Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

பன்னாட்டு நாணய நிதியத்தின் அலுவலர்கள் இலங்கைக்கான விஜயத்தினை நிறைவுசெய்துள்ளனர்

இலங்கை அதிகாரிகளினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பொருளாதார மறுசீரமைப்புக்களானவை சிறப்பாகச் செயலாற்றுகின்ற வளர்ச்சி, பணவீக்கம் இலக்கினை நோக்கி முன்னேற்றமடைதல், வெளிநாட்டு ஒதுக்குகளைத் திரட்டுதல் மற்றும் இறை வருவாய்கள் மேம்படுதல் என்பவற்றுடன் பயனளிக்கின்றன.

வர்த்தகக் கொள்கையின் நிச்சயமற்றதன்மை மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்கள் என்பவற்றிற்கு மத்தியில் பேரண்டப் பொருளாதார உறுதிப்பாட்டைப் பாதுகாப்பதற்கும் மீட்சியினை அடைவதற்கும் அதிர்வுகளுக்கான இலங்கையின் தாக்குப்பிடிக்கும் தன்மையைக் கட்டியெழுப்புவதற்கும் மறுசீரமைப்பு உத்வேகத்தை நிலைநாட்டுதல் இன்றியமையாததாகும்.

இலங்கை மத்திய வங்கி ஓரிரவு கொள்கை வீதத்தினை மாற்றமின்றிப் பேணுகின்றது

நாணயக் கொள்கைச் சபையானது நேற்று இடம்பெற்ற அதன் கூட்டத்தில் ஓரிரவு கொள்கை வீதத்தினை 7.75 சதவீதம் கொண்ட அதன் தற்போதைய மட்டத்தில் பேணுவதற்கு தீர்மானித்தது. உள்நாட்டு மற்றும் உலகளாவிய அபிவிருத்திகள் ஆகிய இரண்டினையும் கவனமாகக் கருத்திற்கொண்டதன் பின்னர் சபை இத்தீர்மானத்தினை மேற்கொண்டது. தற்போதைய நாணயக் கொள்கை நிலைப்பாடு பணவீக்கத்தை எதிர்வரும் காலத்தில் 5 சதவீதம் கொண்ட இலக்கை நோக்கி வழிநடாத்துவதில் உதவும் அதேவேளை வளர்ச்சிக்கு ஆதரவளிக்குமென சபை கருதுகின்றது. 

இலங்கை நிதியியல் உளவறிதல் பிரிவு, ஓமான் சுல்தானாவின் நிதியியல் தகவலுக்கான தேசிய நிலையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றினை கைச்சாத்திட்டுள்ளது

இலங்கை நிதியியல் உளவறிதல் பிரிவானது, லக்ஷம்பேர்க் நகரத்தில் நடைபெற்ற எக்மன்ட் குழுமத்தின் 31ஆவது முழுநிறைவுக் கூட்டத்தின் போது, 2025 யூலை 09ஆம் திகதியன்று ஓமான் சுல்தானாவின் நிதியியல் தகவலுக்கான தேசிய நிலையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றினை கைச்சாத்திட்டுள்ளது. 2006ஆம் ஆண்டின் 06ஆம் இலக்க நிதிசார் கொடுக்கல்வாங்கல்களை அறிக்கையிடல் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைவாக பணம் தூயதாக்கல், அதனுடன் இணைந்த ஊகக் குற்றங்கள் மற்றும் பயங்கரவாதி நிதியிடல் என்பவற்றுடன் தொடர்புடைய  நிதியியல் உளவறிதல்களைப் பரிமாறிக்கொள்வதற்காக இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் வசதியளிக்கின்றது.

இலங்கைக் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (கொ.மு.சு) – 2025 யூன்

கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள், 2025 யூனில் தயாரிப்பு மற்றும் பணிகள் ஆகிய இரண்டு நடவடிக்கைகளிலும் மேம்பாடுகளை எடுத்துக்காட்டுகின்றன.

பிரமிட் எதிர்ப்பு தேசிய விழிப்புணர்வு வாரம் - 2025 யூலை 14 தொடக்கம் 18 வரை

“பெருங்கவலையின் உச்சகட்டம் சூழ்ச்சியான பிரமிட் திட்டம்” என்ற தொனிப்பொருளின் கீழ் இலங்கை மத்திய வங்கியின் நிதியியல் வாடிக்கையாளர் தொடர்புகள் திணைக்களம் 2025 யூலை 14 தொடக்கம் 18 வரை பிரமிட் எதிர்ப்பு தேசிய விழிப்புணர்வு வாரத்தினை தொடங்கவுள்ளது.

பெர்பெட்சுவல் ட்ரெஷரீஸ் லிமிடெட்டின் வியாபாரத்தின் இடைநிறுத்தத்தினை நீடித்தல்

இலங்கை மத்திய வங்கியானது, பதிவுசெய்யப்பட்ட பங்குகள் மற்றும் பிணையங்கள் கட்டளைச்சட்டம் மற்றும் உள்நாட்டு திறைசேரி உண்டியல்கள் கட்டளைச் சட்டம் என்பவற்றின் கீழ் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகளின் நியதிகளின் பிரகாரம் செயற்பட்டு, இலங்கை மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்டுவரும் புலனாய்வுகளைத் தொடரும் விதத்தில், 2025 யூலை 05ஆம் திகதி பி.ப 4.30 மணியிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் பெர்பெட்சுவல் ட்ரெஷரீஸ் லிமிடெட் (பிரிஎல்) அதன் வியாபாரத்தினைக் கொண்டுநடாத்துவதிலிருந்தும் முதனிலை வணிகர் நடவடிக்கைகளை மேற்கொள்வதிலிருந்துமான இடைநிறுத்தத்தினை மேலும் ஆறுமாத காலப்பகுதிக்கு நீடிப்பதற்கு தீர்மானித்துள்ளது. 

Pages

சந்தை அறிவிப்புகள்