Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

நாணயக்கொள்கை மீளாய்வு: இல. 01 - 2022 சனவரி

நாணய மற்றும் ஏனைய கொள்கை வழிமுறைகள் பேரண்டப் பொருளாதார உறுதிப்பாட்டினை வலுப்படுத்துமென எதிர்பார்க்கப்படுகின்றது

தற்போதுள்ள மற்றும் எதிர்பார்க்கப்பட்ட பேரண்டப் பொருளாதார அபிவிருத்திகளை பரிசீலனையிற்கொண்டு, இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபையானது 2022 சனவரி 19ஆம் நாளன்று இடம்பெற்ற அதனது  கூட்டத்தில் பேரண்டப் பொருளாதார உறுதிப்பாட்டினை வலுப்படுத்தும் நோக்குடன் பல்வேறு கொள்கை வழிமுறைகளை மேற்கொள்வதற்குத் தீர்மானித்தது. அதற்கமைய, நாணயச்சபையானது பின்வரும் தீர்மானங்களை மேற்கொண்டிருந்தது:

அ) மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் முறையே 5.50 சதவீதத்திற்கும் 6.50 சதவீதத்திற்கும் ஒவ்வொன்றையும் 50 அடிப்படைப் புள்ளிகளால் அதிகரித்தல்;  

ஆ) எரிபொருள் கொள்வனவுகளுக்காக அத்தியாவசிய இறக்குமதிப் பட்டியல்களின் நிதியிடலை உரிமம்பெற்ற வங்கிகளின் வெளிநாட்டுச் செலாவணி உட்பாய்ச்சல்களுக்கு விகிதசமமாக அவ்வங்கிகளுக்கிடையில் பகிர்ந்தளித்தல்;

இ) அனைத்துப் பதிவுசெய்யப்பட்ட சுற்றுலாப்பயணி நிறுவனங்களும் இலங்கைக்கு வெளியில் வதிகின்ற ஆட்களுக்கு வழங்கப்படும் பணிகள் தொடர்பில் வெளிநாட்டுச் செலாவணியை மாத்திரம் ஏற்றுக்கொள்வதனைக் கட்டாயமாக்குதல்;

ஈ)  “உள்முக தொழிலாளர் பணவனுப்பல்கள் மீதான ஊக்குவிப்புத் திட்டம்” என்ற திட்டத்தின் கீழ் ஐ.அ.டொலர் ஒன்றிற்கு வழங்கப்படும் ரூ.2.00 ஊக்குவிப்புத் தொகைக்கு மேலதிகமாக தொழிலாளர் பணவனுப்பல்களுக்காகக் கொடுப்பனவுசெய்யப்படும் ஐ.அ.டொலர் ஒன்றிற்கு மேலதிகமாக ரூ.8.00 கொடுப்பனவை வழங்குவதனை 2022 ஏப்பிறல் 30 வரை நீடித்தல், 2022 பெப்புருவரி 01 தொடக்கம் நடைமுறைக்குவரும் வகையில் உரிமம்பெற்ற வங்கிகள் அத்துடன் ஏனைய முறைசார் வழிக;டாக ரூபாய்க் கணக்குகளுக்கு பணம் அனுப்பப்படுகின்ற போது பரிமாற்றல் ஒன்றிற்கு ரூ.1,000 கொடுப்பனவு செய்வதன் மூலம் புலம்பெயர் இலங்கைத் தொழிலாளர்களுக்கு ஏற்படும் பணப் பரிமாற்றல் செலவினை மீளளித்தல் அத்துடன் புலம்பெயர் தொழிலாளர்களின் வெளிநாட்டு நாணய மற்றும் ரூபாவில் குறித்துரைக்கப்பட்ட வைப்புகள் இரண்டிற்கும் உயர்வான வட்டி வீதங்களை அறிமுகப்படுத்தல்.

இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் – 2021 திசெம்பர்

தயாரிப்பு நடவடிக்கைகள், மாதத்திற்கு மாதம் அடிப்படையில் 2021 திசெம்பரில் விரிவடைதலை நிலைநிறுத்தி 58.1 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்துள்ளது என்பதனை தயாரிப்பு கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் எடுத்துக்காட்டுகின்றது. புதிய கட்டளைகள் மற்றும் உற்பத்திகளில் ஏற்பட்ட விரிவடைதல் இதற்கு பிரதான காரணமாக அமைந்தது. மாத காலப்பகுதியில் தொழில்நிலை தவிர்ந்த அனைத்து துணைச் சுட்டெண்களும் அதிகரித்தன. 

