வணிகப்பொருள் வர்த்தகப் பற்றாக்குறையானது 2022 செத்தெம்பருடன் ஒப்பிடுகையில் 2023 செத்தெம்பரில் ஒப்பீட்டளவில் தாழ்ந்தளவிலான ஏற்றுமதி வருவாய்கள் மற்றும் உயர்ந்தளவிலான இறக்குமதிச் செலவினம் என்பவற்றின் இணைந்த தாக்கத்தின் காரணமாக விரிவடைந்தது. 2023 சனவரி தொடக்கம் செத்தெம்பர் வரையான காலப்பகுதியில் ஒன்றுசேர்ந்த வர்த்தகப் பற்றாக்குறையானது குறிப்பிடத்தக்களவு தாழ்ந்தளவில் தொடர்ந்தும் காணப்பட்டது.
தொழிலாளர் பணவனுப்பல்கள் மற்றும் சுற்றுலாத்துறையிலிருந்தான வருவாய்கள் என்பன முன்னைய ஆண்டின் தொடர்புடைய மாதத்துடன் ஒப்பிடுகையில் 2023 செத்தெம்பரில் குறிப்பிடத்தக்களவு மேம்பாடுகளைப் பதிவுசெய்தன.
சுற்றுலாப் பயணிகளின் வருகைகள் 2023 செத்தெம்பரில் முடிவடைகின்ற ஒன்பது மாத காலப்பகுதியில் ஒரு மில்லியனை விஞ்சிப் பதிவுசெய்யப்பட்டன.
அரச பிணையங்கள் சந்தையில் மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டு முதலீடுகள் முன்னைய மாதங்களுடன் ஒப்பிடுகையில் 2023 செத்தெம்பர் மாத காலப்பகுதியில் தாழ்ந்தளவிலான தேறிய வெளிப்பாய்ச்சலொன்றினைப் பதிவுசெய்தன.
மொத்த அலுவல்சார் ஒதுக்குகள் 2023 செத்தெம்பர் இறுதியளவில் ஐ.அ.டொலர் 3.5 பில்லியன் தொகையாக விளங்கின.
இலங்கை ரூபாவானது 2023 செத்தெம்பர் மாத காலப்பகுதியில் ஐ.அ.டொலரிற்கெதிராக ஓரளவு தளம்பல்தன்மைகளைக் காண்பித்தது.