Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

இலங்கை மத்திய வங்கி கொள்கை வட்டி வீதங்களை மேலும் குறைக்கின்றது

2023ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் கீழ் நாணயக்கொள்கைச் சபையினால் மேற்கொள்ளப்பட்;ட முதலாவது நாணயக்கொள்கை மீளாய்வு 2023 ஒத்தோபர் 04ஆம் நாளன்று நடைபெற்றது. இம்மீளாய்வில், மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் முறையே 10.00 சதவீதத்திற்கும் 11.00 சதவீதத்திற்கும் 100 அடிப்படைப் புள்ளிகளினால் குறைப்பதற்குச் சபை தீர்மானித்தது. தாழ்ந்தளவிலான பணவீக்கம் மற்றும் உள்நாட்டுப் பொருளாதாரத்தில் சாதகமான பணவீக்க எதிர்பார்க்கைகள் என்பன உள்ளடங்கலாக தற்போதைய மற்றும் எதிர்பார்க்கப்படுகின்ற அபிவிருத்திகளின் உன்னிப்பான பகுப்பாய்வொன்றினைத் தொடர்ந்து நடுத்தர காலத்தில் பணவீக்கத்தினை எதிர்பார்க்கப்படுகின்ற 5 சதவீத மட்டத்தில் உறுதிநிலைப்படுத்துவதுடன் அதன்மூலம் பொருளாதாரம் அதன் உள்ளார்ந்த ஆற்றல்வாய்ந்த வளர்ச்சியினை அடைவதனை இயலுமைப்படுத்தும் நோக்குடன் சபை இத்தீர்மானத்தினை மேற்கொண்டது. வட்டி வீதங்களைக் குறைப்பதற்கு மத்திய வங்கியினால் உரிமம்பெற்ற வங்கிகளுக்கு வெளியிடப்பட்ட பணிப்புரைகள் மற்றும் அரச பிணையங்கள் மீதான இடர்நேர்வு மிகையின் குறிப்பிடத்தக்க குறைவு என்பன உள்ளடங்கலாக முன்னர் நடைமுறைப்படுத்தப்பட்ட நாணயக்கொள்கையின் குறிப்பிடத்தக்க தளர்வடைதலுடன் இணைந்து கொள்கை வட்டி வீதங்களின் இக்குறைப்பு எதிர்வருகின்ற காலப்பகுதியில் சந்தை வட்டி வீதங்களில் குறிப்பாக, கடன்வழங்கல் வீதங்களில் கீழ்நோக்கிய சீராக்கமொன்றினை துரிதப்படுத்துமென சபை எதிர்பார்க்கின்றது. நாணய நிலைமைகளின் தொடர்ச்சியான தளர்த்தலின் நன்மைகளைத் தனிப்பட்டவர்களுக்கும் வியாபாரங்களிற்கும் போதுமானளவிலும் விரைவாகவும் ஊடுகடத்துவதுடன் அதன்மூலம் பொருளாதாரத்தின் எதிர்பார்க்கப்படுகின்ற மீளெழுச்சிக்கு ஆதரவளிக்குமாறு நிதியியல் துறை வலியுறுத்தப்படுகின்றது. 

வெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் - 2023 ஓகத்து

வணிகப்பொருள் வர்த்தகப் பற்றாக்குறையானது ஓராண்டிற்கு முன்னைய நிலையுடன் ஒப்பிடுகையில் 2023 ஓகத்தில் இறக்குமதிச் செலவினத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியிலும் பார்க்க ஏற்றுமதி வருவாய்களில் ஏற்பட்ட உயர்ந்தளவிலான வீழ்ச்சியினால் உந்தப்பட்டு விரிவடைந்தது. இருப்பினும், 2023 யூலையுடன் ஒப்பிடுகையில் ஏற்றுமதி வருவாய்கள் மற்றும் இறக்குமதிச் செலவினம் ஆகிய இரண்டும் அதிகரித்தன.

தொழிலாளர் பணவனுப்பல்கள் மற்றும் சுற்றுலாத்துறையிலிருந்தான வருவாய்கள் ஆகிய இரண்டும் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2023 ஓகத்தில் குறிப்பிடத்தக்க மேம்பாடுகளைப் பதிவுசெய்தன.

