தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (தேநுவிசு, 2013=100)1 ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2022 ஓகத்தின் 70.2 சதவீதத்திலிருந்து 2022 செத்தெம்பரில் 73.7 சதவீதத்திற்கு அதிகரித்தது. ஆண்டிற்கு ஆண்டு பணவீக்கத்தின் இத்தகைய அதிகரிப்பு, உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டிலும் ஏற்பட்ட மாதாந்த அதிகரிப்புக்களால் பிரதானமாகத் தூண்டப்பட்டிருந்தது. அதற்கமைய, உணவுப் பணவீக்கம், (ஆண்டிற்கு ஆண்டு) 2022 ஓகத்தின் 84.6 சதவீதத்திலிருந்து 2022 செத்தெம்பரில் 85.8 சதவீதத்திற்கு அதிகரித்த அதேவேளை, உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2022 ஓகத்தின் 57.1 சதவீதத்திலிருந்து 2022 செத்தெம்பரில் 62.8 சதவீதத்திற்கு அதிகரித்தது.















கௌரவ நிதி அமைச்சரின் ஒப்புதலுடன் நாணயச் சபையானது உதவி ஆளுநரும் நாணயச் சபைக்கான செயலாளருமான திருமதி. கே. எம். ஏ. என். டவுளுகல அவர்களை 2022 ஒத்தோபர் 07ஆம் திகதி தொடக்கம் நடைமுறைக்குவரும் வகையில் இலங்கை மத்திய வங்கியின் துணை ஆளுநர் பதவிக்கு பதவியுயர்த்தியுள்ளது.
