Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

இலங்கை மத்திய வங்கி 2021ஆம் ஆண்டிற்கான அதன் ஆண்டறிக்கையை வெளியிடுகிறது

1949ஆம் ஆண்டின் 58ஆம் இலக்க நாணய விதிச் சட்டத்தின் 35ஆம் பிரிவின் நியதிகளுக்கமைவாக, இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையின் எழுபத்திரெண்டாவது ஆண்டறிக்கையானது இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் முனைவர். பி. நந்தலால் வீரசிங்க அவர்களினால் நிதி அமைச்சர் கௌரவ. எம்.யு.எம். அலி சப்ரி அவர்களுக்கு இன்று (2022.04.29) சமர்ப்பிக்கப்பட்டது.

இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (கொ.மு.சு) – 2022 மாச்சு

தயாரிப்பு மற்றும் பணிகள் நடவடிக்கைகள் இரண்டிற்குமான கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள் 2022 மாச்சில் விரிவடைந்தன.

தயாரிப்பு நடவடிக்கைகளில் பருவகால போக்கினைத் தொடர்ந்து தயாரிப்பு கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் மாதத்திற்கு மாதம் அடிப்படையில் 57.8 சுட்டெண் புள்ளிகளுக்கு அதிகரித்தாலும், முன்னைய ஆண்டுகளைவிட  மெதுவான வீதத்திலேயே காணப்பட்டது. பருவகாலக் கேள்வியினைத் தொடர்ந்து உற்பத்தி, புதிய கட்டளைகள், தொழில்நிலை துணைச் சுட்டெண்களில் அவதானிக்கப்பட்ட மேம்பாடுகள் இவ்வதிகரிப்பிற்குப் பிரதான காரணமாக அமைந்தது.

பணிகள் துறை கொ.மு.சுட்டெண், 2022 மாச்சில் 51.3 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்து பணிகள் துறை முழுவதும் விரிவடைதலினை எடுத்துக்காட்டுகின்றது. இதற்கு, புதிய வியாபாரங்கள், தொழில் நடவடிக்கைகள், மற்றும் தொழில்நிலை துணைச் சுட்டெண்களில் அவதானிக்கப்பட்ட அதிகரிப்புக்கள் ஏதுவாகின.

“இலங்கையில் கொடுப்பனவுப் பணிகளுக்கான ஒரு வழிகாட்டல்” - இலங்கையில் கொடுப்பனவு சாதனங்கள் மற்றும் உட்கட்டமைப்பு தொடர்பான நூல்

இலங்கையின் கொடுப்பனவுத் தொழிற்துறைக்கு புதிய கொடுப்பனவுச் சாதனங்கள், முறைகள் மற்றும் செயன்முறைகள் என்பன அறிமுகப்படுத்தப்பட்டு வருவதன் காரணமாக இத்தொழிற்துறை தற்பொழுது விரைவாக மாற்றங்களுக்கு உட்பட்டுவருகிறது. பாரம்பரிய கொடுப்பனவு முறைமைகளுடன் சேர்ந்து இப்புதிய இக்கொடுப்பனவுச் செயன்முறைகள் வாடிக்கையாளர் அனுபவத்திற்கு புதிய வரைவிலக்கணம் தருவதுடன் வியாபாரங்களும் வாடிக்கையாளர்களும் அவர்களது நிதியியல் கொடுக்கல்வாங்கல்களைப் பாதுகாப்பாகவும் வினைத்திறனுடனும் மேற்கொள்வதனையும் இயலுமைப்படுத்தும்.