2023 ஓகத்தில், அரச பிணையங்கள் சந்தையில் மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டு முதலீடு தேறிய வெளிப்பாய்ச்சலொன்றினைப் பதிவுசெய்தவேளையில் கொழும்புப் பங்குப் பரிவர்த்தனைக்கான வெளிநாட்டு முதலீடுகள் 2023 ஓகத்தில் தேறிய வெளிநாட்டு உட்பாய்ச்சலொன்றினைப் பதிவுசெய்தன.

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட முதன்மைப் பணவீக்கம் 2023 செத்தெம்பரில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியொன்றைப் பதிவுசெய்தது

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு, 2021=100)  ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2023 ஓகத்தின் 4.0 சதவீதத்திலிருந்து 2023 செத்தெம்பரில் 1.3 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. முதன்மைப் பணவீக்கத்தில் ஏற்பட்ட இவ்வீழ்ச்சியானது, பெரும்பாலும் இலங்கை மத்திய வங்கியினால் 2023 யூலையில் எதிர்பார்க்கப்பட்ட எறிவுகளிற்கு இசைவாக காணப்படுகின்றது.

Release of “Sri Lanka Socio-Economic Data – 2023” Publication

“Sri Lanka Socio-Economic Data – 2023”, the annually published data folder of the Central Bank of Sri Lanka, is now available for public information. The current data folder is the 46th volume of the series.

This easy-to-carry booklet contains information categorised under 14 topics, namely, Country Profile; Key Economic Indicators; Country Comparisons; Socio Economic Conditions; Human Resources; National Accounts; Agriculture; Industry; Economic and Social Infrastructure; Prices and Wages; External Trade and Tourism; External Finance; Government Finance; and Money, Banking and Finance. As the data folder presents a wide range of socio-economic data of current interest in summary form, it will be a very useful reference material for policy makers, researchers, academics, professionals, students and the general public.

கட்டடவாக்கத் தொழிற்துறைக்கான இலங்கை கொள்வனவு முகாமையாளர்களின் சுட்டெண் - ஓகத்து 2023

கட்டடவாக்கத் தொழிற்துறை 2023 ஓகத்தில் குறைவடைந்த மட்டத்தில் தொடர்ந்தும் செயலாற்றியது, இருந்தும் 47.0 கொண்ட மொத்த நடவடிக்கைச் சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்து நடுநிலையான அடிப்படை அளவுமட்டத்தை நோக்கிச் சென்றது. பதிலிறுப்பாளர்கள் குறிப்பிடுவதற்கமைய,  உயர்வான போட்டிமிக்க விலைக்கோரல் விலைக்குறிப்பீடு சமர்ப்பித்தல் செயன்முறையில் மட்டுப்படுத்தப்பட்டளவில் கிடைக்கப்பெறுகின்ற கருத்திட்டங்களைப் பெற்றுக்கொள்வதற்கு நிறுவனங்கள் சந்தை விலையை விடவும் விலைக்குறைப்பதற்கு முனைந்தன.

உள்நாட்டு படுகடன் மேம்படுத்துகை நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் அரசாங்கத்திற்கான இலங்கை மத்திய வங்கியின் குறித்துரைக்கப்பட்ட முதிர்ச்சிகளுடன்கூடிய செலுத்தவேண்டிய கொடுகடன்களை கைமாற்றத்தக்க படுகடன் சாதனங்களாக மாற்றுதல்

2023ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் 129(2)ஆம் பிரிவின் பிரகாரம் நிலுவையாகவிருக்கின்ற இலங்கை மத்திய வங்கியிடமிருந்து கிடைத்த அரசாங்கத்திற்கான தற்காலிக முற்பணங்கள் மற்றும் முதலாந்தரச் சந்தையில் இலங்கை மத்திய வங்கியினால் கொள்வனவு செய்யப்பட்ட செலுத்தவேண்டிய திறைசேரி உண்டியல்கள் என்பவற்றை 2023 செத்தெம்பர் 21ஆம் திகதியன்று பின்வருமாறு பத்து (10) கிரமமாகக் குறைவடையும் நிலையான கூப்பன்* புதிய திறைசேரி முறிகளாகவும் பன்னிரண்டு (12) ஏற்கனவே காணப்படுகின்ற திறைசேரி உண்டியல்களாகவும் மாற்றம்செய்யப்பட்டுள்ளன:

முழுவடிவம்

Pages

சந்தை அறிவிப்புகள்