Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

இலங்கை மத்திய வங்கி நாணயக் கொள்கை நிலையினை மேலும் இறுக்கமடையச் செய்கின்றது

வெளிவாரி அதிர்ச்சிகளின் தீவிரத்தன்மையையும் உள்நாட்டுப் பொருளாதார நடவடிக்கைக்கான தொடர்ச்சியான இடையூறுகளையும் பரிசீலனையிற்கொண்டு, அத்தகைய பொருளாதாரச் சிக்கல்களை வெற்றிகொள்வதற்கு ஒட்டுமொத்த பொருளாதாரத்தின் மீது தாக்கத்தைக் கொண்டுள்ள ஏனைய முயற்சிகளுடன் இணைத்து மரபுசார்ந்த மற்றும் மரபுசாராத வழிமுறைகள் இரண்டையும் உள்ளடக்குகின்ற அனைத்தையுமுள்ளடக்கிய கொள்கைசார்ந்த திட்டமொன்று அத்தியாவசியமானது என நாணயச் சபை அபிப்பிராயப்பட்டது.

அதற்கமைய, உலகளாவிய மற்றும் உள்நாட்டு ரீதியாகவும் தற்போதுள்ள மற்றும் எதிர்பார்க்கப்படுகின்ற பேரண்டபொருளாதார அபிவிருத்திகளை கவனமாக பரிசீலனையிற்கொண்டதன் பின்னர், இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது 2022 மாச்சு 03ஆம் நாளன்று இடம்பெற்ற அதன் கூட்டத்தில், 2022 சனவரியில் பின்பற்றப்பட்ட அதன் நிலைப்பாட்டை மீளவும் வலுப்படுத்துவதற்கு தீர்மானித்ததுடன், பின்வரும் தீர்மானங்களையும் மேற்கொண்டிருந்தது:

அதிகாரமளிக்கப்படாத வெளிநாட்டு நாணய வணிகம் பற்றிய தகவல்களை வழங்குமாறு இலங்கை மத்திய வங்கி பொதுமக்களைக் கோருகின்றது

இலங்கையில் வெளிநாட்டு நாணயங்களைக் கொள்வனவுசெய்வதற்கான, விற்பனைசெய்வதற்கான, பரிமாற்றம்செய்வதற்கான அனுமதி, அதிகாரமளிக்கப்பட்ட வணிகர்களுக்கும் (அதாவது உரிமம்பெற்ற வங்கிகள்) இலங்கை மத்திய வங்கியினால் நியமிக்கப்பட்ட நாணய மாற்றுநர்களுக்கும் மாத்திரம் வழங்கப்பட்டுள்ளது.

ஆகையினால், வெளிநாட்டு நாணயத்தின் கொள்வனவு, விற்பனை அல்லது பரிமாற்றம் என்பன அதிகாரமளிக்கப்பட்ட வணிகர் ஒருவர் ஊடாக அல்லது அதிகாரமளிக்கப்பட்ட நாணய மாற்றுநர் ஊடாக மாத்திரமே மேற்கொள்ளப்படல் வேண்டும்.

இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (கொ.மு.சு) – 2022 சனவரி

தயாரிப்பு கொள்வனவு முகாமையாளர் சுட்டெண், 2021 திசெம்பருடன் ஒப்பிடுகையில் 0.6 சுட்டெண் புள்ளிகளைக் கொண்ட அதிகரிப்புடன் 2022 சனவரியில் 58.7 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்தது. மாதகாலப்பகுதியில் தொழில்நிலையில் மீட்சியுடன் ஒன்றிணைந்து புதிய கட்டளைகள், உற்பத்தி என்பவற்றில் பதிவாகிய மேம்பாடுகள் இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. மேலும், மாதத்திற்கு மாதம் அடிப்படையில் கொள்வனவுகளின் இருப்பு அதிகரித்த அதேவேளை நிரம்பலர்களின் விநியோக நேரம் நீட்சியடைந்தது.

பணிகள் கொ.மு.சுட்டெண்ணானது, 57.5 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்து 2022 இன் தொடக்கத்தில் பணிகள் துறையில் தொடர்ச்சியான விரிவடைதலினை எடுத்துக்காட்டியது. புதிய வியாபாரங்கள், தொழில் நடவடிக்கைகள், தொழில்நிலை மற்றும் நடவடிக்கைக்கான எதிர்பார்க்கைகள் துணைச் சுட்டெண்களில் அவதானிக்கப்பட்ட அதிகரிப்புக்கள், இவ்வதிகரிப்பிற்கு துணையளித்திருந்தன. 

இலங்கை அபிவிருத்தி முறிகளின் நேரடி வழங்கல் ஊடாக திரட்டப்பட்ட நிதியங்கள்

இலங்கை அபிவிருத்தி முறிகளில் முதலீடுகளை ஊக்குவிப்பதற்கு இலங்கை மத்திய வங்கி பல்வேறு வழிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அறிமுகப்படுத்தப்பட்ட வழிமுறைகளின் செயல்திறன்வாய்ந்த தன்மையினை உறுதிப்படுத்தும் விதத்தில் 2022 சனவரி 01 தொடக்கம் 2022 பெப்புருவரி 15 வரை இலங்கை அபிவிருத்தி முறிகளின் நேரடி வழங்கல் வாயிலாக ஐ.அ.டொலர் 111.5 மில்லியன் கொண்ட தொகையுடைய நிதியங்கள் திரட்டப்பட்டுள்ளன.

