Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

“இலங்கை மத்திய வங்கிச் சட்டமூலம்” பற்றி இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் முனைவர் நந்தலால் வீரசிங்க வழங்கும் பகிரங்க விரிவுரை (சிங்கள மொழிமூலம்)

சட்டமாக நிறைவேற்றப்பட்டவுடன் இலங்கை மத்திய வங்கியினை ஆளுகின்ற சட்டவாக்கமாக வரவுள்ள இலங்கை மத்திய வங்கிச் சட்டமூலம் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மேலும்,  இது பொதுமக்களின் அபிப்பிராயங்களுக்காக முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்நோக்கில், முன்மொழியப்பட்ட சட்டமூலம் தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் முனைவர் நந்தலால் வீரசிங்க, பகிரங்க விரிவுரையொன்றினை சிங்கள மொழிமூலம் வழங்கவுள்ளதுடன் அதனைத்தொடர்ந்து வளவாளர்களைக்கொண்ட குழாமொன்றுடனான கலந்தாராய்வொன்றும் இடம்பெறும். இதில் எவையேனும் கரிசனைகள் ஏதுமிருப்பின் தெரிவுபடுத்திக்கொள்வதற்கான வாய்ப்பும் அவையோருக்கு வழங்கப்படும்.

மத்திய வங்கியின் வங்கித்தொழில் கற்கைகளுக்கான ஆய்வுநிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வு 2023 மாச்சு 16 அன்று ராஜகிரிய, ஸ்ரீ ஜயவர்த்தனபுர, இல.58 இல் அமைந்துள்ள வங்கித்தொழில் கற்கைகளுக்கான ஆய்வுநிலையத்தின் கேட்போர் கூடத்தில் பி.ப.2.30 தொடக்கம் பி.ப.4.30 வரை இடம்பெறும்.

இலங்கையின் 75ஆவது சுதந்திரக் கொண்டாட்டத்தைக் குறிக்கும் முகமாக வெளியிடப்பட்ட ஞாபகார்த்த நாணயக் குற்றியின் விற்பனை

இலங்கையின் 75ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்தை குறிக்கும் முகமாக வெளியிடப்பட்ட சுற்றோட்டம் செய்யப்படாத மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான ஞாபகார்த்த நாணயக் குற்றிகள், 2023.03.09ஆம் திகதி தொடக்கம் முதலில் வருவோருக்கு முதலில் வழங்குதல் அடிப்படையில் தனிப்பட்ட அடையாள விபரங்களைப் பெற்று, குற்றியொன்றுக்கு ரூ.6,000 விலையில் விற்பனைக்காகக் கிடைக்கப்பெறும் என்பதுடன் பின்வரும் மத்திய வங்கி விற்பனை நிலையங்களில் ஆளொருவருக்கு ஒரு குற்றி வீதம் என விற்பனை மட்டுப்படுத்தப்படும். 

முழுவடிவம்

தற்போதைய பேரண்டப் பொருளாதார நிலைமைகளால் பாதிக்கப்பட்ட நுண்பாக, சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளுக்கும் தனிப்பட்டவர்களுக்குமான சலுகை வழிமுறைகள்

கொவிட்-19 நோய்ப்பரவல் அத்துடன் அதனைத்தொடர்ந்து வந்த பேரண்டப் பொருளாதார அபிவிருத்திகள் மூலம் பாதிக்கப்பட்ட கடன் பெறுநர்களுக்கு உதவும் முகமாக இலங்கை மத்திய வங்கியினால் மேற்பார்வை செய்யப்படுகின்ற நிதியியல் நிறுவனங்க;டாக பலவகையான கடனை காலந்தாழ்த்தி செலுத்தும் வசதிகளையும் சலுகைத் திட்டங்களையும் இலங்கை மத்திய வங்கி நடைமுறைப்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட கடன் பெறுநர்களுக்காக நீடிக்கப்பட்ட மீள்கொடுப்பனவுக் காலங்கள், சலுகை வட்டி வீதங்கள், தொழில்படு மூலதனக் கடன்கள், படுகடனை காலந்தாழ்த்திச் செலுத்தும் வசதி மற்றும் கொடுகடன் வசதிகளை மறுசீரமைத்தல்ஃ மீள அட்டவணைப்படுத்தல் போன்றவற்றை இத்திட்டங்கள் உள்ளடக்கியுள்ளன.

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் திரு. எச். பீ. திசநாயக்கா காலமாகிவிட்டார்

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் திரு. எச். பீ. திசநாயக்கா காலமாகிவிட்டார் என்பதனை நாம் ஆழ்ந்த வருத்தத்துடன் அறியத்தருகிறோம்.

அவர் 2023 மாச்சு 05ஆம் திகதி அவரது 85 ஆவது வயதில் மறைந்தார்.

திரு. திசநாயக்கா இலங்கை மத்திய வங்கியின் 9 ஆவது ஆளுநராக 1992 யூலை 01 இலிருந்து 1995 நவெம்பர் 15ஆம் திகதி வரை தொழிற்பட்டார். ஆளுநராக கடமைகளை பொறுப்பேற்பதற்கு முன்னர் அவர், சுங்கத்தின் பணிப்பாளர் நாயகமாகவும் இலங்கை மத்திய வங்கியிலிருந்து ஓய்வுபெற்றதன் பின்னர் 1995 இலிருந்து 1998 வரையான காலப்பகுதியில் பன்னாட்டு நாணய நிதியத்தின் மாற்று நிறைவேற்றுப் பணிப்பாளராகவும் பணியாற்றினார்.

திரு. எச். பீ. திசநாயக்காவின் பூதவுடல் அவரது இல்லத்தில் (இல.2/84, மிஹிரி உயன, பழைய கொட்டாவ வீதி, மிறிகன, நுகேகொட) 07 மாச்சு (இன்று) பி.ப 1.00 மணி வரை வைக்கப்படுவதுடன் தகனக்கிரிகைகள் மிறிகன பொதுமயானத்தில் இடம்பெறும்.

இலங்கை மத்திய வங்கி கொள்கை வட்டி வீதங்களை உயர்த்துகின்றது

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது 2023 மாச்சு 03ஆம் நாளன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில் மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் 2023 மாச்சு  03ஆம் நாள் வியாபார முடிவிலிருந்து முறையே 15.50 சதவீதத்திற்கும் 16.50 சதவீதத்திற்கும் 100 அடிப்படைப் புள்ளிகளினால் உயர்த்துவதற்குத் தீர்மானித்துள்ளது. 

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட முதன்மைப் பணவீக்கம் 2023 பெப்புருவரியில் தளர்வடைந்தது

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு, 2021=100)  ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2023 சனவரியின் 51.7 சதவீதத்திலிருந்து 2023 பெப்புருவரியில் 50.6 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. முதன்மைப் பணவீக்கத்தில் இவ்வீழ்ச்சியானது, 2023 சனவரியில் இலங்கை மத்திய வங்கியினால் எதிர்பார்க்கப்பட்ட பணவீக்க வேகக்குறைவுப் பாதைக்கு இசைவாக பரந்தளவில் காணப்படுகின்றது.

Pages

சந்தை அறிவிப்புகள்