Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

இலங்கையில் இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறைக்கான பணம் தூயதாக்கலுக்கெதிரான இணங்குவித்தல் தேவைப்பாடுகள்

இலங்கை மத்திய வங்கியின் நிதியியல் உளவறிதல் பிரிவானது “பணம் தூயதாக்கலுக்கெதிரான மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலை ஒழித்தல் இணங்குவிப்பு கடப்பாடுகள் மற்றும் புதிய அபிவிருத்திகள்” பற்றி 2023 யூலை 04 அன்று இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறைக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியொன்றை ஏற்பாடுசெய்தது. இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரும்ஃபணம் தூயதாக்கலுக்கெதிரான மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலை ஒழித்தல் மீதான தேசிய ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான முனைவர் நந்தலால் வீரசிங்க தலைமை உரையினை நிகழ்த்தியதுடன் கைத்தொழில் அமைச்சின் செயலாளர் திருமதி. திலகா ஜயசுந்தர, தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் தலைவர் திரு. விராஜ் த சில்வா, இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரண அமைப்பின் தலைவர் திரு. அஜ்வாதீன் மற்றும் இலங்கை இரத்தினக்கல் வணிகர்கள் மற்றும் அகழ்வோர் அமைப்பின் தலைவர் யு. ஜி. சந்திரசேன ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்வில் தொழிற்துறையைச் சேர்ந்த 100இற்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.  

இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (தயாரித்தல் மற்றும் பணிகள்) - 2023 யூன்

கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள் 2023 யூனில் பணிகள் நடவடிக்கைகளில் விரிவடைதலொன்றையும் தயாரித்தல் நடவடிக்கைகளில் சுருக்கமொன்றையும் எடுத்துக்காட்டின.  

தயாரிப்பு கொள்வனவு முகாமையாளர் சுட்டெண், 2023 யூனில் 47.3 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்து, தயாரித்தல் நடவடிக்கைகளில் பின்னடைவை எடுத்துக்காட்டியது. அனைத்துத் துணைச் சுட்டெண்களிலும் அவதானிக்கப்பட்ட குறைவடைந்த செயலாற்றம் இப்பின்னடைவிற்கு பங்களித்தது.

பணிகள் துறை கொ.மு.சுட்டெண், 2023 யூனில் மேலும் அதிகரித்து, 2022 சனவரி தொடக்கம் அதிகூடிய வாசிப்பான 56.7 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்தது. புதிய வியாபாரங்கள், தொழில் நடவடிக்கைகள் மற்றும் நடவடிக்கைக்கான எதிர்பார்க்கைகள் என்பவற்றில் அவதானிக்கப்பட்ட அதிகரிப்புக்கள் இதற்கு முன்னிலை வகித்திருந்தன. எவ்வாறிருப்பினும், நிலுவையிலுள்ள பணிகள் மாதகாலப்பகுதியில் தொடர்ந்தும் குறைவடைந்த அதேவேளை தொழில்நிலை மாற்றமடையாதிருந்தது.

இலங்கையில் நாணயக் கொள்கையை நடைமுறைப்படுத்தல் பற்றிய தகவல் ஏட்டை மத்திய வங்கி வெளியிடுகின்றது

இலங்கையில் நாணயக் கொள்கை நடைமுறைப்படுத்தலில் மத்திய வங்கியின் வகிபாகம் பற்றி பொதுமக்களின் விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்குடன் “இலங்கையில் நாணயக் கொள்கையை நடைமுறைப்படுத்தல்” என்ற தலைப்பில் தகவல் ஏடொன்றினை மத்திய வங்கி மூன்று மொழிகளிலும் வெளியிட்டுள்ளது. மத்திய வங்கியின் பரந்தளவிலான தொடர்பூட்டல் உபாயத்தின் பாகமொன்றாக இவ்வெளியீடு, நாணயக் கொள்கை நடைமுறைப்படுத்தல் பற்றிய தொழில்நுட்ப நோக்குகள் மீது எளிமையான கலந்துரையாடலை எடுத்துரைத்து பல்வேறு பின்னணியைக் கொண்ட தனிப்பட்டவர்களும் அதனைப் பெற்றுக்கொள்வதை இயலச்செய்து, நாணயக் கொள்கை வகுத்தல், நடைமுறைப்படுத்தல், நாணயச் சாதனங்கள் மற்றும் ஊடுகடத்தல் பொறிமுறை பற்றிய பெறுமதிமிக்க உள்நோக்குகளை வழங்குகின்ற அதேவேளை பொதுமக்கள் மத்தியில் நாணயத் தொழிற்பாடுகள் மீதான ஏதேனும் தவறான எண்ணப்பாங்குகளை இல்லாதொழிப்பதற்கு உதவுகின்றது.   

