வெளிநாட்டுத்துறைச் செயலாற்றம் - 2022 மே

2023இன் இதுவரையிலான காலப்பகுதியில் ஓன்றுசேர்ந்த வர்த்தகப் பற்றாக்குறையானது தொடர்ந்தும் மிதமடைந்து காணப்பட்டது. வர்த்தகப் பற்றாக்குறையானது 2022 பெப்புருவரியிற்கு பின்னர் முதற் தடவையாக 2023 மேயில் ஓராண்டிற்கு முன்னைய நிலையுடன் ஒப்பிடுகையில் விரிவடைந்து காணப்பட்டது.

தொழிலாளர் பணவனுப்பல்கள் 2023 மேயில் முன்னைய மாதத்திலும் பார்க்க உயர்வானதாக பதிவுசெய்யப்பட்டன. சுற்றுலாத்துறையிலிருந்தான வருவாய்கள் பருவகால தாக்கங்கள் காரணமாக 2023 ஏப்பிறலிலும் பார்க்க குறைவாக காணப்பட்டபோதிலும் வலுவானதொரு வளர்ச்சியினைப் பதிவுசெய்தன.

2023 மே மாத காலப்பகுதியில் செலாவணி வீதத்தில் 8 சதவீதத்திலான குறிப்பிடத்தக்க உயர்வடைதலொன்று காணப்பட்டது.

2023 மே மாத காலப்பகுதியில் அரச பிணையங்கள் சந்தையில் மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டு முதலீடுகள் குறிப்பிடத்தக்களவிலான தேறிய உட்பாய்ச்சலொன்றினைப் பதிவுசெய்தன.

ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்தான ஐ.அ.டொலர் 350 மில்லியன் பெறுகை மற்றும் சந்தையிலிருந்து மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டுச் செலாவணியின் பாரிய தேறிய கொள்வனவுகள் என்பன மொத்த அலுவல்சார் ஒதுக்கு மட்டத்தை 2023 ஏப்பிறல் இறுதியில் காணப்பட்ட ஐ.அ.டொலர் 2.8 பில்லியனுடன் ஒப்பிடுகையில் மே மாத இறுதியளவில் ஐ.அ.டொலர் 3.5 பில்லியனாக அதிகரித்தன.

முழுவடிவம்

Published Date: 

Thursday, June 29, 2023