2016 ஒத்தோபரில் பணவீக்கம்

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் தொகுக்கப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் (2013 = 100) ஏற்பட்ட மாற்றங்களினால் அளவிடப்பட்டவாறான பணவீக்கம் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2016 செத்தெம்பரின் 4.7 சதவீதத்திலிருந்து 2016 ஒத்தோபரில் 5.0 சதவீதத்திற்கு அதிகரித்தது. உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டும் 2016 ஒத்தோபரின் ஆண்டிற்கு ஆண்டு பணவீக்கத்திற்கு பஙக்ளித்துள்ளன.   

ஆண்டுச் சராசரி அடிப்படையொன்றின்மீது அளவிடப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் ஏற்பட்ட மாற்றம் 2016 செத்தெம்பரின் 3.8 சதவீதத்திலிருந்து 2016 ஒத்தோபரில் 4.0 சதவீதத்திற்கு அதிகரித்தது.   

மாதாந்த மாற்றங்கனைக் கருத்திற்கொள்கையில், தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் 2016 செத்தெம்பரில் 113.5 சுட்டெண் புள்ளியிலிருந்து 2016 ஒத்தோபரில் 114.7 புள்ளிக்கு சுட்டெண் அதிகரித்தது. இம் மாதாந்த அதிகரிப்பிற்கு உணவு வகை சார்ந்துள்ள விடயங்களின் விலைகளில் ஏற்பட்ட அதிகரிப்புக்களே முக்கிய காரணமாகும். உணவு வகையில் அரிசி, தேங்காய், எலுமிச்சம்பழம், காய்கறிகள் என்பவற்றின் விலைகள் இம்மாத காலப்பகுதியில் அதிகரித்தன. மேலும் குடிவகை, குடிபானங்கள் மற்றும் புகையிலை; ஆடை மற்றும் காலணிகள்; தளபாடம், வீட்டலகுகளின் சாதனங்கள் மற்றும் வழமையான வீட்டு அலகுகளின் பேணல்; பொழுதுபோக்கு மற்றும் கலாச்சாரம்; உணவகங்கள், சுற்றுலாவிடுதிகள் மற்றும் பல்வகைப் பொருட்கள் மற்றும் பணிகள் துணை வகைகளின் விலைகளும் 2016 ஒத்தோபரில் அதிகரித்தன. அதேவேளை, வீடமைப்பு, நீர், மின்வலு, வாயு, மற்றும் ஏனைய எரிபொருட்கள்; நலம், போக்குவரத்து; தொழில்நுட்பம் மற்றும் கல்வித் துணை வகைகள் இம்மாத காலப்பகுதியில் மாற்றமின்றி காணப்பட்டன.  

பொருளாதாரத்தின் அடிப்படைப் பணவீக்கத்தினைப் பிரதிபலிக்கின்ற தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் மையப் பணவீக்கம் ஆண்டிற்கு ஆண்டு மற்றும் ஆண்டுச் சராசரி அடிப்படை இரண்டிலும் 2016 ஒத்தோபரில் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2016 செத்தெம்பருடன் ஒப்பிடுகையில் மாற்றமின்றி 5.7 சதவீதமாக இருந்தது.

முழுவடிவம்

Published Date: 

Monday, November 21, 2016