பணிகள் துறை கொ.மு.சுட்டெண், திசெம்பரில் 62.4 சுட்டெண் பெறுமதியை அண்மித்து 2021இன் இறுதியில் வலிமைபெற்றது. புதிய வியாபாரங்கள், தொழில் நடவடிக்கைகள், தொழில்நிலை, மற்றும் நடவடிக்கைக்கான எதிர்பார்கைகள் துணைச் சுட்டெண்களில்  அவதானிக்கப்பட்ட அதிகரிப்புக்கள் மூலம் இவ்வதிகரிப்பு துணையளிக்கப்பட்டிருந்தது. 

ஊழியர் சேமலாப நிதியத்தின் பட்டியலிடப்பட்ட பங்குரிமை சொத்துப்பட்டியலின் பெறுமதி 2021 இறுதியில் ரூ. 84 பில்லியன் கொண்ட செலவிற்கெதிராக ரூ. 28 பில்லியன் அதிகரிப்புடன் ரூ. 112 பில்லியன் சந்தைப் பெறுமதியைப் பதிவுசெய்துள்ளது

நாணயச் சபையால் முகாமைச் செய்யப்படுகின்ற ஊழியர் சேமலாப நிதியமானது இலங்கையின் பாரிய ஓய்வூநிதியமாக விளங்குகின்றது. ஊழியர் நிதியத்தின் பெறுமதியைப் பாதுகாக்கின்ற அதேவேளை அதன் உறுப்பினர்களுக்கான ஆதாயங்களை அதிகரிக்கின்ற நீண்டகால நோக்குடன் அதன் முதலீட்டுச் சொத்துப்பட்டியலை இந்நிதியம் பேணுகின்றது. இந்நிதியம், குறித்த சில ஏற்றுக்கொள்ளப்பட்ட இடர்நேர்வு வழியலகுகளினுள் தொழிற்படுவதுடன் அதன் 94 சதவீதமான நிதியங்களை அரசாங்கப் பிணையங்களிலும் எஞ்சியவற்றை பட்டியலிடப்பட்ட மற்றும் பட்டியலிடப்படாத பங்குரிமைகள், கம்பனித் தொகுதிக்கடன்கள், நம்பிக்கைச் சான்றிதழ்கள் அத்துடன் ஏனைய பணச் சந்தை சாதனங்கள் போன்றவற்றிலும் முதலீடுசெய்துள்ளது. குறித்துரைக்கப்பட்ட வரையறைகளுக்குட்பட்டு நாணயச் சபையினால் ஒப்புதலளிக்கப்பட்ட உபாயச் சொத்து ஒதுக்கீட்டில் வழங்கப்பட்டவாறான தகைமையுடைய சொத்து வகுப்புக்களில் பன்முகப்படுத்தப்பட்ட சொத்துப்பட்டியலில் நிதியங்கள் முதலிடப்பட்டுள்ளன. 2020.12.31 அன்றுள்ளவாறான ஊழியர் சேமலாப நிதியத்தின் முதலீட்டுச் சொத்துப்பட்டியலின் சந்தைப் பெறுமதியானது ரூ. 3,243 பில்லியனாகக் காணப்பட்டது.

முதிர்ச்சியடைகின்ற நாட்டிற்கான பன்னாட்டு முறியினை 2022 சனவரியில் தீர்ப்பனவு செய்வதற்கான ஏற்பாடுகளுக்கு மத்தியில் எஸ் அன்ட் பி மூலமான நியாயமற்ற தரப்படுத்தல் நடவடிக்கை