மேற்குறித்த காலப்பகுதியின் போது இலங்கை அபிவிருத்தி முறிகளில் முதலீடுகள், மூன்று மாதங்களிலிருந்து ஐந்து வருடங்களைக் கொண்ட வீச்சுடைய முதிர்ச்சிப் பரம்பலில் காணப்பட்டு, பாரியளவிலான அதேபோன்று சிறியவிலான தகைமையுடைய முதலீட்டாளர்களை ஈர்க்கக்கூடியதாகவிருந்தது. இலங்கை அபிவிருத்தி முறிகளில் முதலீடுகளை மேலும் பிரபல்யப்படுத்துவதற்கு சில இலங்கைத் தூதரங்களுடனான கூட்டிணைப்புடன் இலங்கை மத்திய வங்கியும் அந்தந்தநாடுகளிலுள்ள தகைமையுடைய முதலீட்டாளர்களுடன் தொடர்பினை மேற்கொண்டிருந்தது.

வெளிநாட்டுத்துறைச் செயலாற்றம் - 2021 திசெம்பர்

ஏற்றுமதிகளிலிருந்தான வருவாய்கள் தொடர்ச்சியாக ஏழாவது தடவையாக ஐ.அ.டொலர் 1.0 பில்லியனை விஞ்சிய பெறுமதிகளைக் கொண்டிருந்த போதும், வர்த்தகக் கணக்கின் பற்றாக்குறை ஓராண்டிற்கு முன்னைய நிலையுடன் ஒப்பிடுகையில் 2021 திசெம்பரில் விரிவடைந்தமைக்கு இறக்குமதிகளின் மிதமிஞ்சிய அதிகரிப்பினால் பதிவுசெய்யப்பட்ட முன்னொருபோதுமில்லாத உயர்ந்தளவிலான மாதாந்த இறக்குமதிச் செலவினம் முக்கிய காரணமாயமைந்தது. 2021ஆம் ஆண்டுப்பகுதியில், ஏற்றுமதிகளின் வளர்ச்சியினை விட விஞ்சிக் காணப்பட்ட இறக்குமதிகளின் கணிசமானளவு அதிகரிப்பினால் உந்தப்பட்டு வர்த்தகப் பற்றாக்குறை குறிப்பிடத்தக்களவு விரிவடைந்து காணப்பட்டது. சுற்றுலாப் பயணிகளின் வருகைகள் முன்னைய மாதத்திலும் பார்க்க குறிப்பிடத்தக்கதொரு அதிகரிப்புடன் வளர்ச்சி உத்வேகத்தினைத் தொடர்ந்திருந்தன. அதேவேளை, தொழிலாளர் பணவனுப்பல்கள் 2021 திசெம்பரில் மாதாந்த அடிப்படையிலான வளர்ச்சியினைப் பதிவுசெய்து, பணவனுப்பல்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட ஊக்குவிப்புத் திட்டத்திற்கான பதிலிறுப்பினையும் பருவகால  அதிகரிப்பினையும் பிரதிபலித்திருந்தன.

எதிர்வரவுள்ள படுகடன் கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்கான இலங்கையின் அர்ப்பணிப்பினை மீள்வலியுறுத்தல்

இலங்கையானது நாட்டிற்கான படுகடனைச் செலுத்தத் தவறுவதன் விளிம்பிலிருப்பதாக அண்மையில் வெளியான சில ஊடக அறிக்கைகள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியானது அத்தகைய கூற்றுக்கள் முற்றிலும் அடிப்படையற்றவையெனத் தெரிவித்துக்கொள்ள விரும்புவதுடன் பன்னாட்டு நியமங்களின் பிரகாரம் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நம்பகமான உத்தியோகபூர்வ தரவுகளின் கிடைப்பனவிற்கு மத்தியிலும் இவ்வறிக்கைகள் வெளிப்படையாகவே உண்மைக்குப் புறம்பான துல்லியமற்ற தரவுகளைக் கொண்டுள்ளனவெனவும் வருந்தி நிற்கின்றது. ஆகையால், அரசாங்கம் மற்றும் இலங்கை மத்திய வங்கி என்பன எதிர்வரவுள்ள சகல படுகடன் கடப்பாடுகளையும் பூரணப்படுத்துவதன் மூலம் இலங்கையின் அப்பழுக்கற்ற படுகடன் பணிக்கொடுப்பனவுப் பதிவினைப் பேணுவதற்கு உறுதிபூண்டுள்ளன என்பதனை உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முதலீட்டாளர் சமூகத்திற்கும் பொதுமக்களுக்கும்  இலங்கை மத்திய வங்கியானது உறுதியளிக்க விரும்புகின்றது.

Pages

சந்தை அறிவிப்புகள்