முன்மொழிவுளுக்கான கோரிக்கை - நிதியியல் ஆலோசகர் மற்றும் சட்ட மதியுரைஞர் (காலக்கெடு நீடிப்பு)

அரசாங்கத்தின் வெளிநாட்டுப் படுகடன் நிலைபெறுதன்மையினை முகாமைசெய்வதற்கான நிதியியல் ஆலோசகர்களையும் சட்ட மதியுரைஞர்களையும் நியமிப்பதற்காக ஆர்வமுடைய தரப்பினர்களிடமிருந்து/முகவராண்மைகளிடமிருந்து முன்மொழிவுக்கான கோரிக்கையினை நிதி அமைச்சின் ஊடாக இலங்கை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் முனைவர் பி நந்தலால் வீரசிங்க, வெளிநாட்டில் வதிகின்ற இலங்கையர்களுக்கு விடுக்கும் செய்தி

கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றின் நீடித்து நிலைக்கின்ற தாக்கம், உலக அரசியல் சமமின்மைகள் அத்துடன் நாட்டின் பேரண்டப் பொருளாதார சமமின்மைகள் காரணமாக தற்போது இலங்கை சமூகப் பொருளாதார மற்றும் நிதியியல் இடர்பாடுகளை எதிர்கொண்டு,ள்ளமை நாட்டு மக்களுக்கு இன்னல்களைத் தோற்றுவித்துள்ளது. நாட்டின் மேற்குறித்த நிலைமையினை கையாள்வதற்கு, நாட்டின் படுகடன் கடப்பாடுகளை முனைப்பாக முகாமைசெய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்தல், ஏனைய நாடுகளிடமிருந்து உடனடி நிதி உதவியினை நாடுதல் மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய நிகழ்ச்சித்திட்டமொன்றுக்காக பன்னாட்டு நாணய நிதியத்துடன் கலந்துரையாடல்களை முன்னெடுத்தல் உள்ளடங்கலாக பல வழிமுறைகளை அதிகாரிகள் எடுத்துவருகின்ற போதிலும், அத்தகைய வழிமுறைகளின் சாதகமான தாக்கங்கள் எமது மக்களுக்கு நடுத்தர காலத்திலிருந்து நீண்ட காலத்திலேயே  நன்மைபயக்கும். ஆகையினால், உணவு, எரிபொருள் மற்றும் மருந்துப்பொருட்கள் உள்ளடங்கலாக நாளாந்த அத்தியாவசிய இறக்குமதிகளை நிறைவேற்றிக்கொள்வதற்கு நாட்டின் வெளிநாட்டு ஒதுக்கு நிலையினை அதிகரிப்பதற்கு அவசரமான  வழிமுறைகள் தேவைப்படுகின்றன.

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் விடுக்கும் செய்தி

இலங்கை மத்திய வங்கியின் புதிதாக பதவியேற்ற ஆளுநர் என்ற வகையில், நாணயச் சபைக்கு நியமிக்கப்பட்ட உறுப்பினர்களான சனாதிபதி சட்டத்தரணி திரு. சஞ்சீவ ஜயவர்த்தன அவர்களும் முனைவர் (திருமதி) ராணி ஜயமகா அவர்களும் எப்போதும் மிகவும் சுயாதீனமாகவும் தொழில்சார்பண்புடனும் விடாமுயற்சியுடனும் செயற்படுவதனாலும் இலங்கை மத்திய வங்கியின் அனைத்து முயற்சிகளுக்கும் மிகவும் சாதகமாகப் பங்களித்துள்ளமையினாலும் நாணயச் சபையில் அவர்கள் தொடர்ந்தும் பணியாற்றுவதற்கு இணங்கியுள்ளதையிட்டு பெருமகிழ்ச்சியடைகின்றேன். அவர்களது முழுமையான தொழில்சார்பண்பில் நான் முழுமையான நம்பிக்கையும் பற்றுறுதியும் கொண்டிருப்பதனால் தேசத்திற்கும், நாணயச் சபைக்கும் அதேபோன்று ஆளுநர் என்ற வகையில் எனக்கும் அவர்களது தொடர்ச்சியான பங்களிப்பினையும் பெறுமதியான வழிகாட்டலையும் பெற்றுக்கொள்வதற்கு எதிர்பார்க்கின்றேன்.

Pages

சந்தை அறிவிப்புகள்