இலங்கை அரசாங்கமானது அதன் முதிர்ச்சியடைகின்ற வெளிநாட்டுப் படுகடன் பொறுப்புக்களை மீளக்கொடுப்பனவு செய்வதற்குப் போதியளவு நிதியங்களை அக்கறையுடன் ஏற்பாடுசெய்துள்ள காலகட்டத்தில் அத்துடன் 2022 சனவரி 18 அன்று முதிர்ச்சியடைகின்ற நாட்டிற்கான பன்னாட்டு முறி உள்ளடங்கலாக அதன் படுகடன் தீர்ப்பனவுக் கடப்பாடுகளைத் தீர்ப்பதற்கான வலுவான அர்ப்பணிப்பு பற்றி அது மீண்டும் மீண்டும் வழங்கும் உத்தரவாதங்களுக்கு மத்தியில் எஸ் அன்ட் பி குளோபல் ரேட்டிங்ஸ் மூலமான இன்றைய அறிவிப்பு பற்றி இலங்கை அரசாங்கம் குழப்பமடைந்துள்ளது.

அலுவல்சார் ஒதுக்கு நிலைமையின் உள்ளடக்கம் தொடர்பிலான தெளிவாக்கம்

மத்திய வங்கியின் பன்னாட்டு ஒதுக்கு முகாமைத்துவமானது மாறும்தன்மை கொண்டதாகவும் நுட்ப செயன்முறையுடையதாகவும் காணப்படுவதுடன், இது பொதுவாக நாட்டின் வெளிநாட்டுச் சொத்துக்கள் உடனடியாக கிடைப்பனவாகவுள்ளதனையும் வரையறுக்கப்பட்ட குறிக்கோள்களை அடையும் விதத்தில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதனையும் உறுதிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சொத்துக்களின் உள்ளடக்கம், நாணயக் கலவை, திரவத்தன்மை தேவைப்பாடுகள், தவணைக் காலம், இலாபத்தன்மை, பாதுகாப்பு போன்ற ஏனைய முதலீட்டுச் சாதனங்களுடன் தொடர்புபட்ட பண்புகளுடன் பொருத்தமான ஒதுக்கு முகாமைத்துவக் கொள்கைகளின் பின்பற்றுதலானது நாட்டிற்கு நாடு மாறுபடுவதுடன் நாட்டின் குறிப்பிட்ட சூழ்நிலைகள் மற்றும் பொருளாதார முன்னுரிமைகளைச் சார்ந்து காணப்படும். 

ஏற்றுமதிப் பெறுகைகளின் மீளனுப்பல் மற்றும் மாற்றல் மற்றும் உயர்ந்தளவிலான தொழிலாளர் பணவனுப்பல்களைக் கவர்வதற்கான ஊக்குவிப்புத் திட்டம்

இலங்கைக்கான ஏற்றுமதிப் பெறுகைகளின் மீளனுப்பல் மற்றும் அத்தகைய ஏற்றுமதிப் பெறுகைகளை இலங்கை ரூபாவாக மாற்றுதல் தொடர்பில் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட விதிகள் சுயநலங்கொண்ட குறித்த சில தரப்பினரால் தவறுதலாகப் பொருட்கோடல் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, உரிமம் பெற்ற வங்கிகளினால் தொழிலாளர் பணவனுப்பல்கள் முழுவதையும் அத்தகைய வெளிநாட்டுச் செலாவணி நிதிப் பெறப்பட்டதும் வலுக்கட்டாயமாக இலங்கை ரூபாவாக மாற்றுவதனை இலங்கை மத்திய வங்கியின் விதிகள் தேவைப்படுத்துகின்றன என வாத ஆதாரமற்ற ஊகம் விசமத்தனமாகப் பரப்பப்பட்டுள்ளது. ஏற்றுமதிப் பெறுகைகளின் மாற்றல் மீதான விதிகள் தொழிலாளர் பணவனுப்பல்களுக்குப் பொருந்தாது. உரிமம் பெற்ற வங்கிகள் மற்றும் ஏனைய முறைசார் வழிகளினூடாக தமது வருவாய்களை அனுப்புகின்ற புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எந்தவொரு வர்த்தக வங்கியிலும் அத்தகைய நிதியை வெளிநாட்டுச் செலாவணியில் வைத்திருக்கலாம். இதற்கமைய வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர் தமது பணவனுப்பல்களை இலங்கை ரூபாவாக மாற்ற வேண்டிய கட்டாயமில்லை.

Pages

சந்தை அறிவிப்புகள்