன்று இடம்பெற்ற நிதியியல் உறுதிப்பாட்டு சபையின் ஆசியப் பிராந்திய ஆலோசனைக் குழுமக் கூட்டத்திற்கு இணைத்தலைமை வகித்தார்

ஆசியாவிற்கான நிதியியல் உறுதிப்பாட்டுச் சபை பிராந்திய ஆலோசனைக் குழு ஹொங் கொங் விசேட நிருவாகப் பிராந்தியத்தில் 2023 நவெம்பர் 29 அன்று கூடியதுடன்  அண்மைக்கால நிதியியல் சந்தை அபிவிருத்திகள் மற்றும் பிராந்தியம் மீதான அவற்றின் தாக்கம், வங்கியல்லா நிதியியல் இடையீட்டிலிருந்து தோன்றுகின்ற பாதிக்கப்படும்தன்மைகள், சில வளர்ந்துவரும் சந்தைகள் மற்றும் அபிவிருத்தியடைந்துவரும் பொருளாதாரங்களில் இறையாண்மை-வங்கி தொடர்பு தீவிரமடைதல் அத்துடன் மறைகுறிச்-சொத்து தொடர்புடைய இடர்நேர்வுகள் பற்றிய செயல்திறன்மிக்க ஒழுங்குபடுத்தலையும் மேற்பார்வையையும் ஊக்குவிப்பதற்கான வழிகள் என்பன பற்றி கலந்துரையாடியது. இவ் இடர்நேர்வுகளை அடையாளப்படுத்தல், கண்காணித்தல், கையாளுதல் என்பன பற்றிய தமது அனுபவங்களை உறுப்பினர்கள் பகிர்ந்துகொண்டதுடன் நிதியியல் முறைமைகளின் தாக்குப்பிடிக்கும்தன்மையை அதிகரிப்பதன் மீது நிதியியல் உறுதிப்பாட்டு சபை தொடர்ச்சியாக கவனம் செலுத்துவதையும் வரவேற்றனர். 

ஹொங் கொங் நாணய அதிகாரசபையின் பிரதம நிறைவேற்று அலுவலரும் நடப்பு உறுப்பு இணைத்தலைருமான திரு. எட்டி யூஈ மற்றும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரும் ஆசியாவிற்கான பிராந்திய ஆலோசனைக் குழுவின் தற்போதைய உறுப்பல்லாத இணைத்தலைவருமான முனைவர். நந்தலால் வீரசிங்க ஆகியோர் கூட்டத்திற்கு இணைத்தலைமை வகித்தனர். அவுஸ்ரேலியா, பூருனை தாருஸலாம், கம்போடியா, சீனா, ஹொங் கொங் விசேட நிர்வாகப் பிராந்தியம், இந்தியா, இந்தோனேசியா, யப்பான், கொரியா, மலேசியா, நியுசிலாந்து, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், இலங்கை, தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளின் நிதியியல் அதிகாரசபைகளை ஆசியாவிற்கான பிராந்திய ஆலோசனைக் குழும உறுப்புரிமை உள்ளடக்குகின்றது. 

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட முதன்மைப் பணவீக்கம் 2023 நவெம்பரில் அதிகரித்தது

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு, 2021=100)  ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2023 ஒத்தோபரில் 1.5 சதவீதத்திலிருந்து 2023 நவெம்பரில் 3.4  சதவீதத்திற்கு அதிகரித்தது. முதன்மைப் பணவீக்கத்தில் ஏற்பட்ட இவ்வதிகரிப்பானது அநேகமாக 2023 நவெம்பரில் இலங்கை மத்திய வங்கியினால் எதிர்பார்க்கப்பட்ட எறிவுகளிற்கு இசைவாக காணப்படுகின்றது.

Pages

சந்தை அறிவிப்புகள்