Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

2016 யூனில் பணவீக்கம்

தொகைமதிப்பு புள்ளிவிபரத்திணைக்களத்தினால் தொகுக்கப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் (2013=100) ஏற்படும் மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான, பணவீக்கம், ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2016 மேயில் 5.3 சதவீதத்திலிருந்து 2016 யூனில் 6.4 சதவீதத்திற்கு அதிகரித்தது. உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டும் 2016 யூனில் ஆண்டிற்கு ஆண்டு பணவீக்கத்திற்கு பங்களித்தன.  

ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாற்றம் 2016 மேயில் 2.7 சதவீதத்திலிருந்து 2016 யூலையில் 3.1 சதவீதத்திற்கு அதிகரித்தது.  

இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் அளவீடு - 2016 யூன்

தயாரிப்பு கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் கடந்த இரண்டு ஆண்டுகளில் அவதானிக்கப்பட்ட சுருக்கத்திலிருந்து 2016 யூனில் சாதகமான நிலைமையொன்றிற்கு மீட்சியடைந்து 55.1 சதவீத சுட்டெண் புள்ளியைப் பதிவுசெய்தது. இது 2016 மேயிலிருந்து 7.2 சுட்டெண் புள்ளிகளைக் கொண்டதொரு அதிகரிப்பாகும். இம்முன்னேற்றத்திற்கு உற்பத்தி மற்றும் புதிய கட்டளைகள் சுட்டெண்களில் அவதானிக்கப்பட்ட குறிப்பிடத்தக்க அதிகரிப்பே பக்கபலமாக விளங்கியது. மேலும், அனைத்துக் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள் நிரம்பலர் வழங்கலிலிருந்து விலகி முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் அதிகரித்தது. ஒட்டுமொத்த தரவுப் புள்ளிகள் விரிவாக்கமொன்றினைக் கொண்டிருந்தவிடத்து அனைத்து துணைச் சுட்டெண்களும் தொழில்நிலைச் சுட்டெண்ணிலிருந்து விலகி 50.0 கீழ் மட்ட நிலைக்கு மேலே காணப்பட்டது. நடவடிக்கைகளுக்கான எதிர்பார்ப்பக்களும் அடுத்த மூன்று மாதங்களுக்கு முன்னேற்றமொன்றினை எடுத்துக்காட்டின. ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில், கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் 2015 யூனுடன் ஒப்பிடுகையில் 2.4 சுட்டெண் புள்ளிகள் கொண்ட சிறிதளவு வீழ்ச்சியைக் காட்டியது.  

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு ஐ.அ.டொலர் 1,500 மில்லியன் கொண்ட இரட்டை-தொகுதி பன்னாட்டு முறிகளை வழங்குகிறது

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் சார்பில், இலங்கை மத்திய வங்கி ஐ.அ.டொலர் 500 மில்லியன் பெறுமதியான 5.5 ஆண்டு கால மற்றும் ஐ.அ.டொலர் 1.0 பில்லியன் பெறுமதியான 10 ஆண்டு கால நாட்டிற்கான பன்னாட்டு முறிகளையும் 2016 யூலை 11ஆம் நாளன்று வெற்றிகரமாக வழங்கியதன் மூலம் ஐ.அ.டொலர் முறிகள் சந்தைகளுக்கு இலங்கை திரும்பியமையினை எடுத்துக்காட்டியது. இது இலங்கையின் 10ஆவது ஐ.அ.டொலர் முறிகளின் வழங்கலையும் முதலாவது இரட்டைத் தொகுதி வழங்கலையும் குறிக்கிறது.  

மூடிஸ் இன்வெஸ்டர்ஸ் சேர்விஸ், ஸ்டான்டட் அன்ட் புவர் மற்றும் பிட்ஜ் றேடிங் என்பன இம்முறிகளை முறையே பி1, பீ+ மற்றும் பீ+ இல் தரமிட்டன. சிட்டி குறூப், டியூச் பாங்க், எச்எஸ்பீசி மற்றும் ஸ்டான்டட் அன்ட் சார்டட் பாங்க் என்பன இவ்வெற்றிகரமான கொடுக்கல்வாங்கலின் கூட்டு முகாமையாளர்களாகவும் ஏற்பாட்டாளர்களாகவும் தொழிற்பட்டன.  

வெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் - 2016 மாச்சு

2016 மாச்சில் வர்த்தகப் பற்றாக்குறை விரிவடைந்தமையின் காரணமாக வெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் மிதமடைந்தது. முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் இம்மாத காலப்பகுதியில் ஏற்றுமதிகளிலிருந்தான வருவாய்கள் வீழ்ச்சியடைந்த வேளையில் இறக்குமதிகள் சிறிதளவால் வீழ்ச்சியடைந்தன. எனினும், 2016இன் முதற்காலாண்டுப் பகுதியில் வர்த்தகப் பற்றாக்குறை 2015இன் தொடர்பான காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் சுருக்கமடைந்தமைக்கு ஏற்றுமதிகளில் காணப்பட்ட குறைப்பினை இறக்குமதிகளில் ஏற்பட்ட குறைப்பு விஞ்சிக் காணப்படட்மையே முக்கிய காரணமாகும். சுற்றுலா வருவாய்கள் மற்றும் தொழிலாளர் பணவனுப்பல்கள் அதிகரித்தமையின் மூலம் சென்மதி நிலுவையின் நடைமுறைக் கணக்கு வலுவடைந்த வேளையில் நிதியியல் கணக்கிற்கான உட்பாய்ச்சல்கள தொடர்ந்தும் மிதமடைந்தன.

முழுவடிவம்

நாணயக் கொள்கை மீளாய்வு - 2016 யூன்

தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களத்தின் தற்காலிக மதிப்பீடுகளின்படி, 2016இன் முதற்காலாண்டில், உண்மை நியதிகளில் இலங்கையின் பொருளாதாரம் 2015இன் முதற்காலாண்டில் பதிவுசெய்யப்பட்ட 2.5 சதவீதம் கொண்ட வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில் 5.5 சதவீதத்தினால் வளர்ச்சியடைந்திருக்கிறது. இப்பொருளாதார வளர்ச்சிக்கு, கூட்டப்பட்ட பெறுமதி நியதிகளில், 2016இன் முதற்காலாண்டில் முறையே 8.3 சதவீதத்தினாலும் 4.9 சதவீதத்தினாலும் வளர்ச்சியடைந்த கைத்தொழில் மற்றும் பணிகள் துறைகளே பெரும் உதவியாக அமைந்தன. அதேவேளையில், இக்காலப்பகுதியில் வேளாண்மையுடன் தொடர்புபட்ட நடவடிக்கைகள் 1.9 சதவீதம் கொண்ட மிதமான வளர்ச்சியைப் பதிவுசெய்தன. முதற்காலாண்டில் பதிவுசெய்யப்பட்ட வளர்ச்சி வீதம் இவ்வாண்டிற்காக எதிர்பார்க்கப்பட்ட வளர்ச்சியுடன் பெருமளவிற்கு ஒத்துச்செல்வதாகக் காணப்பட்டது.  

கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் அளவீடு

2015 மே தொடக்கம் நாட்டின் தயாரிப்பு மற்றும் பணிகள் துறைகள் தொடர்பாக கொள்வனவு முகாமையாளர் சுட்டெண ;அளவீடொன்றினை நடத்துவதற்காக இலங்கை மத்திய வங்கியின் புள்ளிவிபரத் திணைக்களம் நடவடிக்கைகளை முன்னெடுத்துவந்துள்ளது. இவ்வளவீட்டின் நோகக் ம் யாதெனில் கொள்வனவு தொழில்சார் நிபுணர்கள், வியாபாரத் தீர்மானங்களை மேற்கொள்வோா் மற்றும் பொருளாதாரப் பகுப்பாய்வாளர் ஆகியோர் தொழில்துறை நிலைமைகளைச் சிறந்த முறையில் விளங்கிக் கொள்ளும் விதத்தில் அவர்களுக்கு உரிய நேரத்தில் தரவுத் தொகுதியை வழங்குவதேயாகும். இவ்வளவீடானது, மாதாந்தம் திணைக்களத்தினால் நடத்தப்படுவதுடன் 2016 ஏப்பிறலில் ஒரு வருடச்சுற்று பூர்த்தியடைந்திருக்கிறது. எனவே, இலங்கை மத்திய வங்கி பொதுமக்களின் தகவலுக்காக அளவீட்டின் பெறுபேறுகளை வெளியிடத் தீர்மானித்திருக்கிறது. 2016 மே மாதத்திற்கான கொள்வனவு முகாமையாளர் சுட்டெண ; அளவீட்டின் பெறுபேறுகள் மீதான அறிக்கையானது கொள்வனவு முகாமையாளர் சுட்டெணண்pன் கடந்த காலத்திற்குரிய தொடர்களுடன் சேர்த்து கீழே தரப்படுகிறது. அளவீட்டின் பெறுபேறுகளை புள்ளிவிபரப் பிரிவின ;கீழ் இலங்கை மத்திய வங்கியின் வெப்தளத்தினூடாக பெற்றுக்கொள்ள முடியும்.   

Pages

சந்தை அறிவிப்புகள்