பதினைந்து (15) நாணய மாற்றுநர்களின் 2023ஆம் ஆண்டிற்கான நாணயப் பரிமாற்றல் அனுமதிப் பத்திரங்களை புதுப்பிக்காதிருத்தல்

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது 2022ஆம் ஆண்டுக்காக வழங்கப்பட்ட அனுமதிப் பத்திரங்களின் நிபந்தனைகளுடன் இணங்கியொழுகாமையின் காரணமாக, கீழே பட்டியிலிடப்பட்டுள்ள 15 நாணய மாற்றுநர்களின் நாணயப் பரிமாற்றல் அனுமதிப் பத்திரங்களை 2023ஆம் ஆண்டுக்கு புதுப்பிக்காதிருப்பதற்கு தீர்மானித்துள்ளதுடன், இவ்வறிவித்தலானது உரிய நாணய மாற்றுநர்களுக்கு 2023.02.22ஆம் திகதி அன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பணம் தூயதாக்கலுக்கெதிரான வழிமுறைகளை துரிதமாக அதிகரிக்குமாறு உண்மைச் சொத்து முகவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது

இலங்கை மத்திய வங்கியின் நிதியியல் உளவறிதல் பிரிவானது “பணம் தூயதாக்கலுக்கெதிரான மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலை ஒழித்தல் இணங்குவிப்பு கடப்பாடுகள் மற்றும் புதிய அபிவிருத்திகள்” பற்றி 2023 யூன் 26 அன்று உண்மைச் சொத்துத் துறைக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியொன்றை ஏற்பாடுசெய்தது. இலங்கை மத்திய வங்கி ஆளுநரும்ஃபணம் தூயதாக்கலுக்கெதிரான மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலை ஒழித்தல் மீதான தேசிய ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான முனைவர் நந்தலால் வீரசிங்க தலைமை உரையினை நிகழ்த்தியதுடன் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் திரு. டபிள்யு. எஸ். சத்யானந்த, நிர்மாணக் கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் எந்திரி. ஆர். எச். ருவினிஸ் மற்றும் உண்மைச் சொத்துத் துறையினைப் பிரதிநிதித்துவப்படுத்தி திரு. ஹார்டி ஜமால்தீன் ஆகியோரும் கூடியிருந்தவர்களுக்கு உரை நிகழ்த்திய அதேவேளை கூட்டு ஆதன முகாமைத்துவ அதிகாரசபையின் தலைவர் திரு. சரண கருணாரத்னவும் நிகழ்வில் கலந்து சிறப்பித்தார்.

இலங்கை மத்திய வங்கி கொள்கை வட்டி வீதங்களை மேலும் குறைக்கின்றது

இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபையானது 2023 யூலை 05ஆம் நாளன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில் மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் முறையே 11.00 சதவீதத்திற்கும் 12.00 சதவீதத்திற்கும் 200 அடிப்படைப் புள்ளிகளினால் குறைப்பதற்குத் தீர்மானித்துள்ளது. எதிர்பார்த்ததிலும் பார்க்க விரைவான பணவீக்க வீழ்ச்சிச் செயல்முறை மற்றும் உள்நாட்டுப் பொருளாதாரத்தில் சாதகமான பணவீக்க எதிர்பார்க்கைகள் என்பன உள்ளடங்கலாக தற்போதைய மற்றும் எதிர்பார்க்கப்படுகின்ற அபிவிருத்திகளின் உன்னிப்பான பகுப்பாய்வொன்;றினைத் தொடர்ந்து சபை இத்தீர்மானத்தினை மேற்கொண்டு பொருளாதாரம் அதன் உள்ளார்ந்த ஆற்றலை அடைவதனை இயலுமைப்படுத்துவதனையும் நடுத்தர காலத்தில் பணவீக்கத்தினை நடு ஒற்றை இலக்க மட்டங்களில் உறுதிநிலைப்படுத்தும் வேளையில் நிதியியல் சந்தைகளிலுள்ள அழுத்தங்களைத் தளர்த்துவதனையும் நோக்காகக் கொண்டது.

Pages

சந்தை அறிவிப்புகள்